06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய பள்ளிக்கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்களுடன் இணைந்து, மாநிலம் முழுவதும் இருந்து தேர்வான
🖤 அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் 100 பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியுடன் பாராட்டுச் சான்று - கேடயத்துடன்
*அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது*
❤️ கற்றல் - கற்பித்தல் உள்ளிட்ட பன்முக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் 76 பள்ளிகளுக்கு *பேராசியர் அன்பழகன் விருது*
💙 கற்றல் அடைவுக்கான 100 நாள் சவாலில் பங்கேற்ற 4,552 தொடக்கப் பள்ளிகளுக்கு சிறப்பு விருது ஆகியவற்றை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களிடம் வழங்கி, வாழ்த்தி மகிழ்ந்தோம்.
காவிரி கரைபுரண்டு ஓடும் திருச்சி மாநகரில் நம் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கமித்த முப்பெரும் விழா இனிய அனுபவமாக அமைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.