2026-2027 - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியைப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



  2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் | மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


Financial Year 2026-2027 – Allocation of 50% of the Composite School Grant to districts for government schools (first phase) and guidelines | Proceedings of the State Project Director



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை -06


மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண். 1806/C1/CSG/SS/2026, நாள். 23.06.2026


பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2026-2027ஆம் நிதியாண்டு - அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியத் தொகை (Composite School Grant) முதல் கட்டமாக 50% நிதியை மாவட்டங்களுக்குப் பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்பு.


பார்வை:


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு-2018.


மத்திய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2025-2026 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2024-2025ன் படி பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பரிந்துரை வழங்கியுள்ளது.


முதல் கட்ட தொகையினை அனைத்து அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இத்தொகையினை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) வங்கி கணக்கிற்கு 03 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.