சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு

 


சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000 (SPF 2000) குறித்த விழிப்புணர்வு பதிவு 


இது ஒரு விழிப்புணர்வு பதிவு அரசு ஊழியர்களே💥


சிறப்பு சேமநல நிதி திட்டம் 2000

Special Provident Fund SPF 2000


இந்த கடந்த 01.10.2000 முதல் தொடங்கி வைக்கப்பட்டது


 இத்திட்டத்தை தொடங்கி வைத்த அரசு முன்னாள் முதல்வர் கலைஞர் திரு மு கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கி வைத்த திட்டம்


 இந்த திட்டத்தில் கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 50 ம்

 இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூபாய் 70 ம் 

மாதாந்திர சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும்


இது ஒரு சுய விருப்ப  திட்டமாகும் அதாவது 2000 ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் சேரலாம் அல்லது சேராமலும் இருக்கலாம் அவரவர் விருப்பம் 

ஆனால் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக திட்டத்தில் சேர வேண்டும் என்பது அரசு ஆணை

 இத்திட்டம் தொடங்கப்பட்டவுடன் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மற்றும் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பிடித்தம் இனிதே தொடங்கப்பட்டது


இருப்பினும்  நமது அரசு பணியாளர்கள் செய்யும் ஒரு பெரிய தவறு என்னவென்றால் தொடர்புடைய அரசு ஊழியர்களுடைய பணி பதிவேட்டில் இத்திட்டத்தில் சேர்ந்தவர்களின் பதிவுகள் இருக்கிறதா என்ற ஆய்வு செய்யப்படாமல் விடுபட்டுள்ள தகவல்கள் சமீபத்தில் கிடைத்துள்ளது


இதனால் என்ன பாதிப்பு என்று கேட்கிறீர்களா?


 அதாவது கிட்டத்தட்ட ஓய்வு பெறும் தருவாயில் உள்ள அரசு பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் முதிர்வு தொகை பெற்று வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது 


ஏனெனில் திட்டம் தொடங்கும் போது ஒரு அலுவலகத்திலும் 

ஓய்வு பெறும் போது ஒரு அலுவலகத்திலும் இருப்பார்கள்

 ஒரே அலுவலகத்தில் இருந்தால் பரவாயில்லை


 அம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவு


 பெரும்பாலான ஊழியர்கள் திட்டம் தொடங்கும் போது பணியாற்றிய அலுவலகத்தில் இருந்து பல்வேறு நிலைகளில் பதவி உயர்வுகள் பெற்று தொலைதூரத்தில் பணியாற்றுவார்கள் 


அம் மாதிரியான சமயங்களில் ஓய்வு பெறும் நிலை வந்து விட்டால் 

இந்த திட்டத்தின் முதிர்வு தொகையினை வழங்குவதில் சுணக்கம் காட்டுவார்கள் 


காரணம் இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பதிவுகள்

 உரிய பணி பதிவேடுகளில் இல்லை என்பதால்

 அந்தப் பதிவுகளை பதிவு செய்யும் பொருட்டு மீண்டும் அந்தப் பணி பதிவேடுகள் கடந்த 2000 ஆண்டு அந்த அரசு பணியாளர் பணியாற்றிய அலுவலகத்துக்கு அனுப்பப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது 

அல்லது கடித வழி போக்குவரத்து மூலமாக திட்டத்தில் சேர்ந்ததற்கான ஒரு  உறுதித் தன்மை சான்றிதழ் பெறப்படுகிறது


அதற்கு சில காலங்கள் ஆகிறது 

அதுவரை ஓய்வு பெற்ற ஊழியர் அத்தொகை கிடைப்பதற்கு காத்திருக்க வேண்டி இருக்கிறது


ஆகையால் இம்மாதிரியான அசாதாரண சூழ்நிலை வந்து விடுவதற்கு நாமே காரணமாக இருக்கக் கூடாது


இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் தயவு செய்து ஓய்வு நேரத்தில் நிர்வாகப் பிரிவுக்கு சென்று தங்களுடைய பணி பதிவேட்டை ஒரு முறை ஆய்வு செய்ய கேட்டுக் கொண்டு உரிய பதிவுகள் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்


ஓய்வு பெறும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் 

அந்த நேரம் அந்த அலுவலகத்தில் இருப்பீர்களா என்பது சந்தேகம்


குறிப்பாக சமீபத்தில் ஓய்வு பெற இருக்கும் அரசு பணியாளர்கள் அனைவரும் ஒருமுறை தயவு செய்து தங்களுடைய பணி பதிவேடுகளை ஆய்வு செய்து

 இத்திட்டத்தில் சேர்ந்ததற்கான பதிவு இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம்


 இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் கடந்த 31 5 2025 அன்று ஓய்வு பெற்று விட்டேன் 

கிட்டத்தட்ட ஓய்வு பெற்று மூன்று மாதங்களைக் கடந்தும்

 இன்று வரை தொகை பெற முடியவில்லை


 காரணம் இத்திட்டத்தில் நான் சேர்ந்தபோது மதுரை சம்பள கணக்கு அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி வந்தேன் 

ஆனால் இதில் பதிவு செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டி விட்டேன் 


IFHRMS வழியில் பென்ஷன் ப்ரோபோசல் அனுப்பும்போது கூட என்னுடைய பணிப்பதிவேட்டை சரிபார்த்தோம்


 இருப்பினும் எப்படியோ இந்த பதிவுகளை செய்து விட்டார்களா என்பதை கண்காணிக்க மறந்து விட்டேன்


தற்பொழுது தலைமை இடத்தில் இது தொடர்பான பதிவுகள் இல்லை என்று எனது பணி பதிவேடு நான் கடைசியாக பணியாற்றிய அலுவலகத்துக்கு திருப்பி விடப்பட்டது


 அந்த அலுவலகத்திலிருந்து மீண்டும் கடிதப் வழி போக்குவரத்து  மூலம் மதுரை சம்பள கணக்கு அலுவலருக்கு முகவரி இடப்பட்டு 

ஒரு உறுதித் தன்மை சான்று கடிதம் பெறப்பட்டது 


அதைப் பெற்று நான் கடைசியாக பணியாற்றிய அலுவலகத்தில் எனது பணி பதிவேட்டில் ஒரு பதிவு செய்து 

மீண்டும் கருவூல கணக்கு இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது


காரணம் உதவி சம்பள கணக்கு அலுவலர் நிலையில் சென்னையில் பணிபுரிவோருக்கு தலைமை இடம் தான் ஒப்பளிப்பு ஆணை பிறப்பிப்பார்கள்


இருப்பினும் இன்று வரையிலும் உரிய ஒப்பளிப்பு ஆணை பெறப்படாத நிலையே தொடர்கிறது


இருப்பினும் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கிறேன்

 ஒப்பளிப்பு ஆணை வந்துவிடும் என்று


இருப்பினும் இதில் கிடைக்கப் போகும் தொகை பெரிய அளவில் இல்லை என்றாலும் ஒரு மன உளைச்சல் இருக்க தானே செய்யும்


 ஆகையால் தோழர்களே தோழியர்களே 

தயவு செய்து ஒரு முறை ஓய்வு நேரத்தில் உரிய பணி பதிவேட்டில் உரிய பதிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்


இந்தப் பதிவு யாரையும் குற்றம் சொல்வதற்காகவோ அல்லது புகார் சொல்வதற்காகவும் அல்ல


 தவறு இரண்டு பக்கமே உள்ளது 

அதாவது பணிப் பதிவேடு பராமரிப்புக்கு உரிய அரசு பணியாளரும் பொறுப்பு என்பதை இதன் மூலம் உணர முடியும்


நிர்வாகப் பிரிவினரை மட்டும் குற்றம் சொல்வது சரியான கூற்றாக இருக்காது


இப்படிக்கு


SARAVANAKUMAR J R

APAO (Retd)

CHENNAI EAST


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.