Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம்

 

01.01.2026 நிலவரப்படி Non Teaching Staffs to Art Master பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.4034/சி5/இ2/2026, நாள்: 20.01.2026


பொருள்: தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணி மாறுதல் வழங்குதல் 01.01.2026 நிலவரப்படி தகுதி வாய்ந்தோர் விவரங்கள் கோருவது - சார்ந்து


பார்வை


1. அரசாணை(நிலை)எண் 283 பள்ளிக் கல்வித் (எம்1) துறை 03.11.2009.


2. அரசாணை (நிலை)எண் 76 பள்ளிக் கல்வித் (ப.க.3(1))துறை 10.04.2015.


3. தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகள் அரசாணை (நிலை) எண்.13 பள்ளிக்கல்வி (ப.சு.3(1))த் துறை, நாள்: 30.01.2020


4. அரசாணை (நிலை) எண்.20. மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 20.06.2018


5. அரசாணை (நிலை) எண்.06, மாற்றுத்திறனாளிகள் (DAP-32) நலத்துறை, நாள்: 21.06.2025


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் (தொடக்கக் கல்வி உட்பட) பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 20% கலையாசிரியராக பணிநியமனம் வழங்க பார்வையில் காணும் அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரல்லாப் பணியாளர்களில் பதவி வாரியாக கீழ்க்காணுமாறு பணிமாறுதல் மூலம் பணிநியமனம் வழங்க பார்வை (3)இல் காணும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. உதவியாளர்

4% சதவிதம்


2. இளநிலை உதவியாளர்

4% சதவிதம்


3. ஆய்வக உதவியாளர்

3% சதவிதம்


4. பதிவறை எழுத்தர்

2% சதவிதம்


5. அலுவலக உதவியாளர்

2% சதவிதம்


6. காவலர்

2% சதவிதம்


7. நூலகர்

3% சதவிதம்


மொத்தம்

20% சதவிதம்


மேலும், பார்வை 4 மற்றும் 5 இல் காணும் அரசாணையில், மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016 இன்படி பதவி உயர்வில் கீழ்க்காணும் விவரப்படி இட ஒதுக்கீடு (Reservation) வழங்கவும் வகைசெய்யப்பட்டுள்ளது.


DISABILITY       PERCENTAGE OF RESERVATION


a) Blindness and Low vision - 1%

b) Deaf and Hard of Hearing  - 1% 

c) Locomotor Disability including Cerebral palsy, Leprosy Cured, Dwarfism, Acid Attack victims and Muscular Dystrophy  - 1%

d) Autism, Intellectual Disability. Specific Learning Disability, mental illness.  &

e) Multiple disabilities from amongst persons under clauses (a) to (d) including deaf-blindness - 1%


மேற்குறித்த மாற்றுத்திறனாளி பிரிவினர் எவரும் கீழ்க்காணும் கல்வித் தகுதியினை பெற்றிருப்பின் அவர்கள் சார்பான விவரத்தினை படிவம் 2இல் பதிவு செய்து அதற்கான அத்தாட்சி சான்றின் நகலினை முதன்மைக்கல்வி அலுவலர் சான்றொப்பமிட்டு அனுப்பிவைக்க வேண்டும்.


பார்வை (3) காணும் அரசாணையில் கலையாசிரியருக்கான


கல்வித்தகுதிகள் கீழ்க்காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


1. General Qualification:-


A Pass in +2 under 10+2 Pattem


2. Technical Quailfication


Degree with Drawing and Painting of a recognised University in the State approved by UGC or its equivalent or Diploma in Painting or Diploma in Drawing of Annamalai University or A Diploma in Paintings or Commercial Arts or Modelling of the Govemment College of Arts and Crafts or Government Technical Examinations (Higher Grade) in Free Hand Outline and Model Drawing or Government Diploma in Drawing or a Certificate issued by the Tamil Nadu Institute of Architecture and Sculpture, Mamallapuram; and Technical Teachers Certificate:


or


A Diploma in Fine Arts, awarded by the Director of Technical Education or a Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathiyar University or any other equivalent Diploma/Degree in Fine Arts issued by other Universities and boards recognised by University Grants Commission


Provided that the educational qualification 10+2 prescribed shall not apply to the candidates passed SSLC prior to 2005 and successfully undergone the Technical Teachers Certificate examination conducted by the Director of Government Examinations. Tamilnadu


பணிமாறுதல் மூலம் கலையாசிரியர் பணிநியமனம் வழங்க 01.01.2026 நிலவரப்படி மேற்காண் கல்வித்தகுதிகளை பெற்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியரல்லாத பணியாளர்களின் (உதவியாளர். இளநிலை உதவியாளர். ஆய்வக உதவியாளர் பதிவறை எழுத்தர். அலுவலக உதவியாளர், காவலர், நூலகர்) விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிகம் 1 மற்றும் படிவம் 2இல் (தமிழில் மட்டும்) பூர்த்தி செய்து 20/02/2026-க்குள் அனுப்புமாறு அனைத்து கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கல்வி அலுவலர்கள்


இணைப்பு படிவம் 1 மற்றும் 2


பெறுநர்:


(பணியாளர் தொகுதி) 20121


1. அனைத்து முதன்மை கல்வி அலுவ


2. இவ்வலுவலக அ2" பிரிவு


(நகல் கீழ்க்காணும் அலுவலர்களுக்கு பணிந்தனுப்படுகிறது)


1. மாநில திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை- 6.


2 இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை -6.


3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம், சென்னை 6.


5. இயக்குநர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-6.


4. செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-6.


6.இயக்குநர்.பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்.சென்னை-6.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.