பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 06.11.2025
கிழமை:- வியாழக்கிழமை
*திருக்குறள்:*
பால்:- பொருட்பால்
இயல்:- அரசியல்
அதிகாரம்:- குற்றங்கூறாமை
*குறள் : 433*
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
*விளக்க உரை:*
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.
*பழமொழி :*
Education is the light that never fades. Educational software downloads
கல்வி என்பது எப்போதுமே அணையாத விளக்கு.
*இரண்டொழுக்க பண்புகள் :*
1.கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் போல நானும் எனது கடமையை தவறாமல் செய்வேன்.
2.கனி தரும் மரங்கள் போல நானும் பலன் எதிர்பாராமல் மற்றவருக்கு உதவி செய்வேன்.
*பொன்மொழி :*
துணிவிருந்தால் துக்கமில்லை . துணிவில்லாதவனுக்கு தூக்கம் இல்லை கலைஞர் .மு. கருணாநிதி
*பொது அறிவு :*
01. நாகார்ஜுனா சாகர் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
கிருஷ்ணா நதி - Krishna river
02.திராவிட மொழியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
இராபர்ட் கால்டுவெல்-
Robert Caldwell
*English words :*
preening - cleaning the feathers with beak
grining - smiling broadly
*தமிழ் இலக்கணம்:*
வல்லினம் மிகா இடங்கள்
மேலும் கண்டறிக
ஆ, ஏ, ஓ என்னும் வினா எழுத்துக்களின் பின் வல்லினம் மிகாது.
அவனா + சென்றான் = அவனா சென்றான்
அவனோ + பேசினான் = அவனோ பேசினான்
அவனே + சிரித்தான் = அவனே சிரித்தான்.
*அறிவியல் களஞ்சியம் :*
உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் ஈடுபடும் செல்களின் மரபணுக்களில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் (mutation) காரணமாக நுண்ணுயிரால் தாக்கப்பட்டதை அறியும் திறனை உடல் இழக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படாமல் உடல் நோய்வாய்ப்படுகிறது. சின்னம்மை (chicken pox) நோயால் தாக்கப்பட்டவர்கள் இந்த மரபணுமாற்ற பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பொழுது, நோய் எதிர்ப்பின்றி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது;
*நவம்பர் 06*
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாள்
*நீதிக்கதை*
ஒரு காட்டில் ஒரு சிங்கம் எல்லா மிருகங்களுக்கும் சண்டைப் பயிற்சி அளித்து வந்தது. அதில் ஒரு நரி மிகவும் திறமை வாய்ந்தவன் என்று பட்டம் பெற்றது.
நரிக்கு பெருமையும், கர்வமும் தாங்க முடியாமல் போனது. என்னோடு சண்டை போட்டு ஜெயிப்பவர்கள் யார் என்று எல்லா மிருகங்களையும் வம்புக்கு இழுத்தது. நரியைக் கண்டாலே வெறுப்பாகும் அளவுக்கு எல்லா மிருகங்களும் ஒதுங்க ஆரம்பித்தன.
இந்த நரியின் கொட்டத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிறு அணில் ஆசைப்பட்டது. அது நரியுடன் சண்டையிடுவதற்கு தயார் என்று அறிவித்தது.
ஒரு சின்ன அணில் தன்னை வென்று விட முடியுமா என்று நினைத்த நரி பந்தயத்திற்கு ஒப்புக் கொண்டது. கண நேரத்தில் அந்த அணில் நரியின் மீது பாய்ந்து எத்தனை இடங்களில் கடிக்க முடியுமோ கடித்து விட்டு ஓடியது.
என்ன ஏது என்று புரிவதற்கு முன்பே நரியின் உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டிருக்க வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தது.
நீதி :
மற்றவர்களை இழிவாக நினைத்தால் துன்பம் நம்மையே வந்தடையும்.
*இன்றைய செய்திகள்*
06.11.2025
⭐தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கட்டாயம் மாநகராட்சி சென்னை.
⭐பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கல்மேகி சூறாவளி வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழப்பு.
⭐ அமெரிக்காவில் சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு.
*🏀 விளையாட்டுச் செய்திகள்*
🏀முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளதுள்ளதால், பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
*Today's Headlines*
⭐Permission for temporary flagpoles is mandatory in the Chennai Corporation.
⭐40 people were killed in floods caused by Typhoon Kalmegi, which hit the Philippines.
⭐ 3 killed in cargo plane crash in the US.
*SPORTS NEWS*
🏀 As for the first time, the women's team has won the ICC series and created a record. So, the BCCI announced a prize money of more than 50 crores and honored.
Actual Price: 216
Offer Price : 169
Benefit : Rs. 47
Amazon வலைதள முகவரி இணைப்பு:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.