07-01-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-01-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மருந்து

குறள் எண்:945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்: உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் ஏதுமில்லை.


பழமொழி :
அதிகம் கேள், குறைவாகப் பேசு

Hear more, but talk less


இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.    

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :

எல்லோருடைய  வாழ்க்கையும்  வரலாறு ஆவதில்லை, வரலாறாய் ஆனவர்கள்  தனக்காக வாழ்ந்ததில்லை -- காமராஜர் 


பொது அறிவு :

1. உலக பரப்பளவில் இந்தியா எத்தனையாவது நாடாகும்?

விடை: ஏழாவது.        

2. அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிக்கை முதன்முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது?

விடை: 1947


English words & meanings :

Cycling.      -      மிதிவண்டி

Football        -      கால்பந்து


வேளாண்மையும் வாழ்வும் :

மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.


நீதிக்கதை

பூனையும் நரியும்

ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அவர்களை பிடிக்காது”, என்று நரி சொல்லியது . “ஆமா ஆமா அவர்களை எனக்கும்   சுத்தமா பிடிக்காது” என்று பூனையும் சொன்னது.

“ அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவர்களால் என்னை பிடிக்க முடியாது.ஏனென்றால் ,  அவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்”, என்று அந்தப் பூனை கேட்டது.

அதற்கு நரிசொல்லியது ,  "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.

“நிஜமாகவா”? என்று அந்தப் பூனை கேட்டது . அதற்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதில் ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க செய்யக் கூடியது” என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக் கொண்டிருக்கும் போது வேட்டை நாய்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது.

உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாற்றி கொள்ள போகிறேன்” என்று கூறி விட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாற்றி கொள்ள போகிறாய் என்று நானும்

பார்க்கிறேன்” என்று அந்த நரியிடம்  பூனை சொன்னது.

அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தியும் நரியால் அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.


இன்றைய செய்திகள்

07.01.2025

* உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும் நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

* சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

* ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி.

* மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.


Today's Headlines

* Avalanche recorded a minus 1 degree Celsius temperature as Ooty was gripped by a freezing cold.

* Chief Minister M.K. Stalin has announced that an individual or organization will be awarded one million US dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley Civilization script.

* Asia's 15th largest air show - Aero India 2025 - will be held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has said.

* China has said that the world's largest dam to be built across the Brahmaputra river will not affect India and Bangladesh.

* Hockey India League: Tamil Nadu Dragons defeat UP Rudras.

* Women's Cricket: India's team announced for the ODI series against Ireland.


Covai women ICT_போதிமரம்


2 children confirmed with HMPV infection in Chennai - will more children be affected? - Worried infection? - Explained by Family Physician Arunachalam




சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி - அதிகளவில் குழந்தைகளை தாக்குமா? - பதற்றப்படக் கூடிய தொற்றா? - குடும்ப நல மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்


2 children confirmed with HMPV infection in Chennai - will more children be affected? - Worried infection? - Explained by Family Physician Arunachalam




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak



 பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - HMPV வைரஸ் பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Public should not panic - Tamil Nadu Government press release regarding HMPV virus outbreak


HMP வைரஸ் புதியதல்ல; 2001இல் கண்டறியப்பட்ட வைரஸ்தான்


நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை


HMP வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது; இருவரின் உடல் நிலை சீராக உள்ளது


HMPV தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது


மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியவும்


- தமிழ்நாடு சுகாதாரத் துறை


செய்தி வெளியீடு எண்: 48 நாள்: 06.01.2025 

மனித மெட்டாப்நியூமோவைரஸ்-தமிழ்நாடு 

ஹ்யூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) ஒரு புதிய வைரஸ் அல்ல, இது 2001 இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஏற்கனவே புழக்கத்தில் உள்ள வைரஸ் ஆகும். 

HMPV நோய்த்தொற்றுகள் சுய-கட்டுப்பாட்டு மற்றும் போதுமான நீரேற்றம் மற்றும் ஓய்வு உட்பட அறிகுறி கவனிப்புடன் தீர்க்கப்படுகின்றன. 

HMPV க்கான சிகிச்சையானது அறிகுறி மற்றும் ஆதரவாக உள்ளது. 

தற்போது. சென்னையில் ஒருவரும் சேலத்தில் ஒருவரும் மனித மெட்டாப்நியூமோவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலையாக உள்ளனர் மற்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பொதுவான சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி எதுவும் இல்லை, ஜனவரி 6, 2025 அன்று, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய சுகாதார செயலாளர் தலைமையில் அனைத்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியது. கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 HMPV வைரஸ் நிலையானது மற்றும் பீதிக்கு ஒரு காரணம் அல்ல என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியது. தும்மல்/இருமல் போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவுதல், நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல் மற்றும் தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பது போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு போன்று HMPV தடுப்பு உள்ளது. HMPV பொதுவாக சுய-கட்டுப்படுத்தக்கூடியது மற்றும் நிர்வகிக்கக்கூடியது என்று பொதுமக்கள் உறுதியளிக்கிறார்கள். பீதி அடையத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு உறுதியுடன் உள்ளது மற்றும் தொடர்ந்து காய்ச்சல் போன்ற நோய்கள் (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய் (SARI) ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. 


