பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-12-2025 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
நாள்:- 02.12.2025
கிழமை:- செவ்வாய்க்கிழமை
திருக்குறள்:
பால்:- பொருட்பால்
இயல்:- அமைச்சியல்
அதிகாரம்:- தூது
*குறள் 685:*
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
*விளக்க உரை:*
பலவற்றைத் தொகுத்து சொல்லியும், அவற்றுள் பயனற்றவைகளை நீக்கியும், மகிழுமாறு சொல்லியும் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகின்றவன் தூதன்.
*பழமொழி :*
A leopard cannot change it's spots.
ஒருவன் தனது இயல்பை மாற்ற முடியாது.
*இரண்டொழுக்க பண்புகள் :*
1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.
2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.
*பொன்மொழி :*
எப்படி மக்களுக்கு சேவை செய்வது என்று தெரிந்தவனுக்குத்தான் எப்படி ஆட்சி செய்வது என்பது தெரியும் - சுவாமி விவேகானந்தர்
*பொது அறிவு :*
01.வரலாற்று புகழ்பெற்ற பாடலிபுத்திரம் நகரின் தற்போதைய பெயர் என்ன?
பாட்னா - Patna
02. இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களின் ஆபரணம் என்று அழைக்கப்படும் மாநிலம் எது?
மணிப்பூர்- Manipur
*English words :*
1.பரிதாபம் - Remorse or regret
2.பொறுமை - Modesty or humility
3.மகிமை - Greatness or magnificence
*தமிழ் இலக்கணம்:*
வினை மரபுச் சொற்கள்
நடனம் ஆடு
வண்ணம் தீட்டு
வெற்றிலை தின்
கூடை முடை
பானை வனை
*அறிவியல் களஞ்சியம் :*
குழந்தை உருவாவது முதல், நுரையீரலின் சுவாசக் குழாய் மூடியபடி ஒட்டிக்கொண்டு தான் இருக்கும். ஏனெனில் அங்கே வெற்றிடம் தான் இருக்கும். இதனால் காற்றழுத்தத் தாழ்வு உண்டாகி மூடிக்கொள்ளும். எப்படியெனில், நீங்கள் ஒரு உறிஞ்சு குழாயை (குளிர்பான ஸ்ட்ரா) எடுத்து, ஒரு முனையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டு மறுமுனையில் வாய் வைத்து உள்ளிருக்கும் காற்றை உறிஞ்சினால், குழாயின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு தட்டையாகிவிடும். இப்படித்தான் சுவாசக் குழாய்களும் அழுத்தக் குறைவினால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இது சுமார் பல மாதங்கள் அப்படியே இருக்கும்
*டிசம்பர் 02*
*சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம்*
சர்வதேச அடிமைத்தளை ஒழிப்பு தினம் (International Day for the Abolition of Slavery) ஐக்கிய நாடுகள் பொது சபையால் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி கொண்டாடப்படும் தினம் ஆகும். இந்த தினம் முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
*நீதிக்கதை*
*பூவா தலையா*
ஒரு முறை ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார் செய்து போருக்கு தயாரானார். அவர் எப்படியும் இந்த போரில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோ பெரும் சந்தேகத்துடனேயே இருந்தனர். அனைவரும் சோர்ந்து போய் நம்பிக்கையின்றி இருந்தார்கள்.
இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து, கேட்கச் சென்றார்.
அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார். அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால்,
அந்த ராஜா போர் செல்லும் வழியில், அவர்கள் தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனை செய்து விட்டு ஒரு நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் காண்பித்து நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில் தோற்போம் என்று துறவி சொன்னதைச் சொன்னார்.
வீரர்களிடம் நம் தலை விதியை இந்த நாணயம் நிர்ணயிக்கட்டும் என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும் அதை கூர்ந்து கவனித்தனர்.
அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் எதிரிகளை தாக்க தயாரானார்கள்.
யுத்தத்தில் வெற்றியும் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி விதியை யாராலும் மாற்ற முடியாது என்று ராஜாவிடம் சொல்ல ஆம், என்று ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை காண்பித்தார்.
நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும் எளிதில் வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்.
*இன்றைய செய்திகள்*
02.12.2025
⭐டிட்வா புயலால் பெய்த கனமழையில் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் 1.35 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
⭐சிவகங்கை மாவட்டம், காரைக்குடி- திருப்பத்தூர்
அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
⭐சென்யார் புயல் காரணமாக இந்தோனேசியாவில் 294 பேரும், தாய்லாந்தில் 263 பேரும் என மொத்தம் 557 பேர் உயிரிழந்து உள்ளனர்.
*🏀 விளையாட்டுச் செய்திகள்*
🏀டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
*Today's Headlines*
⭐The heavy rains caused by Cyclone Titva have submerged 1.35 lakh acres of paddy crops in the delta districts of Nagapattinam, Thanjavur, Mayiladuthurai and Thiruvarur.
⭐11 people died in a road accident between two government buses on the Karaikudi-Thirupathur highway in Sivaganga district. More than 40
People were injured.
⭐A total of 557 people have died due to Typhoon Sennyar, including 294 in Indonesia and 263 also in Thailand.
*SPORTS NEWS*
🏀South Africa created history by defeating India 2-0 in the Test series on their home soil.
Bajaj Frore Neo Table Fan 400 MM | Table Fans For Home & Office | Aerodynamically Balanced Blades | 100% Copper Motor | High Air Delivery | 3-Speed Control | 2-Yrs Warranty 【White】


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.