நீதி அரசர்களின் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை - ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு நியாயம்தானா? - ஆசிரியர் கூட்டணி கேள்வி
*நீதி அரசர்களின் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை பாதுகாக்கப்பட்டு வருகிறது!.. எழுத்தறிவிக்கின்ற இறைவனுக்கோ!.. பதவி உயர்வுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.. நியாயம்தானா?.. நியாயம்தானா?..*
*AIFETO.. 01.09.2025.*
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:- 36/2001.*
*ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளிவந்துள்ளது.*
*பணி நியமனத்திற்கும், பதவி உயர்வுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை!.. என்பது இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.*
*உச்சநீதிமன்ற தீர்ப்பினை நாம் சட்டரீதியாக விமர்சனம் செய்ய இயலாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தீர்ப்பில் எங்களுக்கு நியாயம் கிடைக்கப்பெறவில்லை என்பதை சொல்வதற்கு உரிமை இருக்கிறது!.*
*தமிழக அரசைப் பொறுத்தவரையில் கொள்கை முடிவாக பதவி உயர்வுக்கு முன்னுரிமையினை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். என்பது எதார்த்தமான உண்மையாகும்.*
*இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..*
*எதிர்பார்த்த ஒன்றுதான்.*
*என்னதான் வழக்கறிஞர்கள் வாதிட்டாலும் NCTE (NATIONAL COUNCIL FOR TEACHER EDUCATION) சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதி அமர்வு 3 நீதிபதி அமர்வில் ஏற்கனவே ஆசிரியராக இருப்பவர்கள் ஆசிரியராக தொடர வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிக்கை கொடுத்தவர்கள் தான்.*
*தேசியக் கல்வி கொள்கையை ஒட்டியே அவர்களது செயல்பாடுகள் அமைந்திருக்கும். என்பதில் வியப்பேதும் இல்லை.*
*தீர்ப்பின் முழு வடிவத்தையும் நீதியரசர்கள் குரல் வழியாகவும் கேட்டோம்!.. தீர்ப்பின் சுருக்கத்தினையும் படித்துப் பார்த்தோம்!.. மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்தினையும் கேட்டிருக்கின்றோம்.*
*ஆனால் அதற்குள் உச்ச நீதிமன்ற தீர்ப்பினை பற்றி பல்வேறு புலனப் பதிவுகள் ஆலோசனைகளாக மிதந்து வருகின்றன.*
*மேல் முறையீடு செய்ய முடியுமா?? என்றெல்லாம் பல்வேறு வினாக்கள்!.. அவையெல்லாம் இப்போது நடைபெறப் போவதில்லை!.. மேல்முறையீடு செய்தாலும் இதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது தீர்ப்பு வருவதற்கு... மேல்முறையீடு செய்யும்போது எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று நமக்குத் தெரியாது.*
*பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு அவசியம்.*
*பணி ஓய்வு பெற 5 ஆண்டு உள்ளவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியதில்லை!.*
*5 ஆண்டுகளுக்கு மேல் பணியில் உள்ளவர்கள், 2 ஆண்டுகளுக்குள் TET தேர்ச்சி பெற வேண்டும்.*
*ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறவில்லை எனில் பணியிலிருந்து விடுவித்து விடலாம். அவர்களுக்கு ஓய்வு காலப் பயன்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.*
*குறிப்பிட்ட பணிக் காலம் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம்.*
*என்றெல்லாம் தீர்ப்பில் சில சலுகைகளை வழங்கி உள்ளார்கள்.*
*அதே நேரத்தில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டம் பொருந்தாது என்று ஏற்கனவே தீர்ப்புகள் கூறப்பட்டு வந்துள்ள நிலையில்... சிறுபான்மை நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உயர் அமர்வு விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள்.*
*பெரும்பாலும் நமது ஆசிரியர்களில் பணி நிறைவு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் 1970ஐ பிறந்த நாளாக கொண்டவர்கள்.. நிறைய பேர் இருக்கிறார்கள்!. அவர்கள் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இல்லை ஆனால் ஐந்து ஆண்டுகள் மூன்று மாதம் கூடுதலாக இருந்தாலும் இரண்டு ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.*
