பணி நிரவல் கலந்தாய்வு - CEO Proceedings


பணி நிரவல் கலந்தாய்வு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு - தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


//மின்னஞ்சல் வழியாக//
தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை

திருவள்ளுவராண்டு 2056/விசுவாவசு வருடம்/ஆனி -19

ந.க.எண்.4812/ஆ4/2024 , நாள் .03.07.2025


பொருள் : தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு மற்றும் நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயன் செய்து ஆசிரியருடன் உபரி பட்டியல்-கலந்தாய்வில் கலந்து கொள்ள அறிவுறுத்துதல் - தொடர்பாக.

பார்வை : 

1. அரசாணை எண்.525 பள்ளிக்கல்வித்துறை, நாள் : 29.12.1997.


2. அரசாணை எண்.46 பள்ளிக்கல்வித்துறை நாள்.14.05.2004.


3. அரசாணை எண்.231 பள்ளிக்கல்வித்துறை நாள்.11.08.2010.


4. அரசாணை எண்.180 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.07.2012.


5. அரசாணை எண்.217 பள்ளிக்கல்வித்துறை நாள்.20.06.2019.


6. அரசாணை எண்.176 பள்ளிக்கல்வித்துறை நாள்.17.12.2021.


7. அரசாணை எண்.12 பள்ளிக்கல்வித்துறை நாள்.03.02.2022,


8. அரசுக் கடித எண் .3835/1.5.5 (1) 12024-1., நாள் 29.04.2024.


9. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.048350/சி3/இ1/2024, நாள் : 05.08.2024.


10. சென்னை-06, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.037584/சி3/இ1/2025, நாள் : 26.06.2025.


=========


தருமபுரி மாவட்டத்தில் அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் 2024-2025 ஆம் கல்வியாண்டின் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் பெறப்பட்டு 01.08.2024 நிலவரப்படி பார்வை(1) முதல் பார்வை(7) வரை உள்ள அரசாணைகள் மற்றும் பார்வை(9)-இல் காணும் செயல்முறைகளை பின்பற்றி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.
01.08.2024 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டதில்
ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு நடத்துவது சார்ந்து பார்வை(10)-இல் காணும் 26.06.2025 நாளிட்ட செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட உபரி ஆசிரியர்களின் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.