TET தீர்ப்பு - ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்



 TET தீர்ப்பு - ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்


நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு (TET) எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் (NCTE) விதிகளுக்கு முரணானதாகும். 




இந்தத் தீர்ப்பு 23.08.2010க்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதால், அவர்கள்  ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்ற கவலையை உருவாக்கி உள்ளது.  எனவே, ஒன்றிய அரசு உரிய தலையிட செய்து ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என்று மாண்புமிகு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்தித்து திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் தோழர் திரு. சச்சிதானந்தம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் .


#TET #tetexam #NCTE #teachers #education


Sweatshirts for Men | Unisex Hoodie | Hoodie |Available in Plus Size 


https://amzn.to/4oYLwPn




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.