அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி

 


அரசுப் பள்ளியிலிருந்து அமெரிக்காவிற்கு படிக்க சென்றுள்ள மாணவி : அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு 



அரசுப் பள்ளி to அமெரிக்கா...!


அமெரிக்க வெளியுறவு துறை நிதியுதவி வழங்கும் ‘The Kennedy-Lugar Youth Exchange and Study (YES)’ எனும் திட்டத்தின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார் ஈரோடு அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தட்சண்யா.


பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான இத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ஓராண்டு பள்ளிப் படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருகிறார். 12-ஆம் வகுப்பை தமிழ்நாட்டில் தொடர்வார் என்பதை பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.