பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025


 

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 14.10.2025

கிழமை:- புதன்கிழமை



*திருக்குறள்*


பால் :பொருட்பால் 

‌இயல்: குடியியல் 

அதிகாரம்:  மானம்


*குறள் எண்: 963*


பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய 

சுருக்கத்து வேண்டும் உயர்வு.


 *விளக்கவுரை:*


செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும், செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.


 *பழமொழி :* 


True friends are stars that shine in the dark. 

உண்மையான நண்பர்களே இருளில் பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்.


 *ஈரொழுக்கப் பண்புகள் :* 


1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்

2. எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.


 *பொன்மொழி :* 


வெறுப்பவர் யாராக இருந்தாலும் நேசிப்பவர் நீங்களாக இருங்கள்

 - அன்னை தெரசா


 *பொது அறிவு :* 


01.உலக விஞ்ஞானிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

விடை: நவம்பர் 10   November-10


02. புதன் கோள்  சூரியனை ஒரு முறை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு?

விடை: 88 நாட்கள்- 88 days


 *English words :* 


Abstract – Theoretical

Access – Entry


 *தமிழ் இலக்கணம்:* 


 வினைச்சொல் என்பது ஒரு செயலை அல்லது நிகழ்வை உணர்த்தும் சொல். இது ஒரு வாக்கியத்தின் இன்றியமையாத பகுதியாகும், இது பொருள் என்ன செய்கிறது என்பதைக் குறிப்பிடுகிறது.

எடுத்துக்காட்டாக, "கண்ணன் ஓடினான்" என்ற வாக்கியத்தில் 'ஓடினான்' என்பது ஒரு வினைச்சொல் ஆகும்.


 *அறிவியல் களஞ்சியம் :* 


 "மூச்சு விடும்போது வெளிவிடப்படும் கார்பன் டை ஆக்சைடு கொசுக்களைக் கவரும் ஒரு முக்கிய ஈர்ப்புப்பொருள் என்பதால் மனிதர்கள் நேரடியாக ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. வாசனை வீசும் பூக்கள் மலரும் செடிகளையும், பழ மரங்களையும் இல்லாமல் செய்யும் மனிதன் அந்த நறுமணத்தை செயற்கையாக உருவாக்கினால் இது போன்ற பாதிப்புகளே ஏற்படும்.


தொலைதூர விண்வெளி ஆய்வுகளிலும் ஆழமான கடற்பரப்பில் ஆராய்ச்சிகளிலும் சாதனைகள் புரியும் மனிதனால் கொசுக்கள் என்ற இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் வெற்றிபெற முடியவில்லை என்பதே உண்மை."


 *அக்டோபர் 15* 


இன்று இளைஞர் எழுச்சி நாள் ,உலக கைகள் கழுவும் தினம், உலக மாணவர் தினம் மற்றும் வெண்பிரம்பு பாதுகாப்பு தினம் .


 *APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள்*


பொதுவாக ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகின்ற இவர் ஒரு இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றினார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.


இவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் (ISRO) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பால், இவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக இவர் முக்கிய பங்காற்றினார்.


2002 ஆம் ஆண்டில், இவர் இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் "மக்கள் ஜனாதிபதி" என்று பரவலாகக் குறிப்பிடப்படுகின்றார். பிற்கால வாழ்வில் இவர் கல்வி, எழுத்து மற்றும் பொதுச் சேவைக்கு திரும்பினார். பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் ஆக பணியாற்றினார்.


இவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுகளுக்காகவும், இந்திய மாணவர் சமூகத்துடன் நடத்திய கலந்துரையாடல்களுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். 




 *நீதிக் கதை*


 _மீனவனின் புத்திசாலித்தனம்_ 


மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல என்று மன்னர் மறுத்தார். சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.


எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.


பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள் என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 


நீதி : யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.


 *இன்றைய செய்திகள்* 


 15.10.2025


🌟தீபாவளி திருடர்களை பிடிக்க டிரோன்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு- அவசர உதவிக்கு செல்போன் எண்கள் அறிவிப்பு


🌟இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சுமார் 3 புயல்கள் தாக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.


🌟மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியது வெனிசுலா


🌟2025ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.


 *விளையாட்டுச் செய்திகள்*


🌟பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தமிழக வம்சாவளி வீரர் முத்துசாமி அசத்தல்.


 *Today's Headlines* 


🌟Police department use drones for  monitoring Diwali thieves and they have announced emergency phone numbers also.


🌟The Meteorological Department has warned that around 3 cyclones may hit Puducherry and its surrounding areas during this year's northeast monsoon season.


🌟Venezuela closes its embassy in Norway after Nobel Prize announcement for Maria Corina.


🌟The 2025 Nobel Prize in Economics has been awarded jointly to Joel Mogir, Philip Achion, and Peter Howitt


 *SPORTS NEWS*


🧶Batsman Muthusamy who is of Tamil Nadu ancestry, took 11 wickets in the Test against Pakistan.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.