பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை CPS விட, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் TAPS பலன் அளிக்கக் கூடியது - Whatsapp பகிர்வு
✍️✍️✍️✍️✍️✍️✍️
அறிவார்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு
வணக்கம்🙏
தமிழகத்தில் இரண்டு மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியரகள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் சுமார் ஐம்பது இலட்சம் ஓட்டுகள் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கப்போகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய பென்சன் திட்டம் வழங்கப்டாமல், ஒரு உத்திரவாதமான பென்சன் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் பலர் யாரோ போட்ட பதிவை, அவர்கள் என்ன நோக்கத்திற்காக பதிவிடுகிறார்கள் என்று கூட தெரியாமல் அதையே, வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பழைய பென்சன் திட்டம் வழங்கப்படவில்லை என்பது வருத்தம்தான்.
ஆனால், போராட்டத்தின் விளைவாக ஏற்கனவே, பெற்றுக் கொண்டிருந்த, பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை காட்டிலும், உத்திரவாத பென்சன் திட்டம் மேலானது.
கீழ்க்கண்ட உதாரணங்கள் மூலம் இதனை நிரூபிக்க முடியும்.
இருபது ஆண்டுகள் பணி முடித்த *X என்ற* கல்லூரி ஆசிரியர் ஓய்வு பெறும் போது அவர் வாங்கும் மாத அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படி ரூ.2,40, 000 என எடுத்துக்கொண்டால்,
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் அரசின் பங்கு மற்றும் ஆசிரியரின் பங்கு என மொத்தம் *70, 00,000 இருக்க* வாய்ப்புள்ளது.
இந்த 70,00,000 அவர் பெற்றுக்கொள்ளலாம்.
பணிக்கொடை எதுவும் கிடையாது.
இந்த எழுபது இலட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதிகம்பட்சம், ஆண்டுக்கு 12% வட்டி என கணக்கிட்டால்,
மாதத்திற்கு ரூ. 70,000 கிடைக்கலாம்.
10 ஆண்டுகள் கழித்தும் மாதம் 70,000 தான் கிடைக்கும்.
பத்து ஆண்டுகளில் இதன் சராசரி உண்மை மதிப்பு மாதம் ரூ. 56,000
பத்து ஆண்டுகள் பெறும் உண்மை மதிப்பு
56000×120= 67,20,000
ஆனால் இன்றைக்கு 70,000 என்பது, ஆண்டுக்கு 6% பணவீக்கம் என வைத்துக் கொண்டாலும் பத்து ஆண்டுகள் கழித்து இன்றைய மதிப்பிற்கு ரூ. 39,000 ஆக சுருங்கி இருக்கும்.
உங்களுடைய வைப்புத்தொகையின் மதிப்பும் 39,00,000 ஆக குறைந்திருக்கும்.
ஆக பத்து ஆண்டுகளில் சராசரி உண்மை மதிப்பு
நீங்கள் பெற்ற வட்டி
67,20,000+ பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் வைப்புத் தொகையின் உண்மை மதிப்பு 39,00,000= *1.06.20,000.*
இதுவே, தமிழ்நாடு உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தை *Mr.Y* தேர்ந்தெடுத்தால், மாதம் ஒரு இலட்சம் பென்சன் கிடைக்கும்.
அகவிலைப்படியும் உண்டு என்பதால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாத பென்சன் ரூ. 1,79,000 ஆக உயரும்.
இந்த பத்து ஆண்டுகளில் சராசரி மாத பென்சன் ரூ. 1,36,000.
அப்படியென்றால் இந்த பத்து ஆண்டில் பெறப்பட்டுள்ள பென்சன்
1,36,000×120=
1,63,20,000.
மேலும், உத்திரவாத பென்சன் திட்டத்தில், இவருக்கு 24,00,000 பணிக்கொடை கிடைக்கும்.
இந்த பணிக்கொடையினை ஆண்டுக்கு 12% கூட்டு வட்டி கண்க்கிட்டால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் தொகை ரூ. 74,50,000
உத்திரவாத பென்சன்
திட்டத்தின் மூலம் Mr. Y வருமானம் . 1,63,20,000.+74,50,000= *2,37,70,000.*
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்
மூலம் Mr. X பெறுவது *1,06,20,000*
இதில் யார் புத்திசாலி X or Y?
இங்கே பத்து வருடம் ஏன் கணக்கிடப்படுகிறது என்றால், ஓய்வு பெற்று குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உயிரோடிருக்கு வாய்ப்பிருக்கிறது என்ற நிகழ்தகவின் அடிப்படையில்.
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தில் பத்து ஆண்டிற்கு பிறகு, பணத்தின் மதிப்பு மீண்டும் குறையும்.
ஆனால் அதே நேரத்தில், பத்து ஆண்டு கழித்து இறந்தவருக்கு, அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவர் இணையர் உயிரோடு இருக்கும் வரை வழங்கப்படும்.
எனவே, இரண்டு திட்டத்தையும் ஒப்பீடு செய்தால், உத்திரவாத ஓய்வூதியத் திட்டமே சிறந்தது என்பது புலனாகும்.
இது கல்லூரி ஆசிரியருக்கு மட்டுமல்ல.
இதே, போன்ற கணக்கீட்டை எந்த ஆசிரியருக்கும், அரசு ஊழியருக்கும் கணக்கீட்டால், உத்திரவாத பென்சன் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை விட உயர்வானது என புரிய வரும்.
எதையும் யோசிக்காமல் புலனக்குழுக்களில் வரும் தகவல்களை படித்து, உணர்ச்சி வசப்பட்டு, நாமும் டென்சனாகி, மற்றரையும் டென்சனாக்காமல் சற்று அறிவுப்பூர்வமாக மேலே சொன்னவற்றை ஆராயுங்கள்.
முழு பென்சனுக்கான காலம் அரசின் ஓய்வூதிய செய்தி குறிப்பில் குறிப்பிடப்படாதலால், 25 ஆண்டுகள் என அனுமானிக்கப்பட்டுள்ளது.
இது முப்பது ஆண்டுகள் என கணக்கில் கொண்டால், உத்திரவாத பென்சன் திட்டத்தில் பெறும் தொகை மேலே கண்ட கணக்கீட்டின் படி 20,00,000 முதல் 25,00,000 வரை குறைய வாய்ப்புள்ளது.
தவறான தகவல்களை பதிவிடுபவர்களில் இரண்டு வகை.
ஒன்று,உண்மை தெரியாமல் பதிவிடுவது, forward செய்து.
இரண்டு, ஒரு சில அரசியல் கட்சிகளின் தகவல் தொழில் நுட்பக்குழுக்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவது.
இறுதியாக உங்களின் சிந்தனைக்கு,
அரசின் வழக்கமான பங்களிப்பு தொகையாக ஆண்டுக்கு ரூ11,000 கோடியும், கூடுதலாக
ஆண்டுக்கு ரூ13,000 கோடியும் ஒதுக்கப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் 13,000 கோடி மூலம் கூடுதல் பலன்கள்தானே கிடைக்கும் என்பதைக்கூட நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.