புது டெல்லி இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.எட் பட்டச் சான்றிற்கு தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை என அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), பொள்ளாச்சி
IGNOU - B.Ed பட்டச் சான்றிதழ்-க்கு தனியாக மதிப்பீடு பெற தேவை இல்லை - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
சில/ பல இடங்களில் அவ்வப்போது IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு ( Evaluation ) செய்ய வேண்டும் என சொல்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது தணிக்கைத் துறை மூலம் நடக்கும் தணிக்கையின்போதும், IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு செய்ய வேண்டும் என தணிக்கைக் குறிப்பில் குறிப்பிடுவதும் நடந்து கொண்டும் உள்ளது. நமக்கு ஏன் வம்பு என உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் இதற்கு மதிப்பீடு சான்றினைக் கோரி விண்ணப்பித்துப் பெறுகின்றனர். இதனைப் பார்த்து, பலர், இவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும் என சொல்வதும் நடந்து கொண்டு தான் உள்ளது.
ஆனால் அரசாணைப்படி IGNOU B.Ed., சான்றினை மதிப்பீடு செய்வது அவசியமற்றது. தமிழ்நாடு அரசே, இச்சான்றினைத் தமிழகப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டத்திற்கு இணையானது என மதிப்பீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) அவர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார். அதில் தங்களது அலுவலத்திற்கு தொடர்ந்து மதிப்பீடு சான்று கோரும் விண்ணப்பங்களை அனுப்பும் பொள்ளாச்சி தெற்கு வட்டாரக் கல்வி அலுவலகம், இனி வருங்காலங்களில் இத்தகைய கருத்துருக்கள் அனுப்புவதை தவிர்க்குமாறு குறிப்பிட்டுள்ளதுடன், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கும் B.Ed., சான்றுக்குத் தனியாக மதிப்பீடு செய்யத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டு செயல்முறை ஆணை வெளியிட்டுள்ளார்.
Waterproof Strolley Duffle Bag- 2 Wheels - Luggage Bag
.png)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.