SCERT / DIET சார்பில், டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள TET Paper 1 மற்றும் Paper 2 பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், நிரப்ப வேண்டிய Google Form இணைப்பு

 


அன்பார்ந்த ஆசிரியர்களுக்கு, வணக்கம்!


SCERT / DIET சார்பில், டிசம்பர் 2026-இல் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்விற்கான (TET) தாள் 1 (Paper 1) மற்றும் தாள் 2 (Paper 2) பயிற்சி வகுப்புகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்போது நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளிலிருந்து மாறுபட்டு, இம்முறை பயிற்சி வகுப்புகள் உங்கள் மாவட்டத்திலேயே, வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நடத்தப்படும்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் (CEO) அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து வகுப்புகளும் DIET விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் கல்விப் புலத்துடன் தொடர்புடைய பேராசிரியர்களால் நடத்தப்படும்.


பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐப் பூர்த்தி செய்து தங்களது பதிவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


📝 Google Form:


https://forms.gle/Pd1UxgV7FK61Yw4BA


பயிற்சி வகுப்புகளுக்கான கால அட்டவணை மற்றும் இதர விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Telegram குழுவின் வாயிலாகப் பகிரப்படும்.


📢 Telegram குழுவில் இணைய:

https://t.me/scertspecialtet


ஆசிரியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஆசிரியர் தகுதித் தேர்விற்குத் திட்டமிட்டுத் தயாராகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.