இந்திய பாஸ்போர்ட்-க்கு 125வது இடம்
2026 சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில், மொத்தம் 197 நாடுகளில் இந்திய பாஸ்போர்ட் 125வது இடம். இது கடந்தாண்டை விட ஒரு இடம் சரிவாகும்.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூட்டான், நேபாளம், பாலஸ்தீனம், ஜமைக்கா உட்பட 26 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது 'விசா ஆன் அரைவல்' மூலம் பயணிக்க முடியும்.
இப்பட்டியலில் சுவீடன் முதலிடம், சுவிட்சர்லாந்து 2வது இடம், ஆப்கானிஸ்தான் கடைசி இடம்.
Indian passport ranked 125th.
சர்வதேச குடியுரிமை ஆலோசனை நிறுவனமான 'குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்' (Global Citizen Solutions) வெளியிட்டுள்ள 2026 சர்வதேச பாஸ்போர்ட் குறியீட்டில் இந்திய பாஸ்போர்ட் 125-வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் 197 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டைவிட ஒரு இடம் பின்தங்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பின்லாந்து நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.
குறியீட்டின் முக்கிய விவரங்கள்:முக்கிய காரணிகள்:
பயண சுதந்திரம் (50%), முதலீட்டு வாய்ப்புகள் (25%), மற்றும் வாழ்க்கைத் தரம் (25%) ஆகிய மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.
பயண சுதந்திரம்: இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பூட்டான், நேபாளம், ஜமைக்கா, மக்காவ் உள்ளிட்ட 26 நாடுகளுக்கு விசா இன்றியோ அல்லது 'அரைவல் விசா' (Visa on Arrival) மூலமாகவோ பயணம் செய்யலாம். அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 88 நாடுகளுக்கு செல்ல முன் அனுமதி விசா கட்டாயமாகும்.
பிற பிரிவுகள்: பயண சுதந்திரத்தில் 136-வது இடத்திலும், முதலீட்டு வாய்ப்புகளில் 94-வது இடத்திலும், வாழ்க்கைத்தரத்தில் 118-வது இடத்திலும் இந்தியா உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.