கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கோவிட் 19 பொருட்கள் வாங்க அரசு பள்ளிகளுக்கு நிர்பந்தம்...

 


தமிழகத்தில் பள்ளிகள் திறக்காத நிலையில் பள்ளி மானிய நிதியில் இருந்து தனியார் நிறுவனங்களின் கோவிட் 19 தடுப்பு பொருட்கள் கொள்முதல் செய்ய அரசு தலைமையாசிரியர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம்நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை பராமரிக்க மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ. 25,000, ரூ.50,000, ரூ.75,000 மற்றும் ரூ.1 லட்சம் என நான்கு பிரிவுகளில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் இருந்துபள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு தீர்மானம் நிறைவேற்றி பள்ளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் பராமரிப்புக்காக செலவிட வேண்டும்.ஆனால் தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதம் கோவிட் 19 தடுப்புக்கான சானிடைசர்ஸ், மாஸ்க், பிங்கர் புல்ஸ் ஆக்ஸிமீட்டர், தெர்மா மீட்டர் உள்ளிட்டவை கொள்முதல் செய்ய வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பொருட்களை பள்ளிகளில் நேரடியாக சப்ளை செய்ய சில தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்நிதி ஒதுக்கப்பட்ட மறுநாளே அந்நிறுவனத்தினர் பள்ளிகளுக்கு சென்று 'தங்களிடம் தான் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறி கோவிட் 19 பொருட்களை இறக்கி மொத்த நிதியில் 50 சதவீத்திற்குகாசோலை கேட்பதால் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சில மாவட்டங்களில் அப்பொருட்களை தலைமையாசிரியர்கள் கொள்முதல் செய்ய அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடுகின்றனர். 

தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளி ஆய்வகங்களுக்கு அறிவியல் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போதும் இதே பிரச்னை எழுகிறது. நாங்கள் ஆர்டர் கொடுக்காமல், பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சி குழு தீர்மானமின்றி தனியாரிடம் எவ்வாறு பொருட்கள் கொள்முதல் செய்ய முடியும்.'இது அமைச்சர் அலுவலக உத்தரவு கொள்முதல் செய்யுங்கள்' என கல்வி அதிகாரிகள் வாய்மொழியாக கூறி கட்டாயப்படுத்துகின்றனர். பிரச்னை என வந்துவிட்டால் நாங்கள் தானே மாட்டிக்கொள்வோம். பொருட்கள் வாங்கிக் கொள்ளும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கவரில் ரூ.1000 வைத்து அந்நிறுவனம் லஞ்சம் தருகிறது. 

நேர்மையானவர்கள் நிறுவனத்தினரை எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். மாவட்டம் வாரியாக முறையான டெண்டர் விடுத்து குறைந்த விலைப் பட்டியல் அளிக்கும் நிறுவனங்களில் பொருட்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

B.Ed தேர்வு முடிவுகள் வெளியீடு...

 மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் 2020 டிச.,2 முதல் நடந்த ஏப்.,2020 பி.எட்., தேர்வு முடிவுகள் mkuniversity.ac.in/dde என்ற பல்கலை இணையதளத்தில் 2020, டிச.,31ல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம் என பல்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் போது ஊனம் ஏற்பட்டால், அரசு ஊழியர்களுக்கு இழப்பீடு - மத்திய அமைச்சர்...

 மத்திய அரசு ஊழியர்கள் பணியின் போது ஊனம் ஏற்பட்டு, பணியில் தொடர்ந்தாலும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜித்தேந்திர சிங் நேற்று அறிவித்தார்.  புத்தாண்டில் முக்கியமான அறிவிப்பாக இது கருதப்படுகிறது.

இந்த உத்தரவு, பணிச்சூழல் காரணமாக இப்பிரச்சினைகளை அதிகம் சந்திக்கும் மத்திய ஆயுதப்படைகளில் பணியாற்றும் சிஆர்பிஎப், பிஎஸ்எப் மற்றும் சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும். 

1.1.2004ஆம் ஆண்டுக்குப் பின் நியமனம் செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ்  (என்பிஎஸ்) உள்ளவர்களுக்கு மத்திய சிவில் சர்வீசஸ், சிறப்பு ஓய்வூதியத் திட்ட விதிமுறைகளில், இது போன்ற ஊனம் இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்தப் புதிய உத்தரவு மூலம்  என்பிஎஸ் திட்டத்தின் கீழ் வரும் ஊழியர்களும், சிறப்பு ஓய்வூதிய விதிமுறைகளின் கீழ் உள்ள பயன்களைப் பெறலாம்.

