G.O.No. 177 , Dated. 31-07-2026 - புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் கூடுதல் பொறுப்பு



G.O.No. 177 , Dated. 31-07-2026 - புதிய பள்ளிக்கல்வி இயக்குநர் கூடுதல் பொறுப்பு


பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு, கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் திருமதி. ந.லதா அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசாணை வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி திருமதி. ந. லதா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர். சென்னை 6 பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக்கல்வி(ப.க1(1))த் துறை


அரசாணை (வாலாயம்) எண். 177 , நாள். 31.07.2026


திருவள்ளுவராண்டு, 2057


பராபவ, ஆடி-15


படிக்கப்பட்டது:-


அரசாணை (1டி)எண்.150, பள்ளிக்கல்வித் துறை, நாள் 31.07.2026


ஆணை:


பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் 31.07.2026 பிற்பகல் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி, தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் திருமதி. ந. லதா அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.


(ஆளுநரின் ஆணைப்படி)


சந்தர மோகன். B


அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்


பெறுநர்


திருமதி.ந.லதா.

இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை-6.


பள்ளிக்கல்வி இயக்குநர் சென்னை-6.


பள்ளிக் கல்வித் துறையின் இதர துறைத் தலைவர்கள், சென்னை -6/2.


சம்பளக் கணக்கு அலுவலகம் (தெற்கு), சென்னை -35.


மாநிலக் கணக்காயர். சென்னை 18.


பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்


நகல்


அவர்களின் நேர்முக உதவியாளர், சென்னை 9


பள்ளிக் கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளரின்


முதன்மை தனிச்செயலர், சென்னை-9.


பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து அலுவலர்கள் / பிரிவுகள், சென்னை-9.


இருப்புக் கோப்பு/ உதிரி.


//ஆணைப்படி அனுப்பப்படுகிறது//

 

 பிரிவு அலுவலர் 

31/07/26


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.