போப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Pope's health improved
இது குறித்து வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் போப் பிரான்சிஸ் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக பிரச்னை சரியாகி வருகிறது. தற்போது நுரையீரல் வீக்கம் சரியாக வருகிறது.
இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனைகள் மூலம் அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அவர் காபி குடித்து, ஓய்வெடுத்துள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ் தொடர்ந்து குணமடைந்து வந்த நிலையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, உடல்நிலை மோசமடைந்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று காலை உணவாக அவர் காபி குடித்ததாகவும், பிறகு செய்தித்தாள் படித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாள்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
அவரது நோய் பாதிப்பு முழுதாக குணமடையவில்லை, எனவே, அவர் அபாயநிலையை தாண்டவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 14-ஆம் தேதி முதல் ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர் சீராக சுவாசித்து வருகிறார். அவருக்கு ஆஸ்துமா தொடா்பான புதிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குணமடைந்து வருவதால் போப் மருத்துவமனை அறையில் வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.