Issuance of Community & Residence Certificates within Schools | DSE Proceedings



பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ் விவரங்கள் மற்றும் ஆதார் எண்ணை  School Login App ல் 13.07.2026க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு 


Issuance of Community Certificates and Nativity certificates within schools - Proceedings issued by the Director of School Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6


பிறப்பிப்பவர்: முனைவர் ச. கண்ணப்பன்


ந.க. எண் : 12328/இ/இ2/2025 , நாள் : 22.06.2026


பொருள் : பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு பயிலும் பள்ளிகளிலே சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் வழங்குதல் சார்ந்து அரசாணை பெறப்பட்டது - சான்றுகள் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கை- School Login App-பதிவேற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண்ணை பதிவேற்றம் மேற்கொள்ள கோருதல் - தொடர்பாக.


பார்வை

1. அரசாணை (நிலை)எண்.06, பள்ளிக் கல்வி (பக5(2)த்துறை , நாள்.09.01.2026.

2. இவ்வியக்க இதே எண்ணிட்ட கடிதம் நாள். 11.06.2026


பார்வை 2 இல் காணும் கடிதத்தின் மீது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.


2026-2027 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பில் பயிலும் மாணாக்கர்கள் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களில் (இரு வகை சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விவரம் மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படும் மாணாக்கர்களின் விவரம் ஆகியவற்றை தமிழ்நாடு கல்வி மேலாண்மை தகவல் மைய School Login-இல் உடனடியாக சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் ஆதார் எண் மற்றும் இரு வகை சான்றுகள் பெற்றிருக்கும் மாணாக்கர்கள்/ தேவைப்படும் மாணாக்கர்கள் விவரங்களை ஆம்/இல்லை (Yes/No) என பதிவுகள் ஜூலை 13ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கி இப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


பள்ளிக் கல்வி இயக்குநர்


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

(மின்னஞ்சல் மூலம்)


நகல்: அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)


நகல்:

வருவாய் நிருவாக ஆணையர்,

எழிலகம், சேப்பாக்கம், சென்னை -05 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.