அரசு ஊழியர்களுக்கு 2026ஆம் ஆண்டு பொங்கல் போனஸ் அரசாணை (நிலை) எண்: 01, நாள் : 01-01-2026 வெளியீடு
Pongal Bonus 2026 - G.O. Ms. No. 01, Dated : 01-01-2026 Released
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...
தமிழ்நாடு அரசு 2026
கையெழுத்துத் தொடர்
நிதி (படிகள்) துறை
அரசாணை (நிலை) எண்.01. நாள்: 01-01-2026. (மார்கழி-17, திருவள்ளுவர் ஆண்டு 2056)
சுருக்கம்
2024-2025 ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை.
முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து "C" மற்றும் "D" பிரிவு அரசுப் பணியாளர்கள். உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் / பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2024-2025-ஆம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1,000/- பொங்கல் திருவிழா கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
2.2024-2025-ஆம் கணக்காண்டிற்கு "C" மற்றும் "D" பிரிவு சார்ந்த. முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்/பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3.000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
3. 2024-2025-ஆம் கணக்காண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம் / சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் (அங்கன்வாடிப் பணியாளர்கள். குறு அங்கன்வாடிப் பணியாளர்கள்). கிராம உதவியாளர்கள். தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாகப் பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தா பணியாளர்களாகப் பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1,000/- வழங்கிட அரசு ஆணையிடுகிறது.
4. இவ்வாறு அனுமதிக்கப்படும் தற்காலிக மிகை ஊதியமானது 31-03-2025-ஆம் நாளன்று உள்ள "C" மற்றும் "D" பிரிவு ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படவேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.3,000/-என்பதை உச்சவரம்பாகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியத் தொகை கணக்கிடப்பட வேண்டும். திருத்திய சம்பள வீதத்திற்கு முந்தைய சம்பள வீதங்களில் / திருத்திய சம்பள வீதங்களில் சம்பளம் பெறுபவர்களைப் பொறுத்தவரையில், திங்களொன்றுக்கு ரூ.3.000/- என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், தற்காலிக மிகை ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.
5. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் இந்த அரசாணையின் இணைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள உட்பட்டு அனுமதிக்கத்தக்கதாகும். நிபந்தனைகளுக்கு
6. தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் குறித்த செலவினம் சம்பந்தப்பட்ட துறையின் தொடர்புடைய பணிக்கணக்குத் தலைப்பின் கீழ் "301. சம்பளங்கள்" என்ற நுணுக்கத் தலைப்பின் கீழ் வரும் "04. ஏனைய படிகள்" என்ற உள்நுணுக்கத் தலைப்பின் கீழ் அல்லது "302. ஊதியங்கள்" என்ற நுணுக்கத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
த.உதயச்சந்திரன்
அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர்
இணைப்பு
(அரசாணை (நிலை) எண். 01, நிதி (படிகள்) துறை, நாள்: 01-01-2026)
(i) இந்த ஆணையின் படி தற்காலிக மிகை ஊதியம் வழங்குவதற்கான ஊதியங்களை 31-03-2025 அன்றுள்ளவாறான அடிப்படைச் சம்பளம். தனி ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்பட வேண்டும். அரசாணை (நிலை) எண்.21, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள் 05-03-2019-ல் அரசுப் பணியாளர்கள் "C" மற்றும் "D" வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு பொருந்தும்; பிரிவினர் என
(ii) 31-03-2025 அன்று பணியிலிருந்து 01-04-2024 முதல் 31-03-2025 வரையில் ஓர் ஆண்டு முழுவதும் பணியாற்றிய பணியாளர்கள் 30/30 நாட்களுக்குரிய ஊதிய வீதத்தில் இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்டுள்ள தற்காலிக மிகை ஊதியத்தொகை முழுவதையும் பெறத் தகுதி உடையவர்களாவர்:
(II) 2024-2025-ஆம் ஆண்டில் ஆறு மாதமும் அதற்கு மேலும், ஆனால் ஓர் ஆண்டுக்குக் குறைவாகப் பணியாற்றியுள்ள பணியாளர்கள். விகிதாச்சாரப்படி தற்காலிக மிகை ஊதியம் பெறத் தகுதியுடையவர்களாவர். இவ்விதியில் செயல்நோக்கத்திற்காக. 15 நாட்களுக்குக் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. பதினைந்து நாட்களும் அதற்கு மேற்பட்ட பணிக்காலம் முழுமாதப் பணிக்காலமாகக் கருதப்பட வேண்டும்; குறைவான பணிக்காலம்
அதாவது 50 (iv) மிகை ஊதியம். முழு ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும். காசுகளும் அதற்கு மேலும் இருந்தால், அடுத்த ரூபாய்க்கு முழுமையாக்கப்பட வேண்டும். 50 காசுகளுக்குக் குறைவான சில்லறை விட்டுவிடப்பட வேண்டும்.