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்



Press Release No: 48

Date: 06.01.2025

Human Metapneumovirus-Tamll Nadu

Human Metapneumovirus (HMPV) is not a new virus and it is an already circulating virus that was first identified in 2001. HMPV infections are self- limiting and resolve with symptomatic care, including adequate hydration and rest. The treatment for HMPV is symptomatic and supportive. Presently. 2 cases of Human Metapneumovirus has been reported, one in Chennai and one in Salem. They are stable and are being monitored.

There is no significant surge in common respiratory viral pathogens that has been detected in Tamil Nadu On January 6, 2025, the Ministry of Health and Family Welfare,Government of India, conducted a video conference with all State Health officials chaired by Union Health Secretary. The senior health officials from Tamil Nadu also participated in this meeting led by Additional Chief Secretary. Health. The Government of India clarified that the HMPV virus remains stable and is not a cause for concern to panic.

The prevention of HMPV is similar to any other respiratory infection such as, covering your mouth and nose while sneezing/coughing, washing hands, wearing masks in crowded places and reporting to the health facility, if need arises. The public is reassured that HMPV is typically self-limiting and manageable. There is no need to panic. The Government of Tamil Nadu remains committed and is continuously monitoring the influenza Like llnesses (ILI) and Severe Acute Respiratory lliness (SARI) closely.

ADDITIONAL CHIEF SECRETARY OF HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT 



HMPV virus infection confirmed in India too

 


இந்தியாவிலும் HMPV வைரஸ் தொற்று உறுதி


HMPV virus infection confirmed in India too


சீனாவில் தற்போது அதிகம் பரவி வரும் HMPV வைரஸ், தற்போது இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் 

3 மாதம் மற்றும் 8 மாதம் குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


அந்த குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


HMPV வைரஸ் என்பது Human MetaPneumoVirus என்பதின் சுருக்கம் ஆகும்; இதுவும் கொரோனா போலவே, மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும்; சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது


இருப்பினும், கொரோனா போல இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும், மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV வைரஸ் என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


The governor left the assembly without reading the governor's speech - what was the reason?



 ஆளுநர் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் - காரணம் என்ன?


The governor left the assembly without reading the governor's speech - what was the reason?






சட்டசபை விவகாரம்- விளக்கத்தை நீக்கிய ஆளுநர் மாளிகை


சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில்,  இன்று ஆளுநர் அவர்கள் பேரவைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்துக்கு அவமரியாதை ஏற்பட்டதால் அவையிலிருந்து வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆளுநர் மாளிகை விளக்கத்தை அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட நிலையில் அதனை ஆளுநர் மாளிகை நீக்கி உள்ளது.


   சட்டப்பேரவையை ஆளுநர் புறக்கணித்தது தொடர்பாக நீக்கப்பட்ட பதிவு திருத்தம் செய்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்து மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவு





Incidence of HMPV virus infection - Wearing face mask is mandatory in Karnataka

 HMPV வைரஸ் தொற்று பாதிப்பு - கர்நாடகாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்


Incidence of HMPV virus infection - Wearing face mask is mandatory in Karnataka



Syllabus and Class Details for January 2025 for Higher Education Career Guidance - SPD Proceedings, Dated : 06-01-2025

 


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - உயர்கல்வி வழிகாட்டி - 2024 - 2025ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் - 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான 2025 ஜனவரி மாத பாடத்திட்டம் மற்றும் வகுப்பு விவரங்கள் வழங்குதல் - சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 06-01-2025


Syllabus and Class Details for January 2025 for Higher Education Career Guidance Class for Class 9 to 12 Students - Proceedings of State Project Director, Dated : 06-01-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court



பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் - உச்சநீதிமன்றம் 


Donation of property can be canceled if children do not maintain parents - Supreme Court


வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் சொத்துகளின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை கவனித்துக் கொள்ளாத மகனிடம் இருந்து தான் வழங்கிய சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


மேலும் தான பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். 


இந்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்பதற்காக தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என்றும் அவ்வாறு கவனிக்க வேண்டும் என்று மனுதாரர் எந்த நிபந்தனையையும் பத்திரம் எழுதும்போது விதிக்கவில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


இதை எதிர்த்து அந்தப் பெண் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


 அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிக்குமார் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணைக்கு வந்தது.


அப்போது பேசிய நீதிபதிகள், ம.பி. உயர்நீதிமன்றம் சட்டத்தின்படி மட்டுமே ஆராய்ந்து தீர்ப்பு கொடுத்துள்ளது.


 ஆனால், மூத்த குடிமக்களின் உணர்வுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


 சொத்துகளை எழுதி கொடுத்த பிறகு பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காமல் போவது மிகவும் கவலை அளிக்கிறது.


