Budget 2026-2027 - முக்கிய தகவல்கள்



நிதிநிலை அறிக்கை 2026-2027 செய்திகள் 


🌹👉9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல்  செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

27 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் இதுவாகும்

🌹👉 இளைஞர்கள் மற்றும்  பெண்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉மருந்து தயாரிப்பு துறைக்காக பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு 

இதன் மூலமாக பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களை எடுப்பதற்கான மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு

தமிழ்நாட்டை போலவே ஒடிசா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் அமைக்கப்படும் என அறிவிப்பு                                             🌹👉"செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு"

செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

🌹👉ஜவுளித்துறைக்கான புதிய திட்டம் அறிவிப்பு மகாத்மா காந்தி பெயரில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 

ஹேண்ட் லூம் கைத்தறி உள்ளிட்டவை இதன் மூலமாக மேம்படுத்தப்படும் இந்தியாவின் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் பலன் பெறும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கான வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

இதற்காக நான்கு மெகா டெக்ஸ்டைல் பார்க்குகள் உருவாக்கப்படும்

மகாத்மா காந்தி  ஸ்வராஜ் திட்டம் என இதற்கு பெயர்

🌹👉மூலதன செலவு ஒதுக்கீடு 12.2 லட்சம் கோடியாக ரூபாயாக உயர்வு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

🌹👉சென்னை பெங்களூர் ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு

🌹👉மருத்துவ சுற்றுலாவை அதிகரிப்பதற்காக நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும்

இது தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படும் 

மருத்துவ சிகிச்சைகளுடன் கல்வி மற்றும் நோய் கண்டறிவது குணப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மேற்கொள்ளப்படும் 

இதன் மூலமாக மருத்துவர்களுக்கும் மற்ற துறை சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

🌹👉ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்.

 3 தேசிய ஆயுர்வேதா மருத்துவமனைகள் அமைக்கப்படும்

🌹👉AIக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும்

AI  மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது

🌹👉நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் தலா ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்

🌹👉ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்படும்

🌹👉தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

🌹👉ஆந்திரா - தமிழ்நாடு புலிகட் பகுதியில் பறவை கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்

🌹👉தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

🌹👉"12 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி உள்ளோம்" 

-நிர்மலா சீதாராமன் உரை

🌹👉"உலக சந்தைகளுடன் இந்தியா ஆழமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்

விக்ஸித் பாரத்தை நோக்கி இந்தியா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கும்"

 - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉எளியமுறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும்                                                                             🌹👉பாஜக அரசின் சீரிய நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி 7% ஆக அதிகரித்துள்ளது: நிர்மலா சீதாராமன்!

🌹👉செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

🌹👉“மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவுக்கு அறிமுகம்

🌹👉விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

 🌹👉நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு 

பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும் 

🌹👉குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉"மூலதனச்செலவு ரூ.12.20லட்சம் கோடியாக உயர்வு"

🌹👉புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு

🌹👉கோயில் நகரங்களுக்கு 

முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்

நிர்மலா சீதாராமன்

🌹👉"சென்னை - பெங்களூரு; சென்னை - ஐதராபாத் இடையே அதிவேக  ரயில் வழித்தடம் அமைகிறது"  - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉"ஜவுளித்துறை வளர்ச்சிக்கு புதிய திட்டம்"

உலக அளவில் ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் - நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்

🌹👉“பொது போக்குவரத்துக்கு நாடு முழுவதும் 20 நீர்வழித் தடங்கள் அமைக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉மும்பை - பூனே, ஐதராபாத் - சென்னை, புனே - ஐதராபாத் 

இடையே அதிவிரைவு 

ரயில் தடங்கள் உருவாக்கப்படும்

🌹👉நாட்பட்ட நோய்களை தடுக்கும் நடவடிக்கைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்

🌹👉 ரூ.5,000 கோடி முதலீட்டில் நாடு முழுவதும் பொருளாதார மண்டலங்கள்

🌹👉வெளிநாடு வாழ் இந்தியர்கள் 

இனி இந்திய பங்குச்சந்தையில் 

முதலீடு செய்யலாம் - -நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

🌹👉“25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉நாட்டின் வளர்ச்சிக்கு 7 புதிய "அதிவேக ரயில் வழித்தடங்கள்" அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவிப்பு! 

