மாணவிக்கு மாணவர்கள் பாலியல் தொந்தரவு - குற்றம் செய்யாத ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? - ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்
Female Student sexual harassment by students - What is the reason why non-criminal teachers/headmaster has been arrested under POCSO Act? - Terms that Teachers / Head Teachers should be aware of
7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததன் விளைவாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களான ஒரு பெண் ஆசிரியர், ஒரு ஆண் ஆசிரியர் என குற்றம் செய்யாத மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன?
POCSO சட்டம் என்ன சொல்கிறது
POCSO என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வகையிலும் மட்டுமே உருவாக்கப்பட வில்லை.
அதில் குற்றம் செய்தவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் தண்டனை வழங்கும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.
📌குறிப்பாக ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்:
1)போக்சோ சட்டம் பிரிவு 19 மற்றும் 21 என்றால் என்ன?
1)19(1)-இன்படி,
பாலியல்
ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து தெரிந்த எவரும் காவல்துறையிடம் நியாயமான நேரத்தில்
புகார் அளிக்க வேண்டும். இது கட்டாயப் புகாரளிக்கும் தேவையாகும், மேலும் புகாரளிக்கத் தவறிய எந்தவொரு நபரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெறும் அளவுக்கு குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.
📌 மேற்கண்ட பிரிவில் கல்வி நிறுவனங்களின் நிலை :-
ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்திருந்த எவரும் (பள்ளி அளவில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அடங்குவர்)
📌பிரிவு 19 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் 24 மணி நேரத்தில் குற்றத்தை பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
குற்றத்தைப் பதிவு செய்யத் தவறியவருக்கு
ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய இரண்டு வகையான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இது போன்று நிகழ்வுகளில் இருந்து ஆசிரியர்கள் தப்பிக்க செய்ய வேண்டியவைகள்:-
1) பாடம் நடத்துவது மட்டும் நமது வேலை என்று ஒதுங்கும் சூழல் தற்போது இல்லை, மாணவர் / மாணவிகளுக்கு பள்ளி மற்றும் வெளியில் என எங்கு பிரச்சனை நடந்தாலும் அவை நமது கவனத்திற்கு வருகின்ற நிலையில் மாணவிகள்/ மாணவர்கள் சொல்லும் தகவலை ஆசிரியர்கள் உடனேயே தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.
2) குறிப்பாக பாலியல் சார்ந்த புகார்களை மாணவர்கள் உங்களிடத்தில் கூறியவுடன் , அந்த மாணவர் / மாணவியையும் உடன் வைத்துக் கொண்டு குற்றம் நடந்து உள்ளதாக மாணவர் கூறுவதாக குறிப்பிட்டு தலைமை ஆசிரியரிடம் கடிதம் மூலமாக தகவல் கொடுத்து விடவும்.
கடிதத்தை நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும்.
3) தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வட்டாரக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல்
ந.க.எண் போட்டு கடிதம் ஒன்றை அனுப்பி விடவும்.
4) தலைமை ஆசிரியர் PTA & SMC க்கு தகவல் மட்டும் கொடுத்து விடவும். அவர்கள் தீர்த்து வைப்பதாக கூறினாலும்
உயர் அலுவலர் / CEO வுக்கு சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தெளிவாக கூறி விடவும்.
5) எக்காரணம் கொண்டும் PTA, SMC, கட்சி பிரமுகர்களுடன் இணைந்து சமாதான பஞ்சாயத்துகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம்.
6) முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதலுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து விடவும்.
விழிப்புணர்வுக்காக மட்டுமே இத்தகவல் பகிரப்படுகிறது.
POCSO தொடர்பான அரசின் வழிகாட்டுதல் / வரைவுத் திட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பின்பற்றவும்.