இதுபோன்ற சூழ்நிலையில், பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்களுக்கு பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்யலாம். 


அந்த தான பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க 2007 சட்டத்தின் பிரிவு 23 [பெற்றோர் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் மூத்த குடிமக்கள்] சட்டத்தில் இடம் இருக்கிறது.


சொத்துகளை எழுதி வைத்தவருக்கு தேவையான அடிப்படை வசதிகள், உடல்ரீதியான தேவைகளை சொத்துகளை பெற்றவர் செய்ய வேண்டும். 


அப்படி செய்ய தவறினால், சொத்துகளை எழுதி கொடுத்தது செல்லாது என்று அறிவிக்க முடியும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.



Component Code & Description for Broadband Bill amount credited to SNA Account




SNA Accountல் வரவு வைக்கப்பட்டுள்ள Broadband கட்டணத் தொகைக்கான Component Code & Description



*BSNL Broadband Bill Amount:*


*SNA Account இல்*

➖➖➖➖➖➖

`Broadband கட்டணத் தொகை வந்துள்ளது`


*Primary Schools*

`Rs.4500 (1500×3 months)`


*Middle Schools*

`Rs.6000 (1500×4 months)`


*Component Code* 

`F.01.21.02`


*Description* 

*Recurring Components ICT and Digital Initiative upto Highest Class VIII...!!!*

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥



>>> முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Important update on Pongal Gift for Pensioners

 

 

IFHRMS

 ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு பற்றிய முக்கிய அறிவிப்பு


Dear All,


*Important update on Pongal Gift for Pensioners:*



*Step 1:*


04th  and 05th Jan-2025 adding pongal gift element for the eligible Pensioners from backend by SI team.


*Step 2:*


06th and 07th Jan-2025  DDOs to verify the added elements and amount using Pongal gift program by selecting report only option.


Note : Verify the Pensioners pongal gift report


Pension bill processing- Report - GTN Pongal gift Report - Enter the details - Continue- Submit - View output


 If any changes, make the correction in the Pension manager - Pension components-Dues and deduction- Effect date:01-01-2025- Change exist entry -element name: Pongal gift.


To add element, go to pension manager - Pension components-Dues and deduction- Effect date:01-01-2025- Create New entry-element name: Pongal gift. 


*Step 3:*


07-Jan-2025 - Night bulk supplementary run by SI team for Pongal gift. 


*Step 4:*


From 08-Jan-2025  onwards Treasury shall generate the pongal gift bills.


Thanks & Regards


Allocation of ₹ 14.60 Crore for Annual Day in Government Schools - DSE Proceedings

 


அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ₹ 14.60 கோடி நிதி ஒதுக்கீடு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Allocation of ₹ 14.60 Crore for Annual Day in Government Schools - DSE Proceedings


அனைத்து வகையான அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துவதற்கு தமிழக அரசு 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அனைத்து வகை பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது


2024-2025ஆம் கல்வியாண்டு - ஆண்டு விழா பணம் ஒதுக்கீடு - மாணவர் எண்ணிக்கையில் அடிப்படையில்


மாணவர்கள் எண்ணிக்கை 2000 க்கு மேல் இருந்தால் ரூபாய் 50,000, 

1001 லிருந்து 2000 வரை ரூபாய் 30,000, 

501 இல் இருந்து 1000 வரை ரூபாய் 15,000,

 மாணவர் எண்ணிக்கை 251 முதல் 500 வரை ரூபாய் 8000, 

மாணவர் எண்ணிக்கை 101 இல் இருந்து 250 வரை ரூபாய் 4000 

மாணவர் எண்ணிக்கை 100க்குள் இருந்தால் ரூபாய் 2500 

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும்.

 மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகள் பிப்ரவரி மாதத்திற்குள்ளாகவும், 

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மார்ச் 31க்கு உள்ளாகவும் ஆண்டு விழாக்களை நடத்தி முடிக்க வேண்டும்.





Major Trains in Southern Railway's New Schedule


தென்னக இரயில்வேயின் புதிய அட்டவணையில், முக்கிய இரயில்கள்


Major Trains in Southern Railway's New Schedule


சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் நேரம் - 01.01.2025 முதல்...


20627 நாகர்கோவில் வந்தே பாரத் (புதன் தவிர) காலை 5 மணி.


22671 மதுரை தேஜஸ் காலை 6.00 மணி.


16127 குருவாயூர் காலை 10.20 மணி.


12635 மதுரை வைகை மதியம் 1.45 மணி.


20665 நெல்லை வந்தே பாரத் (செவ்வாய் தவிர) மதியம் 2.45 மணி.


12605 பல்லவன் மதியம் 3.40 மணி.


20605 செந்தூர் மாலை 4.00 மணி.


12642 திருக்குறள் - கன்னியாகுமரி (வாராந்திர Sun & Tue) மாலை 4.10 மணி. 


12652 மதுரை - சம்பர்க் கிராந்தி (வாராந்திர Wed & Fri) மாலை 4.10 மணி.