*2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நியமனம் பெற வேண்டுவோர் அந்த தகுதி தேர்வினை இலட்சக்கணக்கில் எழுதினார்கள். ஆசிரியராக பணியாற்றுபவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று இன்றைய தேதி வரை தமிழ்நாடு அரசு எந்தவிதமான ஆணையும் பிறப்பிக்கவில்லை.*
*இடைநிலை ஆசிரியர் ஒருவர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வில் செல்ல வேண்டும் என்றால்... ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்ச்சி பெற வேண்டும்.*
*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற வேண்டும் என்றால் அவர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியில் நீடிக்க TET.. 1 தேர்ச்சி பெற வேண்டும். பதவி உயர்வில் செல்வதற்கு TET.. 2 தேர்ச்சி பெற வேண்டும்.*
*எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அப்போதைய தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து SCERT மூலமாக தேர்வு வைத்து அனைவரையும் இடைநிலை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தினார்கள்.*
*அதேபோல் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்களையும் அரசு நிர்ணயித்து அந்த தேர்வினை நடத்தி, அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ் வழங்குவதற்கு வாய்ப்பளித்தார்கள்.*
*நீண்ட காலம் இயக்கத்தை தலைமை பொறுப்பு ஏற்று நடத்தியவர்கள் பல பேர் ஐந்து ஆண்டுகளில் பணி நிறைவு பெற்று விடுவார்கள். அவர்களது பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.*
*கல்லூரி ஆசிரியர்களை பொறுத்தவரையில் தேசிய அளவில் தகுதித் தேர்வினை (NET) வைத்திருக்கிறார்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எந்தக் கல்லூரியிலும் பணி நியமனம் பெறலாம். மாநில அளவில் கல்லூரி ஆசிரியர் நியமனத் தேர்வில் (SLET) வெற்றி பெற்றவர்கள் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளார்கள். ஆனால் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சி படிப்பு (Phd) இருந்தால் போதுமானது. இதுதான் கல்லூரி ஆசிரியர்களின் விதிமுறைகளில் இடம்பெற்று இருக்கிறது.*
*சட்ட விதிகள் சில நேரங்களில் நியாயங்களை புறந்தள்ளிவிட்டு தான் தீர்ப்பாக வெளி வந்திருக்கிறது!.. அந்த தீர்ப்பு தான் இன்று உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.*
*இந்த தீர்ப்பு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தெல்லாம் வழங்கப்படவில்லை நமக்குள் உள்ள இரண்டு ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்த காரணத்தினால் கிடைக்கப் பெற்ற தீர்ப்பாகும்.*
*தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சில அலுவலர்கள் நமக்கு சாதகமான தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தால் அமல்படுத்துவதற்கு தாமதப்படுத்துவார்கள்.*
*ஆனால் பாதகமான தீர்ப்பு வந்தால் உடனடியாக அமல்படுத்த துடிப்பார்கள்.*
*நீதியரசர்களை பொறுத்தவரையில் பதவி உயர்வுக்கு அவர்களது முன்னுரிமை தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது தெரிந்த உண்மை!..*
*முன்பெல்லாம் வங்கிகளில் கடன் கேட்க ஆசிரியர்கள் சென்றால் வங்கி மேலாளர் ஆதார் கார்டு, ரேசன் கார்டு கேட்பார்கள். ஆனால் இனிமேல் TET தேர்ச்சி பெற்றிருக்கிறீர்களா? அந்த சான்றிதழை கேட்டாலும் கேட்பார்கள்!.. அந்த நிலைமைக்கு தள்ளப் பட்டுள்ளோம்!.. அந்தோ பரிதாபம்!...*
*நீதி அரசர்களுடைய பதவி உயர்வுக்கு முன்னுரிமை பேணப்படுகிறது!. ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு TET கட்டாயம் என உறுதிப்படுத்தப்படுகிறது.*
*நீதி தேவதையே!. நல்ல தீர்ப்பினை நீங்கள் தான் வழங்க வேண்டும்!..*
*யாரும் பதற்றம் அடைய வேண்டாம்!.. ஆசிரியர் தகுதித் தேர்வினை அனைவரும் எழுதலாம்!.. தீர்ப்பினை அமுல்படுத்த தமிழ்நாடு அரசு சில ஆணைகளை பிறப்பிப்பார்கள்..! அனைவரையும் பாதுகாக்க முடியும்!. என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது!..*
*அண்ணன் வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) அலைபேசி: 9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com*
*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.