* UPI செயலிகள் மூலம், EPF பணத்தை எடுக்கும் வசதி டிசம்பர் மாதம் அறிமுகமாகிறது
* புதிய செயலியையும் அறிமுகம் செய்கிறது வருங்கால வைப்பு நிதி அமைப்பு
UPI செயலிகள் வாயிலாக PF பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய சோதனை தொடங்கியது.
புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) உறுப்பினர்கள் வசதிக்காகவும், வேகமாக சேவைகளை வழங்கவும் பல டிஜிட்டல் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது.
தற்போது, PF பணத்தை யுஏஎன் (UAN) இணையதளம் வழியாக ஆன்லைனில் எடுக்கலாம். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, PFல் இருந்து எடுக்கப்படும் பணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வங்கியில் இருந்து நாம் பணத்தை எடுத்து கொள்ளலாம். தற்போது யு.பி.ஐ. செயலிகள் வாயிலாக பி.எஃப். பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சோதனை முறைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது.
சந்தாதாரர்கள், அனுமதியோடு கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் பணத்தை எடுக்க முடியும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய விதிகளின்படி, பிஎப் இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும். கல்வி, திருமணம் மற்றும் வீட்டு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளுக்கு, ஒரு சந்தாதாரர் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.