நகரங்களை அதிவேகமாக இணைப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த 'வளர்ச்சி இணைப்பான்களின்' நோக்கம்

🌹👉ஸ்மார்ட் சிட்டியாக மாறும் சிறு நகரங்கள்.! இந்தியாவின் முகத்தை மாற்றப்போகும் மெகா திட்டங்கள்.!

🌹👉தென்னிந்தியாவிற்கு  ஜாக்பாட்!

அறிவிக்கப்பட்டுள்ள 7 வழித்தடங்களில் 3 முக்கிய வழித்தடங்கள் சென்னையை இணைக்கின்றன: 

✅ சென்னை - பெங்களூரு 

✅ சென்னை - ஹைதராபாத் 

✅ ஹைதராபாத் - பெங்களூரு

பயண நேரம் பாதியாக குறையும், வணிகம் செழிக்கும்! 

🌹👉இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்காக ஒரு விடுதி அமைக்கப்படும்

-பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

🌹👉“கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!” - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

 🌹👉வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி! 

இந்த அதிவேக ரயில் திட்டங்கள் வெறும் போக்குவரத்துக்கானவை மட்டுமல்ல, Tier-2 மற்றும் Tier-3 நகரங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் "வளர்ச்சி இணைப்பான்கள்" (Growth Connectors). இதன் மூலம் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்!

🌹👉நவீனமயமாகும் இந்திய ரயில்வே! 

அதிவேக ரயில் வழித்தடங்களுடன், பாதுகாப்புக்காக Kavach 4.0 தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதியை நாடு முழுவதும் ஏற்படுத்துவதே இலக்கு!

🌹👉பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

🌹👉தமிழ்நாட்டின் தோழி விடுதிகளை பின்பற்றி நாடு தழுவிய திட்டத்தை அறிவித்தது ஒன்றிய அரசு

🌹👉இந்தியாவில் தரம் மிகுந்த விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கப்படும் 

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉வளர்ச்சியைத் தூண்ட 6 முக்கியத் திட்டங்கள்! 🚀

1️⃣ 7 துறைகளில் உற்பத்தி உயர்வு 

2️⃣ பாரம்பரிய தொழில் மறுசீரமைப்பு 

3️⃣ சாம்பியன் MSME உருவாக்கம் 

4️⃣ உள்கட்டமைப்பு விரிவாக்கம் 

5️⃣ நீண்டகால உறுதித்தன்மை 

6️⃣ நகர பொருளாதார மண்டலங்கள்

🌹👉வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய செய்தி!

புதிய வரி விதிப்பு முறையில் மாற்றங்கள்: 

✅ ₹4 லட்சம் வரை வரி இல்லை 

✅ வரி அடுக்குகளில் சீர்திருத்தம் 

சாமான்ய மக்களின் சேமிப்பை உயர்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

🌹👉மத்தியபட்ஜெட்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

🌹👉தமிழகத்திற்குப் புதிய கனிம வழித்தடம்!

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசாவில் 'அரிய வகை கனிம வழித்தடங்கள்' (Rare Earth Corridors) அமைக்கப்படும். 

ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை பெற வாய்ப்பு! 

🌹👉“ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉மாணவர்களின் படைப்பாற்றலுக்குப் புதிய சிறகுகள்!

மும்பை 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ்' (IICT) உதவியுடன்: ✅ 15,000 மேல்நிலைப் பள்ளிகள் 

✅ 500 கல்லூரிகள் ஆகியவற்றில் 

AVGC Content Creator Labs அமைக்கப்படும்.

🌹👉எதிர்கால வேலைவாய்ப்பிற்குத் தயார்!

அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் (VFX) துறையில் இந்தியாவை உலக மையமாக மாற்ற இந்த ஆய்வகங்கள் உதவும். பள்ளிக்காலத்திலேயே மாணவர்களுக்குத் நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. 