அரசு ஊழியர் பணியின் போது ஊனம் அடைந்து பணியில் தொடர்ந்தாலும், அவருக்கு இழப்பீட்டுத் தொகை, உடல் உறுப்பு பாதிப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.

இந்த உத்தரவு குறித்து திருப்தி தெரிவித்த டாக்டர். ஜித்தேந்திர சிங், ‘‘விதிமுறைகளை எளிதாக்குவதாகவும், பாரபட்சமான உட்பிரிவுகளை அகற்றவும் மோடி அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது’’ என கூறினார்.   

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685413

பட்டதாரிகள், பட்டியலின, ‘ரேங்க்’ மாணவர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...


 முதுகலை பயிலும் ஒற்றை பெண் பட்டதாரிகள், பட்டியலின, ரேங்க் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


முதுநிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் ஒற்றைப் பெண் பட்டதாரிகள், பட்டியலின மாணவர்கள் மற்றும் ரேங்க் வென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பெண் இரட்டையர்

முதுநிலைப் பட்டப்படிப்பில், ஒற்றைப் பெண் பட்டதாரிகளுக்கு முதுநிலை இந்திரா காந்தி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதேபோல், இரட்டையர்களாகப் பிறந்த பெண் பட்டதாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

முழுநேரமாக முதலாம் ஆண்டு முதுநிலை பட்டப் படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். மொத்தம் 3 ஆயிரம் மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 என 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.


பட்டியலின மாணவர்கள்

தொழில்துறை படிப்புகளில் முதுநிலை அளவில் படித்துவரும் பட்டியலின  மாணவர்களில் 1,000 பேருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் எம்.டெக்,எம்.இ. படிக்கும் பட்டியலின  மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.7,800, இதர தொழிற்துறை படிப்புகளை மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4,500 என 2 முதல் 3 ஆண்டுகள் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும்.


ரேங்க் பெற்ற பட்டதாரிகள்

அதேபோல், பல்கலைக்கழக ரேங்க் வென்ற மாணவர்களுக்கான முதுநிலை பட்டப்படிப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் அல்லது இரண்டாம் ரேங்க் பெற்றவராக இருத்தல் அவசியம். எனினும் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


60 சதவீதம் மதிப்பெண்

அதன்படி, உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், கணிதம், சமூக அறிவியல், வணிகவியல், மொழிப் படிப்புகள் ஆகிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு மாதம் ரூ.3,100 என 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


பல்கலைக்கழக மானியக் குழுவின் உதவித் தொகைகளைப் பெற www.scholarship.gov.in என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் தங்களுடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்ற வேண்டும். விண்ணப்பிக்க டிசம்பர் 31 ஆம் தேதி கடைசி நாளாக இருந்தது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றக் கடைசி நாள் ஜன.20-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

ஆதார் அட்டையின் நகல், மாணவரின் புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ் 2 (அல்லது அதற்கு இணையான படிப்பு), இளநிலை பட்டப்படிப்பு ஆகியவற்றின் மதிப்பெண் சான்றிதழ், நடப்பு ஆண்டு கல்விக் கட்டண ரசீது, ஒற்றைப் பெண் பட்டதாரி எனில் அதை உறுதிப்படுத்தும் சான்றிதழ், பட்டியலின மாணவர்கள் எனில் சாதி சான்றிதழ் ஆகியவற்றை ஆன்லைன் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டும்.

தேர்தல் அறிவிப்புக்கு பின், பொதுத்தேர்வு அறிவிப்பு & ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் - அமைச்சர் செங்கோட்டையன்...

 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகே, பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் & ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...



24 கணினி ஆசிரியர் நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு...

 


தமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு.

24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.

வெளிமாநில மாணவர்களா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் குற்றச்சாட்டு.

மாற்றுத்திறனாளி அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை, உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ் படிவம்...

 


மாற்றுத்திறனாளி அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொழுது விரும்பினால் துணையாளரை உடன் அழைத்துச் செல்வதற்கான மருத்துவச் சான்றிதழ் படிவம்...

>>> மருத்துவச் சான்றிதழ் படிவம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...