பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2025

 

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-10-2025 ; School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

நாள்:- 23.10.2025

கிழமை:- வியாழக்கிழமை

 



*திருக்குறள்:*


பால்:- பொருட்பால்

இயல்:- குடியியல்

அதிகாரம்:- பெருமை



*குறள் : 975*


பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் 

அருமை யுடைய செயல். 


*உரை:*


பெருமைப் பண்பு உடையவர் செய்வதற்கு அருமையானச் செயலைச் செய்வதற்க்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.


*பழமொழி :*


Respect is earned,not demanded. 


மரியாதை கேட்டு பெறப்படுவதில்லை, சம்பாதிக்கப்பட வேண்டியது.



*இரண்டொழுக்க பண்புகள் :*


1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.


2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்


*பொன்மொழி :*


அறிவு என்பது நண்பர்களுக்கிடையில் நாம் இருக்கும் போது நமக்கு ஒரு நல்ல ஆபரணமாக இருக்கும். பகைவர்களிடமிருந்து அது நம்மைக் காக்கும் ஒரு கேடயமாக இருக்கும் - விநோபா


*பொது அறிவு :*


01.அட்லஸ்சை கண்டுபிடித்தவர்  யார்?



ஆபிரகாம் ஆர்டெலியஸ்

Abraham Ortelius 


02.உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எந்த நதியில் அமைந்துள்ளது?


வெனிசுலா -சுருன் நதி

Venezuela - Churún River


*English words :*


depict-portray


desire-crave


*தமிழ் இலக்கணம்:*


 பொருட்பெயர்: ஓர் உயிரற்ற அல்லது உயிருள்ள பொருளின் பெயரைக் குறிக்கும்.


எ.கா: மரம், செடி, நாற்காலி, முத்து

இடப்பெயர்: ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும்.

எ.கா: உலகம், இந்தியா, சென்னை


*அறிவியல் களஞ்சியம் :*


 நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.


நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.


*அக்டோபர் 23*



*பீலே (Pelé) என்றழைக்கப்படும் எட்சன் அரண்டெசு டொ நாசிமெண்டோ (Edson Arantes do Nascimento; 23 அக்டோபர் 1940 – 29 திசம்பர் 2022)*


 பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்டவர்.காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பீலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92. மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பீலே 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.


*நீதிக்கதை*


 ஒரு ஒட்டகம் காட்டில் தவம் மேற்கொண்டிருந்தது. அந்தத் தவத்தின் பெருமையை உணர்த்த பிரம்ம தேவர் ஒட்டகத்திற்குக் காட்சியளித்தார். என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். 


இருந்த இடத்தில் இருந்த படியே உணவைப் பெரும் வகையில் என் கழுத்து நீண்டதாக இருக்க வேண்டும். அந்த நீளமான கழுத்தோடு நான் காட்டில் உலா வர வேண்டும் என்று கேட்டது. அவ்வாறே பிரம்ம தேவர் வரமளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பின் ஒட்டகம் உணவிற்காக அதிகம் முயற்சிக்கவில்லை. நீண்ட கழுத்துடன் எங்கும் திரிந்தது. உணவு எளிதாகக் கிடைத்தது. இதனால் சோம்பல் உற்றது ஒட்டகம். 


ஒருநாள் ஒட்டகம் அப்படி உலவிக் கொண்டிருந்த போது பெருங்காற்று வீசியது. மழை பெய்தது. அறிவற்ற அந்த ஒட்டகம் தன் தலையை ஒரு குகையில் நீட்டிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மழைக்குப் பயந்து தன் மனைவியுடன் ஒரு நரி அந்தக் குகைக்குள் நுழைந்தது. 


குளிராலும் பசியாலும் வாடிய நரித் தம்பதியர்க்கு மிகப் பெரிய வாய்ப்பாக ஒட்டகத்தின் கழுத்து உணவாக அமைந்தது. ஒட்டகத்தின் இருபுறமும் இருந்துக் கொண்டு நரிகள் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து வேண்டிய அளவு மாமிசத்தைப் ருசித்தன. 


தனக்கு நேர்ந்த ஆபத்தை உணர்ந்த ஒட்டகம் தனது கழுத்தை சுருக்க முயற்சித்தது. நீண்ட கழுத்தைச் சுருக்க அரும்பாடுபட்டது. அதற்குள் நரிகள் ஒட்டகத்தின் கழுத்துப் பகுதி முழுதும் சாப்பிட்டு விட்டன. ஒட்டகம் மாண்டு போயிற்று. 


நீதி :


சோம்பல் சில சமயம் உயிருக்கு ஆபத்தாக மாறி விட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


*இன்றைய செய்திகள்*


23.10.2025



⭐டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வு வழிகாட்டி


⭐இந்திய ராணுவத்தில் 'தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ பதவி

⭐ டெல்டா மாவட்டங்களில் கனமழை – ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


⭐அமெரிக்கா வாழ் தேன்மொழி சௌந்தர் ராஜ் அவர்களுக்கு வைக்கம் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.


*🏀 விளையாட்டுச் செய்திகள்*


🏀பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டியில்  235 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

தமிழக வம்சாளி வீரரான முத்துசாமி மற்றும் ரபாடா கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தனர்.


*Today's Headlines*



⭐TNPSC Group 4 exam results released. தேர்வு வழிகாட்டி


⭐'Golden Son' Neeraj Chopra gets an honorary post in the Indian Army.


⭐In the Delta districts, due to heavy rain, thousands of acres of paddy fields are immersed in water


⭐US-based Indian  Thenmozhi Soundar Raj has been announced as the recipient of the Vaikom Award.



 *SPORTS NEWS* 


🏀Pakistan - South Africa lost 8 wickets for 235 runs in the cricket match. Tamil Nadu-born Muthusamy and Rabada added 98 runs for the last wicket.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.