SMC கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிடுவதற்கு TNSED Parents App இல் Login செய்யும் முறை
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
பள்ளி மேலாண்மைக் குழு SMC கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைப்பதிவு Attendance மற்றும் தீர்மானங்களை பதிவிடுவதற்கு TNSED Parents App இல் எவ்வாறு Login செய்வது
வணக்கம்,
இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகைப்பதிவு மற்றும் தீர்மானங்களை பதிவிடுவதற்கு TNSED Parents App இல் எவ்வாறு Login செய்வது என்பதற்கான Demo video பகிர்கிறோம்.
*கவனிக்க வேண்டியவை:*
1. Login செய்த பிறகு *உறுப்பினர் வருகை* தொகுதியில் காண்பிக்கப்படும் அப்பள்ளியின் SMC உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் ஒவ்வொரு உறுப்பினர் பெயருக்கும் நேராக *A* (Absent) என்று இருக்கும்.
2. கூட்டத்தில் பங்கேற்ற ஓவ்வொரு உறுப்பினருக்கும் *P*(Present) என்று தேர்வு செய்து மொத்தமுள்ள உறுப்பினர்க்கும் மேற்கண்டவாறு *P* என்று தேர்வு செய்து இறுதியாக *Save* செய்ய வேண்டும்.
3. கூட்டம் தொடங்கிய / முடிந்த பிறகே உறுப்பினர்களின் வருகையினை பதிவு செய்ய வேண்டும்.
4. உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் வருகையினை *P* என்று குறிக்காமல் *Save* செய்தால், அனைவருக்கும் *Absent* என அறிக்கையில் பதிவாகும்.
காணொளி மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள குறிப்புகளின் படி உறுப்பினர்கள் வருகை பதிவினை செயலியில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.