(v) மிகை ஊதியத்தைக் கணக்கிடுவதற்கான பணிக்கால அளவில், சம்பளமில்லா விடுப்பு நீங்கலாக அனைத்து விடுப்புக்காலம் சேர்த்துக் கொள்ளப்படும். 2025 மார்ச் திங்களில் சம்பளமில்லா விடுப்பில் / அரை சம்பள விடுப்பில் / சம்பளம் இல்லாத கல்வி விடுப்பில் இருந்த பணியாளர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் விடுப்பில் செல்வதற்கு முன் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும்;
(vi) 2024-2025-ஆம் ஆண்டில் எப்போதாவது தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த பணியாளர்களைப் பொறுத்தவரையில், தற்காலிகப் பணிநீக்கக் காலத்தில் வழங்கப்பட்ட பிழைப்பூதியத்தை ஊதியமாகக் கருதக்கூடாது. அத்தகைய பணியாளர்களுக்கு தற்காலிகப் பணி நீக்கக் காலம். பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்போது தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கலாம். ஏனைய இனங்களில் தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியத்தை வழங்குவதற்கு தற்காலிக பணி நீக்கக் காலத்தை சேர்க்க கூடாது. 31-03-2025-க்குப் பிறகு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கத் தடை ஏதுமில்லை;
(vil) 31-03-2025-க்கு முன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்ற /தன்விருப்பத்தின்பேரில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் /பணியிலிருக்கும் போது பணியைத் தொடர இயலாத பணியாளர்கள் மேலே பத்தி-(ii)-க்கு உட்பட்டு, அவர்கள் உண்மையில் ஆற்றிய பணிக்கால அளவின் அடிப்படையில் தற்காலிக மிகை ஊதியம் /சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறத் தகுதி உடையவர்களாவர்.
(vii) வயது முதிர்வடைவதன்பேரில் ஓய்வு பெற்று மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட பணியாளர்கள் தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறத் தகுதி உள்ளவர்கள். அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பும், பின்பும் பணியாற்றிய மொத்த கால அளவு ஆறு மாத கால அளவுக்குக் குறையாமல் இருக்குமானால், மேலே பத்தி (ii) மற்றும் (ill)-க்கு உட்பட்டு, அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய கால அளவுக்கான தகுதிப் பணிக்கால அளவு தனித்தனியாகக் கணக்கிடப்பட வேண்டும். வயது முதிர்வடைந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய கால அளவிற்கும். மீண்டும் பணியில் அமர்த்தப்படுவற்குப் பிந்தைய கால அளவிற்கும் அனுமதிக்கத்தக்க மொத்த தொகை அனுமதிக்கத்தக்க தற்காலிக மிகை ஊதியம் / சிறப்பு தற்காலிக மிகை ஊதியத்தின் அளவிற்கு மிகைப்படாமல் வரையறை செய்யப்பட வேண்டும்; மற்றும்
(ix) "C"-பிரிவில் ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்தவர்கள் விகிதாச்சார அடிப்படையில் தற்காலிக மிகை ஊதியம் பெறத் தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு பணியாளர் ஆறு மாதங்களுக்கும் குறைவாக தொகுதி "C"-பிரிவில் பணிபுரிந்து, பின்னர் "B"-பிரிவில் ஆறு மாதங்களுக்கு மேலாக பணிபுரிந்திருப்பாராயின் அவர் தற்காலிக மிகை ஊதியம் பெற தகுதியற்றவராக கருதப்பட வேண்டும்.
உண்மை நகல் /-
பிரிவு அலுவலர்
OnePlus Bullets Z2 Bluetooth Wireless in Ear Earphones with Mic, Bombastic Bass - 12.4 Mm Drivers, 10 Mins Charge - 20 Hrs Music, 30 Hrs Battery Life (Magico Black) - Neckband


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.