மும்மொழிக் கொள்கை - பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த பாஜகவினர் 5 பேர் கைது
Three-language policy - 5 BJP members arrested for forcibly making school students sign
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சென்னை காரப்பாக்கத்தில் மாணவர்களுக்கு பிஸ்கெட் கொடுத்து கையெழுத்து வாங்கும் பாஜகவினரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை OMR சாலை, காரப்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகில் மாநில ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் தலைமையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் சக்கரவர்த்தி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சரியாக பள்ளி விடும் நேரத்தில் நிகழ்ச்சி துவங்கப்பட்டநிலையில், அப்பக்கம் வழியாக வரும் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்த பாஜகவினர் மாணவர்களை கையெழுத்திடும்படி கூறினர். அப்பொழுது சில மாணவர்கள் TVK என கத்திவிட்டு கையெழுத்திடாமல் சென்றனர். அதை தொடர்ந்து சில பள்ளி மாணவ, மாணவிகள் பலகையில் கையெழுத்திட்டு சென்றனர், கையெழுத்திட்ட மாணவர்களுக்கு ஆன்மீக பிரிவு துணைத் தலைவர் லியோ சுந்தரம் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினார்.
சென்னை காரப்பாக்கம் பகுதியில் பாஜகவின் கையெழுத்து இயக்கத்தில், அரசுப் பள்ளி மாணவர்களை வலுக்கட்டாயமாக கையெழுத்து இடச்செய்த விவகாரத்தில் பாஜகவினர் 5 பேர் கைது
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரில், கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜி.சூர்யா, சுந்தரம், கோடீஸ்வரன், மோகன் மற்றும் அன்பரசு ஆகிய 5 பேரை கைது செய்தனர்.