🌹👉“பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்!” -நிர்மலா சீதாராமன்

🌹👉கிழக்கு இந்தியாவிற்குப் புதிய மகுடம்!

✅கிழக்கு பிராந்தியத்தில் (Northeast) புதிய 'தேசிய வடிவமைப்பு நிறுவனம்' (NID) அமைக்கப்படும்-  நிதியமைச்சர்

✅இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் படைப்பாற்றல் மற்றும் தொழில்முறை வடிவமைப்பு கல்வி பெரும் ஊக்கம் பெறும். 

🌹👉20,000 புதிய நிபுணர்கள்!

இந்த புதிய திட்டத்தின் மூலம் கால்நடை மற்றும் துணை மருத்துவ நிபுணர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் அதிகமாக உயர்த்தப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் மேம்படும்!

🌹👉 “Animation, VFX, Gaming மற்றும் Comics (AVGC) துறைகளில் மாணவர்களை மேம்படுத்த AVGC Content Creator Lab-கள், 1,500 பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் அமைக்கப்படும்.”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉ஆயுர்வேத மேம்பாட்டிற்குப் புதிய வேகம்! 

✅ 3 புதிய அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் (AIIA) 

✅ ஆயுஷ் மருந்தகங்கள் & ஆய்வகங்கள் தரம் உயர்வு 

✅ ஜாம்நகர் WHO பாரம்பரிய மருத்துவ மையம் மேம்பாடு

🌹👉பாரம்பரிய மருத்துவத்தின் உலக மையம்! 

குஜராத், ஜாம்நகரில் உள்ள WHO பாரம்பரிய மருத்துவ மையத்தின் (GTMC) உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வு வசதிகள் தரம் உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு

🌹👉ஆயுஷ் மருந்து உற்பத்தி & தரம்

நாடு முழுவதும் ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் சோதனை ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும். பாதுகாப்பான மருந்துகள் கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும்! 

🌹👉மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு SHE MART என்ற பெயரில் கடைகள் அமைக்கப்படும்  - நிர்மலா சீதாராமன்

🌹👉மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41% சதவீதமாகவே தொடரும்

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிப்பு 

🌹👉சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்கு போக்குவரத்து!

✅ டன்குனி - சூரத் இடையே புதிய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் (DFC). 

✅ அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய தேசிய நீர் வழித்தடங்கள். 

✅ சரக்கு கையாளும் திறன் மேம்பாட்டிற்குப் பயிற்சி நிறுவனங்கள்! 

🌹👉மத்திய பட்ஜெட்டில் தமிழக சுற்றுலா

"தமிழ்நாட்டில் உள்ள பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங்கள் மேற்கொள்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் அகழ்வாராய்ச்சி தலமான ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் 3 பார்வை மையங்கள் அமைக்கப்படும்"

• நிர்மலா சீதாராமன்

 🌹👉"வருமான வரி தாக்கல் எளிமைப்படுத்தப்படும்"

“வருமானவரி தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும்“

"நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் கால அவகாசம் நீட்டிப்பு" 

“தனிநபர்கள் போல நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகின்றது“ 

-நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🌹👉“மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிப்பு!”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉“கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கான ஆதார வரி (TCS), 5%லிருந்து 2%ஆகக் குறைக்கப்படும்!”

-நிர்மலா சீதாராமன், ஒன்றிய நிதியமைச்சர்

🌹👉Data Centre டெவலப்பர் நிறுவனங்களுக்கு வரி விடுமுறை -நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்

🌹👉வரி நடைமுறையில் வெளிப்படைத்தன்மை!*

புதிய 'விதிமுறை சார்ந்த முறை' மூலம் தகுதியான வரிதாரர்களுக்குத் தானாகவே சலுகைச் சான்றிதழ் கிடைக்கும். இது வரி ஏய்ப்பைத் தடுப்பதுடன், நேர்மையான வரிதாரர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும்

🌹👉 மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது 

பிரதமர் நரேந்திர மோடி . பேச்சு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.