Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys




 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தை - சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை மீட்ட அதிகாரிகள்


Father sells 2 children to duck farm for Rs. 80,000 - Authorities rescue boys


மன்னார்குடி அருகே வாத்துப் பண்ணையில் சிறுவர்கள் வேலை செய்து வருவதாக, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு வந்த புகாரை அடுத்து, மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த இரண்டு சிறுவர்களை மீட்டனர்.இச்சம்பவம் தொடர்பாக வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.போலீசார் விசாரணையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் இயங்கி வரும் வாத்துப் பண்ணையில் இரண்டு சிறுவர்கள் வேலை பார்த்து வருவதாக 1098 என்கிற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன் மேற்பார்வையாளர் சுரேஷ் மற்றும் மன்னார்குடி உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.


இந்த விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போடூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், மன்னார்குடி அருகே ராமாபுரம் பகுதியில் சொந்தமான வாத்துப் பண்ணை வைத்துள்ளார். இந்த நிலையில், இப்பண்ணையில் வேலை செய்வதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணி என்பவர், தனது 13 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு மகன்களை ரூ.80 ஆயிரத்துற்கு விஜயகுமாரிடம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து, இரண்டு சிறுவர்களையும் மன்னார்க்குடி காவல் நிலைய போலீசார் மீட்டனர். தொடர்ந்து, வாத்துப் பண்ணை உரிமையாளரான ஆந்திராவைச் சேர்ந்த விஜயகுமார் மீது, கொத்தடிமை தடைச் சட்ட பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், 80 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.சிறுவர்களை மீட்ட போலீசார் அவர்களுக்கு உடை மற்றும் உணவளித்து திருவாரூர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் தங்க தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து, பெற்றோர்களிடம் சிறுவர்களை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.