16101 கொல்லம் மாலை 5.00 மணி.


12633 கன்னியாகுமரி மாலை 5.20 மணி.


22661 இராமேஸ்வரம் மாலை 5.45 மணி.


16751 இராமேஸ்வரம் மாலை 7.15 மணி.


12693 முத்து நகர் இரவு 7.30 மணி.


20635 அனந்தபுரி இரவு 7.50 மணி.


12661 பொதிகை இரவு 8.10 மணி.


12631 நெல்லை இரவு 8.40 மணி


12665 கன்னியாகுமரி (வாராந்திர Tue) இரவு 9.05 மணி.


12637 பாண்டியன் இரவு 9.40 மணி.


12653 மலைக் கோட்டை இரவு 11.30 மணி.


Lives life in pension

 


ஓய்வூதியத்தில் வாழ்கிறது ஒரு உயிர் - கட்டுரை


Lives life in pension



*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி,"* என்கிறார் முதியோர் இல்லத்தில் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டி ருக்கும்,*ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி.


இன்று பெற்ற பிள்ளைகள், உற்றார் உறவினர் கவனிப்பு இல்லாமல், வீட்டின் ஒரு மூலையில் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு முடங்கி கிடக்கும் முதியவர்கள் ஏராளம்.


முதியோர் இல்லங்களில் லட்சக்கணக்கான முதியவர்கள், மருத்தை விட கசப்பான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, கண்ணீருடன் வாழ்ந்து வருகின்றனர்.


தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்பதற்காக, தன் வாழ்நாளில் சம்பாதித்த பணம், சொத்து முழுவதையும் பிள்ளைகளின் படிப்புக்காகவும், வேலைக் காகவும் கொடுத்து விட்டு, அவர்களின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழ்ந்த ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி, எந்த ஆதரவும் இல்லாமல், இப்போது முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.


*"ஓய்வூதியம் மட் டும் இல்லை என்றால் நான் எப்பவோ செத் துப் போயிருப்பேன் தம்பி,"* என்ற அவர் தொடர்ந்து பேச துவங்கினார்.


நான் சாதாரண கிளார்க்காக அரசு வேலையில் சேர்ந்து, பச்சை இங்கில் கையெழுத்து போடும் அதிகாரியாக ரிடையர் ஆனேன். என் சர்வீஸ் காலத்தில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கியதில்லை. அதனால் என் கூட வேலை செய்தவர்களுக்கு பிடிக்காது, என் சொந்த பந்தங்களுக்கும், நண்பர்க ளுக்கும் கூட என்னை பிடிக்காது.


நேர்மையாக வாங்கிய சம்பளத்தில்தான், என் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைத்தேன்.


படிப்புக்காக வட்டிக்கு கடன் வாங்கி, அதை கண்ணியமாக திருப்பி கொடுத்து இருக்கிறேன்.


மகளை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்தேன். மகன் வெளி நாட்டில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கிறான். வசதியான இடத்தில் அவனே பெண் பார்த்து கல்யாணம் செய்து கொண்டான்.


"அப்புறம் ஏன் ஹோமில் இருக்கீங்க...?"


"என் மனைவி இருக்கும் வரைக்கும் என் வீட்டில்தான் இருந்தேன். அவள் இறந்ததுக்கு அப்புறம் தனியாக இருந்தேன். நான் இருந்த வீடு, நகரத்தின் மையப்ப குதியில் இருந்ததால், ரூ.80 லட்சத்துக்கு விலைக்கு கேட்டார்கள்.


மகன் வீட்டை விற்று விட்டு, என் கூட ஆஸ்திரேலியாவுக்கு வந்து விடுங்கள் என்றான். சந்தோஷமாக வீட்டை விற்று, மகன் கையில் பணத்தை கொடுத்தேன். அவன் என் கையில் ஐந்து லட்சத்தை கொடுத்து விட்டு, 'இந்த ஹோமில் இருங்கள், நான் இரண்டு மாதத்துக்குள் விசா வாங்கி வந்து உங்களை கூட்டிக்கொண்டு போகிறேன்' என்று போனான்.


இன்றோடு எட்டு வருஷமாகி விட்டது. அவன் வந்து கூட்டிக்கொண்டு போக வில்லை. எப்பவாவது போன் செய்து இரண்டு நிமிஷம் பேசுவான்.


கூட்டி போகாததுக்கு ஏதேதோ காரணங்கள் சொன்னான். பிறகு கொரோனா வந்ததை, இறுதி காரணமாக சொன்னான். அதன் பிறகு போன் கூட செய்வதில்லை. பம்பாயில் இருக்கும் மகள் கூட போக விருப்பம் இல்லை.


அரசு கொடுக்கும் ஓய்வூதியம் மட்டும் இல்லை என்றால், நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன் தம்பி. ஓய்வூதியத்தில்தான் இந்த உயிர் வாழ்கிறது.


