2026-2027 : RTE மூலம் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்

 

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு , தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% இலவச இடஒதுக்கீடு சேர்க்கை  நடைமுறை - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரின் செயல்முறைகள், சென்னை - 600 006.


ந.க. எண் . 2335/E1/2026, நாள். 27.03.2026


பொருள்

 குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009, பிரிவு 12 (1) (C) இன்படி- 2026 2027 ஆம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை (LKG / I Std) வகுப்பில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்குதல் நடைமுறைகள் அறிவுரை வழங்குதல் - சார்பாக. சேர்க்கை


பார்வை :


1. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 மற்றும் தமிழ்நாடு விதிகள். 2011.


2. அரசாணை (நிலை) எண்.271 பள்ளிக் கல்வித்துறை (சி2) नं. 25.10.2012.


3. அரசாணை (நிலை) எண் 60. பள்ளிக் கல்வித் (எக்ஸ்2) துறை, श्री 01.04.2013.


4. அரசாணை (நிலை) எண் 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, आनी 12.05.2014.


5.அரசாணை (நிலை) எண் 66, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, फ्रन 07.04.2017.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 ໙ 12 (1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std) குறைந்த பட்சம் 25% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பார்வையில் உள்ள அரசாணைகளில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. அவ்வழிகாட்டுதல்களைப் பின்பற்றி 2013-14 முதல் 2025 2026 ஆம் கல்வியாண்டு வரை மாணாக்கர் சேர்க்கை செய்யப்பட்டு பயனடைந்துள்ளனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறும் வகையில், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, பார்வை (5) இல் கண்ட அரசாணையில் கூடுதல் வழிகாட்டுதலும் திருத்திய கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி RTE Act 2009 பிரிவு 12 (1) (சி ) யின் 25 % இடஒதுக்கீடு அடிப்படையிலாக மாணாக்கர்கள் சேர்க்கை குறித்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு ஆண்டும் மேற்காண் நடைமுறை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி மே 29 க்குள் முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பார்வையில் கண்ட அரசாணைகளின்படி, 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைமுறைகள் சார்ந்து கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.


1. சட்டப்பிரிவு 12 (1) (சி) இன் கீழ் சேர்க்கை வழங்க தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள், 2011, விதி எண் 4 (1) இன்படி எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் சுற்றளவு ஆகும்.


2. RTE Act-ன்படி 25% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கைக்கு தகுதியான இடங்களின் எண்ணிக்கை, 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் நுழைவு நிலை வகுப்பில் (L.K.G/I) EMIS இணையதளத்தின்படி உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையில் 25% ஐ கணக்கிட்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் EMIS login-ல் 6.4.2026 அன்று வெளியிடப்படும். சார்ந்த பள்ளியின் முதல்வர் பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை 7..4.2026 அன்று 12(1)(சி) இன் கீழ் 25% சேர்க்கைக்கான தகுதியான இடங்களை (Alloted Seat) பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும். 15.4.2026 அன்றே பள்ளி வாரியான தகுதியான இடங்களின் எண்ணிக்கை இணைய தளத்திலும் (tnemis.tnschools.gov.in) வெளியிடப்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.