சாலையில் ஒளிரும் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி வருகிறது?



சாலையில் ஒளிரும் சிக்னல் விளக்குகளுக்கு மின்சக்தி எப்படி கிடைக்கிறது?


அதன் பெயர் ரோடு ஸ்டட் என்பார்கள். அது இருவகையில் வேலை செய்யும்.


இரவில் வரும் வாகனங்களின் முகப்பு வெளிச்சங்களை வாங்கி எதிரொளிக்கும் வகையில் ரிஃப்ளெக்டர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருக்கும்.


அதே சமயத்தில் பகல் நேரங்களில் சூரிய வெளிச்சத்தினை கிரகித்து அதனுள் பொதியப்பட்டுள்ள சிறு சோலார் செல்களில் சக்தியை வாங்கி லித்தியம் வகை பேட்டரியில் மின்சாரத்தை சேகரித்துக் கொள்ளும்.


இருள் கவிய துவங்கியதும் அதில் இருக்கும் லைட் டிபண்டிங் ரெசிஸ்டர் (LIGHT DEPENDING RESISTOR) என்ற வெளிச்சத்தை உணரும் சென்சார் வேலை செய்து மிகக் குறைந்த மின்சாரத்தை உபயோகித்து அதிக வெளிச்சத்தை வெளியே விடும் லைட் எமிட்டிங் டயோடு (LIGHT EMITTING DIODE) எனப்படும் LED (எல்இடி) விளக்குகளின் மூலமாக விளக்குகளை ஒளிரச் செய்கின்றது.


அதனால் இரவு 12 மணி நேரம்கூட எல்.இ.டி. பல்புகள் ஒளிரும் அளவிற்கு சக்தியை கிரகித்து வைத்துக் கொள்ள முடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.