Computer Instructor Pay Re-fixation தொடர்பான தகவல்கள்

 


நண்பர்களே வணக்கம் 🙏

Computer Instructor Re-fixation சார்ந்த பதிவு


1) முந்தைய காலகட்டத்தில் பல்வேறு நியமன கணினி ஆசிரியர்கள் TRB தேர்வின் மூலம் நவம்பர் 2008 இல் நியமனம் (BT pay 5500/ GP 4600) 


2) GO 26 நாள் 12.02.2019 இன் படி தகுதியான கணினி ஆசிரியர்கள் ( as per NCTE Regulations 2014) 

8 ஆண்டு பணி முடித்து இருந்ததால் Comp inst Grade 1 ஆக மாற்றம்/பதவி உயர்வு ( PG cadre)


3) 2008+8= 2016 நவம்பரில் Grade 1 ஆக மாற்றம் பெற வேண்டும்..

அப்படி என்றால் 2018 நவம்பர் தேர்வு நிலை பாதிப்பு எனவே அவர்கள் கோரிக்கை ஏற்று அரசு Grade 1 மாற்றம்/பதவி உயர்வு

அரசாணை வெளிவந்த நாள் 12.02.2019 முதல் நடைமுறைக்கு வரும் என 2/9/2020இல்  தெளிவுரை  வழங்கப்பட்டது.


4) 2008 க்கு பிறகு நியமனம் பெற்ற கணினி ஆசிரியர்கள் 12.2.2019 இல் 8 ஆண்டு பணி முடிக்காத ஆசிரியர்களை Grade 1 ஆக மாற்றம் செய்ய தடங்கல் . நீதிமன்ற தீர்ப்பின் படி

 GO 103 DT 5/11/2020 இல் 8 ஆண்டுகள் என்ற நிபந்தனை தளர்வு 


5) GO 107 DT 17.11.2020 இல் இதற்கு தெளிவுரை வெளியீடு..


அதாவது 12.2.2019இல் பணியில் இருந்த அனைத்து தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்கள் Grade 1 ஆக மாற்றம்/பதவி உயர்வு...


 *தங்களின் புரிதலுக்கு மேலே உள்ள முன் கதை சுருக்கம்* ..


6) 2019 அரசாணை 26 இல் *ஒர் இடத்தில்*  ( *V* point) மட்டும் பதவி உயர்வு ( *promoted* as ) என்ற வார்த்தை உள்ளது...

எனவே பெரும்பாலும் grade 1 ஆக மாற்றம் செய்யும் போது 12.2.2019 இல் FR 22B இன் படி ஊதியம் நிர்ணயம் செய்தார்கள்.


7) Level 16 to Level 18 change போது... பலர் option கொடுத்து 1/10 regular increment, சிலர் 1/4 regular increment 2019 இல் வாங்கி பிறகு (3%) *ஒரு increment* கொடுத்து fix செய்தார்கள்...

அன்றைய காலகட்டத்தில் அது சரியே...


8) தணிக்கை தடை ஏற்படுத்தப்படுகிறது..


சில மாவட்டங்களில் அது நிலை மாற்றம் (upgrade)

தான் பதவி உயர்வு அல்ல என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது...

எனக்கு தெரிந்து விருதுநகர் மாவட்டத்தில் அப்போதைய CEO Madam , joint sitting போட்டு pay re-fixation செய்தார்கள்...


பாதிக்கப்பட்ட கணினி ஆசிரிய நண்பர்கள் நீதிமன்றங்களுக்கு சென்றனர்...


9) அரசாணை 23 நாள் 3/2/25 இல் அரசணை 26 இல் உள்ள *promoted* as என்ற வார்த்தை *upgrade* as என திருத்தம் செய்யப்படுகிறது...


10) கணினி பயிற்றுநருக்கு பதவி உயர்வு என கருதி  (  *FR 22B* ) இன் படி ஊதியம் நிர்ணயம் செய்து இருந்தால் அதை *மாற்றம்* /திருத்தம் செய்ய வேண்டும் என்று DSE இல் 19/2/25 இல் சுற்றறிக்கை வருகிறது...


அதாவது FR 22B fixation இருப்பின் *FR 23* படி re fixation...  செய்ய உத்தரவு..

( குறிப்பு - பல மாவட்டங்களில் பல பள்ளிகளில் *2025* இல் re fixation செய்து விட்டார்கள்...

பலர் 12/2/19 முதல் கூடுதலாக பெற்ற ஒரு *increment* தொகையை திரும்ப கட்டி விட்டார்கள் ) 


11) DSE 19/2/25 இல் வெளியிட்ட கடிதத்தில் re-fixation என்று மட்டுமே சொல்லி இருந்தார்கள்...

12/2/19 முதல் 19/2/25 வரை கூடுதலாக பெற்ற தொகையை பிடித்தம் *செய்யுங்கள் என்று சொல்ல வில்லை..*

பிடித்தம் *செய்ய வேண்டாம்* என்றும் சொல்ல வில்லை...


இதை எதிர்த்து Gopi, Sankaralingam என்ற இரு கணினி ஆசிரியர்கள் 

நீதிமன்றத்தை அணுகினார்கள்...


12) இருவர் நீதிமன்றங்களுக்கு சென்ற காரணத்தால்...

பல பள்ளிகளில் re fixation செய்ய வில்லை..

Amount recovery செய்யவில்லை...


சில இடங்களில் தலைமை ஆசிரியர்கள் அந்த வழக்கு அந்த இருவருக்கு மட்டுமே பொருந்தும் என கூறி...

 *Re-fixation, Recovery* செய்தார்கள்...

பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றங்களுக்கு சென்றனர் 


13) தற்போது அந்த இருவர் (+ Batches) தொடுத்த வழக்கில் *இறுதி* தீர்ப்பு 23.2.26 அன்று வந்துள்ளது....


14) பள்ளி கல்வி இயக்குநர் அவர்கள் அந்த *தீர்ப்பின்* அடிப்படையில் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும்

FR 22B இல் கீழ் ஊதியம் நிர்ணயம் செய்து இருந்தால்..

 *FR 23 படி re-fixation மட்டும்* செய்ய சொல்லி உள்ளார்கள்...

 *1/5/26* முதல் ஊதியம் மாற்றம் கட்டாயம் கடைபிக்க வேண்டும்..


தீர்ப்பின் முக்கிய அம்சம்


இது அந்த ஆசிரியர்கள் தவறு இல்லை எனவே *recovery கூடாது* ...


15) இதுவரை pay மாற்றம் செய்ய வில்லை எனில் *1/5/26 முதல் மாற்றம்* செய்ய வேண்டும்... ( முந்தைய காலகட்டத்தில் 12/2/19 முதல் கூடுதலாக *பெற்ற தொகையை பிடித்தம் செய்ய தேவையில்லை/ கூடாது*)


மேற்காண் அரசாணை கடிதம் தெளிவுரை செயல்முறைகள் என 27 பக்க தொகுப்பு *இணைத்துள்ளேன்* ) 


இரண்டு பக்க கடிதத்திற்கு

27 பக்க இணைப்பா 🤪


இந்த 15 points படித்த பிறகு ரொம்ப குழப்புகிறது 🤣


அதெல்லாம் இருக்கட்டும் ....


 *தலைமை ஆசிரியர் என்ன செய்ய வேண்டும்...*


தங்களின் பள்ளியில் கணினி ஆசிரியர் 2019 க்கு பிறகு PG TRB மூலம் direct requirement எனில் எதுவும் பார்க்க வேண்டாம்... அதற்கு முன் நியமனம், Computer instructor Grade 1ஆக 12/2/19 இல் மாற்றம் எனில் 


16) கணினி ஆசிரியரின் 12/2/19 பிறகு *ஊதிய நிர்ணய முறையை சரிபார்க்கவும்* ..

(Level 16 to Level 18 change)


17) *ஏற்கனவே  2025* இல் *re-fixation* செய்து இருந்தால் இப்போது *எதுவும் செய்ய வேண்டாம்* .


18) பதவி உயர்வு என்று ஓர் ஊக்க ஊதிய உயர்வு வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்து இருந்தால்...

1/5/26 இல் re-fixation மட்டும் செய்ய வேண்டும்...

( *பிடித்தம்* எதுவும் செய்ய *வேண்டாம்* ) 

 *அதாவது ஒரு தளம்* ( one cell) *இறக்கம்* செய்ய வேண்டும்

Eg..1/4/26 இல் 59100 (Level 18 cell 17) எனில்  re-fixation பிறகு 1/5/26 இல் 57400 ( Level 18 cell 16 ) 


19) அரசாணை/DSE கடிதத்தின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் re-fixation 12/2/2019 முதல் செய்து *செயல்முறைகள்* வெளியிட வேண்டும்..

அதற்கு பிறகு வழங்கப்பட்ட *ஆண்டு ஊதிய உயர்வுகளை* மறு நிர்ணயம் செய்ய வேண்டும்..

1/5/26 ஊதிய மாற்றம்..

( 12/2/19 to 30/4/26  *recovery / calculation தேவை இல்லை* ) ...


20) 12/2/2019 க்கு முன் இருந்த *ஆண்டு ஊதிய உயர்வு நாள்* தான் இனி தொடரும்....


ஒருவேளை 12/2/2019 fixation போது ஆண்டு ஊதிய உயர்வு நாள் *மாறி* இருந்தால் தற்போது அதை *பழைய ஆண்டு ஊதிய உயர்வு நாளுக்கு மாற்றம்* செய்ய வேண்டும்....


Eg... 11/2008 appointment

Regular increment 1/10...


1/10/2018 regular increment... (Level 16)

12/2/2019 Level change to PG (Level 18)

1/10/2019 next increment...

(Level 18).... So on...


Next increment..

1/10/2026


தங்களின் *புரிதலுக்கு* சுருக்கமாக

 *FR23 இல் fixation க்கு option எல்லாம் வழங்க இயலாது* ..


 *As on date (12/2/2019) fixation....*

 1/10/2019 இல் பழைய ஊதியத்தில் ஆண்டு ஊதிய உயர்வு பெற்ற பிறகு fixation செய்து கொள்கிறேன் என சொல்ல இயலாது) 


 *இரண்டு இணைப்புகள்* 


1) Grade 1 change தொடர்பான தொகுப்பு (27 பக்கம்)

2) *2006 முதல் கணினி* பணியிடங்கள் தோற்று விக்கப்பட்ட அரசாணை/செயல்முறைகள்/ திருத்தம்/மாற்றம் செய்யப்பட்ட பள்ளி பெயர் பட்டியல் உடன் தொகுப்பு ( *183பக்கம்* ) 


தகவலுக்காக

 க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

மதுரை மாவட்டம்

6/5/26


Computer instructor refixation 

அரசாணைகள் Google drive மூலம் Open செய்யலாம்


https://drive.google.com/file/d/1YFWVC9Y3D39mc1idLV-uhY7g0TAS1AIY/view?usp=drivesdk

...



https://drive.google.com/file/d/1s0YMkUDMWKTwC2w7NT6EYPUYo5bv9ka5/view?usp=drivesdk


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.