சொல்லி முடித்த முதியவர் *குலுங்கி, குலுங்கி அழ ஆரம்பித்தார்*. அவரை தேற்றும் வழி தெரியாமல்,நாம் விழித்து நின்றோம்.



06-01-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால் பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.

பொருள்:

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.


பழமொழி :
அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.    

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.


பொன்மொழி :

ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் - சுவாமி விவேகானந்தர்


பொது அறிவு :

1. குழந்தைகள் உதவி எண் என்ன?

விடை : 1098.         

2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்?

விடை: விரல் நகம்


English words & meanings :

Climbing.       -      ஏறுதல்

Cricket.          -    மட்டைப்பந்து


வேளாண்மையும் வாழ்வும் :

நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்


ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்

கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.


கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்

கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.


நீதிக்கதை

பூனையின் புதையல் வேட்டை

முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.

எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.

புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம்  பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.

அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.

அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.

உதவிக்காக அந்தப்  பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது.  அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.

பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.


இன்றைய செய்திகள்

06.01.2025

* மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது: மாவட்ட நிர்வாகம் தகவல்.

* விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு.

* மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளி: மாநில கல்வி அமைச்சர் பாராட்டு.

* அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

* ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்சின் முல்லர்.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.


Today's Headlines

* Online booking for bulls and athletes participating in the famous Avaniyapuram, Palamedu and Alanganallur jallikattu in Madurai district begins today: District administration information.

* Karamani lentil seeds that started sprouting in space: ISRO announces that the experiment is a success.

* Tribal village school in Maharashtra that operates 12 hours a day, 365 days a year: State Education Minister praises.

* 6 people of Indian origin took oath as MPs in the US House of Representatives.

* Hong Kong Open tennis tournament; Francine Muller won the champion title.

* Brisbane International tennis tournament; Belarusian player Aryna Sabalenka won the champion title.


Covai women ICT_போதிமரம்


Husband should be given leave to look after wife during maternity - High Court


மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம்


Husband should be given leave to look after wife during maternity - High Court


மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க கணவருக்கும் விடுமுறை (Paternity Leave) வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் மனைவி கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலத்தில் மனைவியுடன் இருப்பதற்காக எனக்கு மே 1 முதல் 90 நாட்கள் விடுமுறை கேட்டு உயர் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்தேன். எனக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி எனக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டது.


இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், என் விடுமுறை விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட்டது. இதையடுத்து மே 1 முதல் 30 நாள் எனக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மே 31-ல் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதனால் என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பினேன். இதனை ஏற்க மறுத்து நடத்தை விதிகளை மீறியதாக எனக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனுவை விசாரித்து நீதிபதி எல்.விக்டோரியாகவுரி பிறப்பித்த உத்தரவு: இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் மனைவியை உடனிருந்து கவனிக்க தந்தைக்கு விடுமுறை வழங்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக பேசப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது தந்தையும் உடனிருப்பது அவசியமானது. குழந்தை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உண்டு.


பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாயுடன் தந்தைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில் மனைவியின் மகப்பேறு காலத்தில் தந்தைக்கு விடுமுறை அளிப்பதற்கான தனிச் சட்டம் இல்லை. இருப்பினும் மத்திய குடிமைப் பணிகள் (விடுமுறை) விதியில் தந்தையருக்கான விடுப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மகப்பேறு காலத்தில் மனைவியுடன் கணவர் இருப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் பொறுப்புள்ள தந்தையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



 ஆண்களுக்கு அவர்களின் மனைவி பிரசவத்திற்கு முன் அல்லது பின் 15 நாட்கள் உண்டு


அரசு கடித எண் 11618/ ஜி2/ 2022, நாள் 15-12-2022 - கல்லூரி கல்வித்துறை



>>> தந்தையர் விடுப்பு - தகவல் அறியும் உரிமை சட்ட கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Procedure to Apply for Leave through Kalanjiyam Mobile App

 

KALANJIYAM - APPLY LEAVE


♻️ 01-01-2025 முதல் அனைத்துவகை ஆசிரியர்களும்


▪️CL

▪️RL

▪️EL

▪️ML

போன்ற விடுப்புகளை களஞ்சியம் கைபேசி செயலி வழியாக விண்ணப்பிப்பதற்கான வழிமுறை


Procedure to Apply for Leave through Kalanjiyam Mobile App


➡️குறிப்பு:


1️⃣ CL விண்ணப்பிக்கும் போது அரை நாள் தேர்வு செய்பவர்கள் காலை / மதியம் என தேர்வு செய்ய தேவையில்லை.


▪️ Half day என மட்டும் தேர்வு செய்தால் தற்போது போதுமானது.


2️⃣ EL விண்ணப்பிப்பவர்கள் leave reason-யில் others select செய்து காரணத்தை பதிவு செய்யவும்.


▪️ Leave Travel Concession - பணிமாறுதலில் ஒரு பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறியவர்களுக்கு மட்டுமே..


3️⃣ Approval group-யில் HM அல்லது BEO இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும்.


