District Level and Block Level Training for New Textbook
1 முதல் 3ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களுக்கான பயிற்சி - SCERT செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 06
ந.க.எண் : 2840773 / எப்1/ 2026 , நாள் 18.05.2026
பொருள்:
பள்ளிக்கல்வி பயிற்சி 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் 1முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாவட்ட மற்றும் வட்டார அளவில் அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்களுக்கான பயிற்சியினை அனைத்து மாவட்டங்களில் நடத்துதல் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை பங்குபெற செய்தல் அறிவுரை வழங்குதல் தொடர்பாக
பார்வை
இந்நிறுவன இயக்குநரின் செயல்முறை ஆணை ந.க.எண் 2640773 / எப்.1/ 2026 , நாள் 24.04.2026 மற்றும் 05.05.2026
பார்வையில் காணும் இந்நிறுவன இயக்குநரின் ஆணையின்படி 2026-2027 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் புதிய பாடநூல்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவிலான பயிற்சியினை 3 நாள்களில் கீழ்க்கண்ட அட்டவணையின்படி வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்ட அளவில் பயிற்சி வழங்குதல்
வ.எண் நாள் பயிற்சி மேற்கொள்ளப்படும் பாடம்
1. 26.05.2026 தமிழ்
2. 27.05. 2026 ஆங்கிலம் மற்றும் கணிதம்
3. 29.06.2026 அறிவியல், சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
வட்டார அளவில் பயிற்சி வழங்குதல்
வ.எண் நாள் பயிற்சி மேற்கொள்ளப்படும் பாடம்
1 01.06.2026 தமிழ்
2 02.06.2026 ஆங்கிலம் மற்றும் கணிதம்
3 03.06.2026 அறிவியல். சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
மேற்படி மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சியினை உரிய மேற்கொள்ளவும். 25.06.2026 அன்று மாவட்ட அளவிலான பயிற்சிக்கு அனைத்துப் பாடங்களுக்கான தயாரிப்பு பணிமனையினையும் , 30-05-2026 அன்று வட்டார அளவிலான பயிற்சிக்கு அனைத்துப் பாடங்களுக்கான தயாரிப்பு பணிமனையினையும் , மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொடர்புடைய கல்வியாளர்கள், முதநிலை விரிவுரையாளர்கள் விரிவுரையாளர்கள். பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சியில் கருத்தாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களாக கலந்துகொள்ளும் வகையில் உரிய நாள்களில் பங்குபெற ஏதுவாக பணிவிடுவிப்பு செய்திடுமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேற்படி பயிற்சிகளுக்கான செலவினம் தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு பின்னர் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இயக்குநர்
பெறுநர்
1. முதல்வர்கள்.அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள்.
2. அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்.
நகல்
1 கூடுதல் முதன்மைச் செயலர் பள்ளிக்கல்வித் துறை தலைமைச் செயலகம், சென்னை 09 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.
2. மாநிலத்திட்ட இயக்குநர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக பணித்து அனுப்பப்படுகிறது.
3. இயக்குநர். பள்ளிக்கல்வி இயக்ககம் சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை 06 அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.