Jallikattu - Guidelines Released



ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


Jallikattu Competition - Guidelines Released 


ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றவை.


இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,


1). மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக்கூடாது.


2). ஜல்லிக்கட்டின்போது காளைகளை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்.


3). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.


4). ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்ய வேண்டும்.


5). ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


6). அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. 


7). ஜல்லிக்கட்டு போட்டி முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in தளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும்.

- 

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசின் முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு கடிதம்


ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த சூழலில், 2025ம் ஆண்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதன் விபரம் பின்வறுமாறு:

* காளைகளுக்கு தேவையற்ற வலி மற்றும் கொடுமையைத் தவிர்த்து பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும்.

* மாவட்ட கலெக்டர் இடம், முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது.

* போட்டிகளில் பங்கேற்கும் விலங்குகளுக்கு தேவையற்ற துன்பம் தரக்கூடாது.

* ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் தேதிக்கு முன்பே அனைத்து ஏற்பாடுகளும் போட்டி நடக்கும் இடத்தில் ஏற்பாடு செய்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

* அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு, இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.