▪️ உங்களுக்கு எது enable -ஆக உள்ளது என பார்த்து தேர்வு செய்யவும்.


(இரண்டுமே enable-ஆகவும் இருக்கலாம்)


GST notice for panipuri trader whose annual income exceeds ₹ 40 lakh - income tax officer's summons goes viral



ஆண்டு வருமானம் ₹ 40 லட்சத்தை தாண்டிய பானிபூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ் - வைரலாகும் வருமான வரி அலுவலரின் சம்மன்


GST notice for panipuri trader whose annual income exceeds ₹ 40 lakh - income tax officer's summons goes viral


தமிழ்நாட்டைச் சேர்ந்த பானி பூரி வியாபாரி ஒருவருக்கு, ஜிஎஸ்டி பதிவுக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய அரசு. 


பானி பூரி விற்பனையின் மூலம் அவரது ஆண்டு வருமானம் ₹ 40 லட்சத்தை தாண்டுவதால், அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை கட்டாயமாக்கியுள்ளது


ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் விற்பனையாளரின் பரிவர்த்தனைகளை கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி விதிப்பு


A GST notice sent to a pani puri seller in Tamil Nadu has gone viral, sparking widespread discussion online.


தமிழகத்தில் பானி பூரி விற்பனையாளருக்கு அனுப்பப்பட்ட ஜிஎஸ்டி நோட்டீஸ் வைரலாகி, இணையத்தில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளது. 


2023-24 ஆம் ஆண்டில் விற்பனையாளரால் பெறப்பட்ட ₹40 லட்சத்தை ஆன்லைனில் செலுத்தியதை இந்த அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது, இது பலரை மகிழ்விக்கிறது மற்றும் சிலர் தங்கள் தொழில் தேர்வுகளை மறுபரிசீலனை செய்கிறது. 


தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஆன்லைனில் பணம் பெற்று ரூ.40 லட்சம் சம்பாதித்த பிறகு ஜிஎஸ்டி அறிவிப்பைப் பெறுகிறார் 


தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவர், ஓராண்டில் ஆன்லைன் மூலம் ரூ.40 லட்சம் சம்பாதித்த பிறகு ஜிஎஸ்டி அறிவிப்பைப் பெற்றார்.  ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், டிசம்பர் 17, 2024 தேதியிட்ட அறிவிப்பு, இந்தப் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கோருகிறது. இந்த வழக்கு தெருவோர வியாபாரிகளை டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாற்றுவதையும் அதன் தாக்கங்களையும் எடுத்துக்காட்டுகிறது. 


 இந்த எதிர்பாராத நிகழ்வு பல்வேறு சமூக ஊடக தளங்களில் பல்வேறு விவாதங்களையும் பெருங்களிப்புடைய எதிர்வினைகளையும் தூண்டியுள்ளது. 


தெரு உணவு விற்பனையாளர்கள் பாரம்பரியமாக முறைசாரா துறையில் இருந்து வருகின்றனர், எனவே அவர்கள் சிறு அளவிலான வணிகத்தின் காரணமாக வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், Razorpay மற்றும் PhonePe போன்ற டிஜிட்டல் கட்டண தளங்களின் அதிகரிப்புடன், இந்த விற்பனையாளர்கள் பலர் இப்போது ஸ்கேனரின் கீழ் உள்ளனர். தமிழ்நாடு பானிபூரி விற்பனையாளரின் வழக்கு ஒரு சிறந்த உதாரணம், ஒரு வருடத்தில் அவரது UPI பரிவர்த்தனைகள் 40 லட்சமாக உயர்ந்தது, இது அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது.


சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த அறிவிப்பு,  சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் 70வது பிரிவின் கீழ் டிசம்பர் 17, 2024 தேதியிட்ட இந்த அறிவிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் கோருகிறது. குறிப்பாக, 2023-24 நிதியாண்டில் ஈட்டப்பட்ட கணிசமான தொகையில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அறிவிப்புக்கான தகவல்கள் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலம் சேகரிக்கப்பட்டன, அங்கு விற்பனையாளர் தனது  தின்பண்டங்களுக்கு பணம் பெற்றுள்ளார். இந்த ஜிஎஸ்டி அறிவிப்பு சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சிலர் தங்கள் கார்ப்பரேட் வேலைகளை விட்டுவிட்டு தெருக்களில் பானிபூரி விற்கப் போவதாகக் கூறியதால், மக்கள் அதிர்ச்சியடைந்து மகிழ்ந்தனர். UPI பேமெண்ட்கள் இந்தியர்களிடையே பிரபலமடைந்து வருவதால், பல தசாப்தங்களாக பணத்தை ஏற்றுக்கொண்ட பல தெரு உணவு விற்பனையாளர்கள் டிஜிட்டல் பேமெண்ட்டுக்கு மாறி வருகின்றனர். எனவே 

அடுத்த முறை உங்கள் உள்ளூர் விற்பனையாளரிடம் பானி பூரிகளை உண்ணும் போது, ​​அவரிடம் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள், மேலும் நீங்கள் அவரிடம் நீங்கள் இன்னும் ஜிஎஸ்டிக்கு பதிவு செய்துள்ளீர்களா?" எனக் கேட்டு பதிலைப் பெறலாம்! பானிபூரி விற்பனை ரூ.40 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், யாருக்கு தெரியும்? உங்கள் அருகிலுள்ள 'பானி பூரி வாலே பையா' நகரத்தின் அடுத்த பெரிய தொழில்முனைவோராக இருக்கலாம்!





