Pay Authorization Order for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024

 

2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 750 ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 6 மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - அரசுச்‌ செயலாளர்‌ கடிதம், நாள் : 28-11-2024


Issue of Pay Authorization for 6 months for 750 teaching posts in upgraded schools in the academic year 2017-2018 - Government Secretary's letter, dated : 28-11-2024


பள்ளிக் கல்வித் துறை, 

தலைமைச் செயலகம்,

சென்னை - 600006


கடித எண் (efile ) : 10976 / ப.க.5 (1)/ 2024-1, நாள் : 28-11-2024


 01-11-2024 முதல் 30-04-2025 வரை ஆறு மாதங்களுக்கு சம்பளம்‌ வழங்கும்‌ அதிகாரம்‌.


அனுப்புநர்‌

திருமதி. சோ.மதுமதி, இ.ஆ.ப.,

அரசுச்‌ செயலாளர்‌.


பெறுநர்‌

அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்கள்‌ /சார்‌ கருவூல அலுவலர்கள்‌.

சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌, சென்னை-01 / 08 / 35.

சம்பந்தப்பட்ட சம்பளக்‌ கணக்கு அலுவலர்கள்‌.


ஐயா,

பொருள்‌: பள்ளிக்கல்வி - 2017-2018-ஆம்‌ கல்வி ஆண்டில்‌ தரம்‌ உயர்த்தப்பட்ட 150 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்பட்டது - இப்பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது - அதனை தொடர்ந்து 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை பள்ளிக்‌ கல்வி இயக்குநரால்‌ விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது - தற்போது 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை மேலும்‌ ஆறு மாதங்களுக்கு ஊதியம்‌ வழங்கும்‌ அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல்‌ - தொடர்பாக.


பார்வை: 1. அரசாணை (நிலை) எண்‌.174, பள்ளிக்கல்வித்‌ [அ௧இ 1] துறை, நாள்‌. 18.07.2017.

2. அரசாணை (1டி) எண்‌. 39, பள்ளிக்கல்வித்‌1பக5(1)]துறை, நாள்‌. 23.02.2022.

3. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறை ந.க. எண்‌. 31574 /எல்‌/இ3/2021, நாள்‌. 01.08.2024.

4. பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.31574/எல்‌ 7/இ3/2021, நாள்‌.14.11.2024.


பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணைகளில்‌ 2017 - 2018-ஆம்‌ கல்வியாண்டில்‌ 150 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி நடுநிலைப்‌ பள்ளிகளை உயர்நிலைப்‌ பள்ளிகளாக தரம்‌  உயர்த்தப்பட்டு அவ்வாறு தரம்‌ உயர்த்தப்பட்ட 150 உயர்நிலைப்‌ பள்ளிகளுக்கு தலா ஒரு உயர்நிலைப்‌ பள்ளிக்கு 5 பட்டதாரி பணியிடங்கள்‌ வீதம்‌ 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவித்தும்‌ 150 உயர்நிலைப்‌ பள்ளிகளில்‌ உள்ள நடுநிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களை உயர்நிலைப்‌ பள்ளி தலைமை ஆசிரியர்‌ பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வழங்கப்பட்டது. பார்வை 2-இல்‌ காணும்‌ அரசாணையில்‌, பார்வை 1-இல்‌ காணும்‌ அரசாணையில்‌ தோற்றுவிக்கப்பட்ட 750 பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களுக்கு 01.08.2021 முதல்‌ 31.07.2024 வரை தொடர்‌ நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 3 -இல்‌ காணும்‌ பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.08.2024 முதல்‌ 31.10.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில்‌, 01.11.2024 முதல்‌ 30.04.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியக்‌ கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 4-இல்‌ காணும்‌ கடிதத்தில்‌ பள்ளிக்கல்வி இயக்குநர்‌ கடிதத்தில்‌ அரசை கேட்டுக்கொண்டுள்ளார்‌.