TET தேர்ச்சி மதிப்பெண் 40% ஆக நிர்ணயிக்கக் கோரிக்கை - நாளிதழ் செய்தி
டெட் தேர்வு: தேர்ச்சி மதிப்பெண் 40%-ஆக நிர்ணயிக்கக் கோரிக்கை
நன்னிலம், ஜூலை 5: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்தேர்வு)40% மதிப் பெண் எடுத்தால் தேர்ச்சி என நிர்ணயம் செய்ய வேண்டுமென ஆசிரியர் கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தியது. திருவாரூர் மாவட்டத்தில், 900-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வை எழுதி னர். இத்தேர்வு குறித்து ஆசிரியர்கள் கூறியது:
தற்போது நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பாடத்திட்டத் திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் 9 மற் றும் 10-ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்குரிய பாடத் திட்டத்திலிருந்து கேள் விகள் கேட்கப்பட்டுள்ளன. எனவே, தனித்தனி பாடத்திட்டம் அறி வித்து, அதிலிருந்து சற்றும் விலகாமல், தேர்வுகள் நடத்தப்பட வேண் டும். அரசு விதிகளின்படி முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் 60 % மதிப்பெண்களும், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் 50% மதிப்பெண்களும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் 40% மதிப்பெண்களும் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி என்ற நிலை உள்ளது.
இதனை ஒட்டுமொத்தமாக மாற்றி, அனைவரும் 40 சதவீதம் மதிப் பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என அரசு அறிவிக்க வேண்டும்.
இரண்டு நாள் தேர்வுகளுக்கிடையே குறைந்தபட்சம் ஒரு வார இடை வெளி அவசியம் இருக்கும் விதத்தில் எதிர்காலத்தில்தேர்வுநடத்தவேண் டும். தற்போது 25 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்கள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ததுபோல் இல்லாமல், 20 கி.மீ. தொலைவுக்குள் மையங் களை ஒதுக்கீடு செய்திட வேண்டும் என ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை அரசுக்கு வேண்டு கோளாக தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.