Census பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையை கீழே தள்ளி 7 பவுன் தாலி செயின் பறிப்பு



 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியையை கீழே தள்ளி 7 பவுன் தாலி செயின் பறிப்பு


 பட்டப்பகலில் ஜிஎஸ்டி சாலையில் வழிப்பறி 


சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் செல்வி (வயது 49) இவர் ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.


விடுமுறை தினமான நேற்று (22-08-2026) மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்காக காலையில் சென்று அவர் பணி முடித்துவிட்டு வண்டலூர் ஜிஎஸ்டி சாலையை  வழியாக வண்டலூர் மேம்பாலத்தில் செல்வதற்காக படிக்கட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது பின்னால் நடந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரை கீழே தள்ளி அவர் கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க சங்கிலியை தாலி செயினை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றான்.


 பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு திருடனை பிடிக்க முயன்றும் ரயில்வே தண்டவாளம் வழியாக தப்பிச் சென்றான். 


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் பல்வேறு இடர்பாடுகளை ஆசிரியர் சமூகம் எதிர்கொண்டாலும் வெற்றிகரமாக அந்த பணியை முடிக்கும் தருவாயில் உள்ளனர். இந்த ஆசிரியையின் கண்ணீரை துடைத்து அவருடைய செயினை துரிதமாக கண்டுபிடிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 




Night Driving Glasses with Cleaning Kit, Yellow Polarized Lens, UV400, Anti-Glare Glasses for Riding Bike and Car


https://link.amazon/B04LIn2Y9


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.