Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?

 

Income Tax | Rebate | Marginal Relief : New Regimeன் பலன்கள் என்னென்ன? யாருக்கு?


✍🏼செல்வ.ரஞ்சித் குமார்


நடப்பு (2025-26) நிதியாண்டில், New Regimeல் எதுவரை வரி உண்டு, Rebate, Marginal Relief எனும் வரித் தள்ளுபடிகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இப்பதிவில் வரிசைக்கிரமமாகத் தெரிந்து கொள்வோம்.



Total Gross Income :


Pay + DA + All other Allowances + EL Surrender + Any Pay Arrear = Total Gross Income.


(கூடுதலாக Savings & Investmentற்கான வட்டி ITRன் போது தானாகவே வருமானக் கணக்கில் சேர்க்கப்படும்)



Net Taxable Income :


இந்த Total Gross Incomeல் இருந்து,


1. மாற்றுத்திறனாளி போக்குவரத்துப் படி

2. Standard Deduction Rs.75,000/- 


உள்ளிட்டவற்றைக் கழித்துவரும் தொகையே Net Taxable Income. இத்தொகை 10ன் முழுமையாக்கப்பட்டு வரிவிதிப்புக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும்.



Tax Slab :


Net Taxable Incomeற்கு 2025-26 நிதியாண்டில் பின்வருமாறு வரி விதிக்கப்படுகிறது.


Rs.4,00,000 வரை                    - வரியில்லை

Rs.4,00,001 to Rs.8,00,000     - 5%

Rs.8,00,001 to Rs.12,00,000   - 10%

Rs.12,00,001 to Rs.16,00,000 - 15%

Rs.16,00,001 to Rs.20,00,000 - 20%

Rs.20,00,001 to Rs.24,00,000 - 25%

Rs.24,00,000க்கு மேல்           - 30%



Rebate :


Net Taxable Income  Rs.12,00,000/-க்குள் இருப்பின் அதற்குண்டான வருமானவரி U/S.87Aன் கீழ் தள்ளுபடி செய்யப்படும்.


அதாவது Net Taxable Income Rs.12,00,000/- எனில்,

முதல் 4,00,000 × 0% = 0

2வது  4,00,000 × 5% = 20,000

3வது  4,00,000 × 10% = 40,000

என்று மொத்தமாக Rs.60,000/- வரி வரும். இந்தத் தொகையை Rebate ஆகக் கழிப்பதன் மூலம் வரி சுழியமாக்கப்படும். இவ்வாறுதான் 12 இலட்சம் வரை Tax இல்லை என்று கூறப்படுகிறது.



Marginal Relief :


Net Taxable Income மேற்படி Rebate வரம்பைவிட ரூ.10 கூடி Rs.12,00,010/- என்று வருமானால்  Rebate கிடையாது என்பதால் அணற்கான வரியாக Rs.60,002/-ஐ செலுத்தியாக வேண்டும். Marginல இருந்து வெறும் 10 ரூவா கூடுனது குத்தமா? என்று தோன்றலாம். இக்குறையைப் போக்கத்தான் கடந்த 3 ஆண்டுகளாக Marginal Relief என்ற முறை நடைமுறையில் உள்ளது.


இதன்படி, Tax Marginஆன ரூ.12,00,000/-ஐவிடக் கூடுதலாக எவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளோமோ அதை மட்டும் வரியாகக் கட்டினால் போதும். மீதத்தொகை U/S.87Aன் கீழ் Marginal Relief என்று கழிக்கப்பட்டுவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,00,010/- என்றால், 12 இலட்சத்தைவிடக் கூடுதலாக உள்ள அந்த 10 ரூபாயை மட்டும் அப்படியே வரியாகக் (+ 4% Cess) கட்டிக் கொள்ளலாம்.


இந்த Marginal Relief முறை என்பது Net Taxable Income Rs.12,70,580/- வரை பயன்படுத்தப்படும்.


இதற்கு மேலான தொகை, அதாவது Net Taxable Income Rs.12,70,590/- எனில் இந்தக் கூடுதல் தொகையும், வழக்கமான கணக்கீட்டிற்கான வரியும் கிட்டத்தட்ட சமமாக வந்துவிடும். அதாவது,

Rs.4,00,000 =   0% = 0

Rs.4,00,000 =   5% = 20,000

Rs.4,00,000 = 10% = 40,000

Rs.70,590.   = 15% = 10,589

மொத்த வரி          = 70,589


எனவே, Rs.12,70,580/-ற்கு மேலான தொகைக்கு Marginal Reliefன் தேவை இருக்காது.



Marginal Relief Formula :


12 இலட்சத்துக்கு மேலே வரும் தொகையைக் கட்டினால் போதுமென்றால், அதற்கென ஒரு கணக்கீடு இருக்க வேண்டுமல்லவா? இருக்கிறது.


Marginal Relief = Actual Tax - Tax margin Excess Income


இந்த Marginal Reliefஐக் கண்டுபிடித்து அதை மொத்த வரியில் கழித்துவிட்டால் கட்ட வேண்டிய வரி கிடைத்துவிடும்.


உதாரணமாக Net Taxable Income Rs.12,10,000/- எனில்,


Rs.12,10,000/-ற்கான Actual Tax = 61,500


12Lஐ விடக் கூடுதல் வருமானம் = Rs.10,000


ஃ Marginal Relief (61,500 - 10,000) = Rs.51,500


ஆக, Net Taxable Income Rs.12,10,000/-க்கான நிகர வருமான வரி என்பது,

= Actual Tax - Marginal Relief

= 61,500 - 51,500

= Rs.10,000/-



>>> Income Tax Calculation Statement 2025-2026 (PDF)...



>>> Best Dash Cam details...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.