தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 Group 1 அலுவலர்களுக்கு IAS பதவி உயர்வு


கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 


ஆண்டு வாரியாக ஏற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆண்டு வாரியாக Group 1 அலுவலர்களுக்கு IAS பதவி வழங்கி மத்திய அரசு உத்தரவு


தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 குரூப்-1 அலுவலர்களுக்கு ஐ.ஏ.எஸ். பதவி உயர்வு: 


இதுதொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை  வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:


ஒன்றிய அரசு அரசிதழ் வெளியீடு


மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் நேற்று வெளியான அரசிதழ் அறிவிப்பில், தமிழ்நாடு மாநில சிவில் சர்வீஸ் பிரிவில் இருந்து 11 பேர் ஐ.ஏ.எஸ். ஆக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான காலியிடத்தில் 6 பேரும், 2025ஆம் ஆண்டுக்கான காலியிடத்தில் 5 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


* 11 பேர் யார்?


ஆர்.பிரியா, எஸ்.பிரசன்னா ராமசாமி, எம்.இந்துமதி, ஆர்.ராஜகிருபாகரன், எஸ்.சங்கீதா, கே.பிரியா, எம்.மணிமேகலை, ஏ.மீனா பிரியதர்ஷினி, என்.காளிதாஸ், டி.செங்கோட்டையன், எஸ்.சாந்தி ஆகிய 11 பேரும் இனி தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக பணியாற்றுவார்கள்.


 ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணியாற்றி வந்த எஸ்.பிரசன்னா ராமசாமி ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று துணை ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.