The notice highlights an online payment of ₹40 lakh received by the vendor during 2023-24, leaving many amused and some reconsidering their career choices.


Panipuri seller from Tamil Nadu receives GST notice after earning Rs 40 lakh through online payments


A panipuri vendor from Tamil Nadu received a GST notice after earning Rs 40 lakh through online payments in a year. The notice, dated December 17, 2024, under the Tamil Nadu GST Act, seeks clarification on these transactions. The case highlights the shift of street vendors to digital payments and its implications.


Recently, a panipuri seller from Tamil Nadu received a GST notice after earning an impressive Rs 40 lakh through online payments. This unexpected turn of events has sparked various discussions and hilarious reactions on various social media platforms.


Street food vendors have traditionally been in the informal sector, hence they have usually been exempted from paying taxes because of their small-scale business. However, with the increase in digital payment platforms such as Razorpay and PhonePe, many of these vendors are under the scanner now. The case of the Tamil Nadu panipuri vendor is a classic example, as his UPI transactions went up to Rs 40 lakh in one year, which attracted the attention of the authorities.


The notice, which is going viral on social media, is dated December 17, 2024, under the Tamil Nadu Goods and Services Tax Act and Section 70 of the Central GST Act. This notice seeks clarification on transactions made over the past three years. Specifically, there is a major focus on the substantial amount that was earned during the 2023-24 financial year. The information for this notice was gathered through digital payment platforms where the vendor accepted payments for his popular snacks.


This GST notice has sparked many reactions on social media. People were shocked and amused by the situation, as some even said they would leave their corporate jobs to sell panipuri on the streets. As UPI payments are getting popular among Indians, many street food vendors, who have been accepting cash for decades, are switching to digital payments.


So the next time you are enjoying pani puris at your local vendor, take some time to talk to him and you may also like to tease him "So, have you registered for GST yet?" You might just get a laugh or a cheeky reply about their newfound fame! With panipuri sales soaring to Rs 40 lakh, who knows? Your neighborhood 'pani puri wale bhaiya' might be the next big entrepreneur in town!


Tigress with 5 cubs in Tadoba, Maharashtra

 


மகாராஷ்டிர மாநிலம் தடோபாவில் 5 குட்டிகளுடன் அபூர்வமாக காணப்பட்ட புலி


 தடோபா தேசிய பூங்காவில் 5 குட்டிகளுடன் புலி இருக்கும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார் 



ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களுக்கான அசாதாரண தருணங்களைக் கொண்டுள்ளது. 


மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சனிக்கிழமை (ஜனவரி 4) மகாராஷ்டிராவில் உள்ள தடோபா தேசிய பூங்காவில் 'வாழ்நாளில் ஒருமுறை காணக்கூடிய' வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது வனவிலங்கு ஆர்வலர்களுக்கான அசாதாரண தருணங்களைக் கொண்டுள்ளது. 


கிளிப்பில், மாநிலத்தின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தில் ஐந்து குட்டிகள் தங்கள் தாயின் பின்னால் நடப்பதைக் காணலாம். 


சமூக ஊடக தளமான X இல் வீடியோவைப் பகிரும் போது, ​​மஹிந்திரா இது தனக்கு "சனிக்கிழமை கவச நாற்காலி பார்வை" என்று கூறினார். அமைதியாக இருக்க வேண்டிய மக்கள் ஏன் இவ்வளவு பேசுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 


"அற்புதம். தடோபா தேசிய பூங்காவில் 5 குட்டிகள் தங்கள் தாயுடன். இந்த பார்வையாளர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறை காணும் காட்சி. எனக்கு ஒரு சனிக்கிழமை நாற்காலி... (நான் சிறிது காலமாக சஃபாரியில் இல்லை, ஆனால் கடைசியாக நான் சென்ற பொழுது, முடிந்தவரை அமைதியாக இருக்கச் சொன்னார்கள், ஏன் இவ்வளவு உரையாடல்கள்?)," என்று அவர் எழுதினார். 


இந்த வீடியோ X இல் வைரலாகி, சுமார் 90,000 பார்வைகளைப் பெற்றுள்ளது. 





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



Rarest of the rare sighting of tigress with 5 cubs in Tadoba, Maharashtra State


'Saturday armchair sighting': Anand Mahindra shares video of tiger with 5 cubs at Tadoba National Park


The video shared by Anand Mahindra features extraordinary moments for wildlife enthusiasts.


Anand Mahindra, Chairman of Mahindra Group, on Saturday (January 4) shared a video on social media featuring a ‘once-in-a-lifetime sighting’ at the Tadoba National Park in Maharashtra.




It features extraordinary moments for wildlife enthusiasts. In the clip, five cubs are seen walking behind their mother at the largest tiger reserve in the state. While sharing the video on social media platform X, Mahindra said it was "a Saturday armchair sighting" for him. He also questioned why people were chattering so much as they should remain silent.


"Magnificent. 5 cubs with their mother at Tadoba National Park. A once-in-a-lifetime sighting for these visitors. A Saturday armchair sighting for me… (I haven’t been on a safari for a while, but the last time I went, we were told to be as silent as possible. Why so much chatter??)," he wrote.


The video has since gone viral on X, garnering around 90,000 views.



Anna University Student Case Investigation - Tamil Nadu Police Report



அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணை - தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


Anna University Student Case Investigation - Tamil Nadu Police Press Release 


அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் என பொது வெளியில் தற்போது பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் தவறானவை, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாதவை.


விசாரணை தொடர்பாக ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட வேண்டாம். இவ்வாறான தவறான தகவல்கள், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதுடன், புலன்விசாரணையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கக் கூடும்”


- தமிழ்நாடு காவல்துறை அறிக்கை


January 04 ,2025    


An all women Special Investigation Team (SIT) has been constituted to investigate the cases in connection with sexual assault of a girl student at Anna University Chennai - Tamil Version


 Press Release No:33 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





Monthly Internet Amount Released for Elementary and Middle Schools - CEO Proceedings



தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கான மாதாந்திர இணைய சேவைக்‌ கட்டணம்‌ விடுவிப்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


Monthly Internet Service Fee Released for Elementary and Middle Schools - Proceedings of Chief Education Officer



முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம்‌ அவர்களின்‌ செயல்முறைகள்‌

முன்னிலை;திரு.அ.முனிராஜ்‌, எம்‌.ஏ.பி.எட்‌.எம்‌.பில்‌.,

ந.க.எண்‌.873/1எஈ/ஒபக/2024 நாள்‌:02.01.2025


பொருள்‌: ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, கிருஷ்ணகிரி மாவட்டம்‌ - பள்ளிகளுக்கான இணைய சேவை - மாதாந்திர சேவைக்‌ கட்டணம்‌ - அனைத்து தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு வட்டார வளமையம்‌ மூலம்‌ தொகை விடுவிக்கப்பட்டுள்ளது - தகவல்‌ அளித்தல்‌ - சார்பு.


பார்வை:    1.மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, சென்னை-6 அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 4929/A7/ ICT/ Rec/SS/ 2023 நாள்‌:21.02.2024.

2மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, சென்னை-6 அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 4929/A7/ ICT/ Rec/SS/ 2023 நாள்‌:15.03.2024.

3.மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, சென்னை-6 அவர்களின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.51/61, B3 / BRC -CRC/ SS/2023 நாள்‌:09.05.2024.

4மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி,சென்னை-6          அவர்களின்‌  செயல்முறைகள்‌ ந.க.எண்‌.1461/ lnternet/ SS/ 2024, நாள்‌:30.04.2024.

5.மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, சென்னை-6          அவர்களின்‌  செயல்முறைகள்‌ ந.க.எண்‌. 1535/ lnternet/ SS/ 2024 நாள்‌:02.09.2024.

6.இயக்குநர்‌, மாநிலக்‌ கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌,    சென்னை-6    அவர்களின்‌.    செயல்முறைகள்‌ ந.க.எண்‌.827218/E2/2024 நாள்‌: 09.2024.

7.PAB Minutes 2024- 25, F.No.91l2O24-1S.6 நாள்: 12.04.2024.

8.மாநிலத்‌ திட்ட இயக்குநர்‌, ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி, சென்னை           அவர்களின்‌  செயல்முறைகள்‌: ந.க.எண்‌.1468/611(60/ஒபக/2024 நாள்‌:27.12.2024.


பார்வை-1-ன்படி, அரசு தொடக்கப்‌ பள்ளிகளுக்கு ஜனவரி 2024 மற்றும்‌ பிப்ரவரி 2024 ஆகிய மாதங்களுக்கும்‌, நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு ஜனவரி 2024 மாதத்திற்கும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறை வாயிலாக அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு மாதம்‌ ₹ 1500/- வீதம்‌ விடுவிக்கப்பட்டுள்ளது எனவும்‌, பார்வை-2- ன்படி, அரசு தொடக்கப்‌ பள்ளிகளுக்கு மார்ச்‌ 2024 மாதத்திற்கு மட்டும்‌, நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு பிப்ரவரி மற்றும்‌ மார்ச்‌ 2024 மாதத்திற்கும்‌ தொடக்கக்‌ கல்வித்‌ துறை வாயிலாக அரசு தொடக்க மற்றும்‌ நடுநிலைப்‌ பள்ளிகளுக்கு மாதம்‌ ₹ 1500/- வீதம்‌ விடுவிக்கப்பட்டுள்ளது.



>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...