கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்...

 


Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரங்கள்  அனைத்திற்கும், உரிய ஆவணங்கள் (Attendance/Completion screenshot) அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். இதுசார்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

In EMIS,

School logged in >Staff details > In-Service Training details > Click "+Add" > Add In-Service Training Details (Teacher wise).

>>> பயிற்சிகளில் கலந்து கொண்ட விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் வழிமுறைகள் - ஒவ்வொரு படிநிலையாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது (PDF File)...


ஆசிரியர் காலிப்பணியிட தேர்வு அட்டவணை வெளியீடு எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன்...

 தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்தும் சில அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு உள்ளார்.

அமைச்சர் அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். இந்நிலையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தலாம் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் முதல்வர் கூறி இருந்தார்.

 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின்னரே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அட்டவணை அறிவிப்பு வெளியாகும் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேலும் பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாக மாற்றப்படும் என்பதால் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அது குறித்த தேர்வு அட்டவணை முதல்வருடன் ஆலோசித்த பின்னர் விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறி உள்ளார்.

தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும் ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில்...

 


ஈரோடு மாவட்டம், டி.என்.,பாளையம் அருகே கொங்கர்பாளையத்தில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: 

தமிழக சட்டசபை தேர்தல் அட்டவணையை, தேர்தல் கமிஷன் வெளியிட்டதும், பொதுத் தேர்வுக்கான முடிவு மேற்கொள்ளப்படும். தேர்தல் சமயத்தில், சில பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக இருந்தால், அங்கு தேர்வர்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால், தேர்தல் நாள் மற்றும் தேர்வு நாட்களை அறிந்து, பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். 

தேர்தல் பணியில் விலக்கு கோர விரும்பும், 55 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷனிடம் தெரிவித்தால்தான் சரியாக இருக்கும். 

கோவையில் கல்வி அதிகாரி, தனியார் பள்ளியில் நிதி பெற்றதாக, புகார் ஏதும் வரவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான் புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக பணியேற்கவுள்ள கணினி ஆசிரியர்களுக்கு 12 நாட்கள் பைதான்  புரோகிராமிங் (Python Program) பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 60484/ வி2/ இ1/ 2020, நாள்: 03-01-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை (நாளிதழ் செய்தி)...

 


தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளவர்களின் பட்டியலை ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்காக ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், கொரோனா பரவல் அச்சம் காரணமாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என்றும், அவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கக் கூடாது என்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


மேலும் பட்டியலை இறுதி செய்யும் போது ஆசிரியர்களின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்ற விவரங்கள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவ காரணங்கள் தவிர பிற காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களுக்கு, விலக்கு அளிக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர் நடத்த முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்...

 ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :


* சட்டமன்ற தேர்தலுக்கு பின்பே பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும். பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் அதற்கு பின்னரே பொதுத்தேர்வு நடத்தப்படும்.


* ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு பள்ளி திறப்புக்கு பின்னர் நடத்த முதல்வர் அறிவிப்பார்.


* ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்...

 


தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு முன்னிட்டு, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அரசுத் தேர்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது

அதன்படி, 2021-ம் ஆண்டு பிப்ரவரி 21 -ல் நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் எட்டாம் வகுப்புப் பயிலும் பள்ளி மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பப் படிவங்களை 28.12.2020 முதல் 08.01.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களைச் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்னும் இணையதளம் மூலமாக 05.01.2021 முதல் 12.01.2021 வரை பதிவு செய்யலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1. கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் EMIS அடிப்படையில் மாணவர்களின் பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான USER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் EMIS எண்ணினைப் பதிவு செய்தவுடன் பெரும்பாலான விவரங்கள் உடனடியாகத் திரையில் தோன்றும்.


அதில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், திருத்தங்களை மேற்கொள்ளவும், விடுபட்டுள்ள விவரங்களையும், புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்தால் போதுமானதாகும். புதியதாக பள்ளிகள் இணைப்பில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளின்படி பதிவு செய்தபின் புதியUSER ID, PASSWORD- ஐப் பயன்படுத்தி மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.


பதிவேற்றம் செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டிய விவரங்கள்:


2. தேர்வர்கள் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்துள்ள விவரங்கள் சரிதானா என்பதனைப் பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்னர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


3. . மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


4. பள்ளி முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர், முகவரியினை அஞ்சல் குறியீட்டுடன் பதிவு செய்யப்படவேண்டும்.


5. வீட்டு முகவரி என்ற இடத்தில் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினைப் பதியக்கூடாது. தேர்வரின் வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்.


6. பெற்றோரின் தொலைபேசி/ கைபேசி என்ற இடத்திலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிய வேண்டும். பள்ளியின் தொலைபேசி என்ற இடத்தில் மட்டும் பள்ளியின் தொலைபேசி எண்ணினைப் பதிந்தால் போதுமானது.


7. பதிவு செய்த விவரங்களை Declaration form Print out கொண்டு சரியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவும்.


8. 05.01.2021 பிற்பகல் முதல் 12.01.2021 வரை பதிவேற்றம் செய்த விவரங்களில் மாற்றம் ஏதேனும் இருப்பின் 12.01.2021 –க்குள் சரி செய்து கொள்ளலாம். அதன்பின் கண்டிப்பாக மாற்ற இயலாது.


பதிவேற்றம் முடிந்தவுடன் Summary Report மற்றும் தேர்வர்களின் விவரத்தினை (ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்) சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் 20.01.2021-க்குள் ஒப்படைக்குமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளிடமிருந்து பெறும் தொகையை ரொக்கமாகச் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 25.01.2021 அன்று சமர்ப்பிக்க வேண்டும்.


மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து விண்ணப்பித்த அனைத்துத் தேர்வர்களின் தேர்வுக் கட்டணத் தொகை பெறப்பட்டுள்ளதா என்பதை உதவி இயக்குநர்கள் உறுதிசெய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் காலம்: 05.01.2021 - 12.01.2021


விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.01.2021


Summary Report தொகையை மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள்: 13.01.2021 - 20.01.2021


மாவட்டக் கல்வி அலுவலர்கள் ரொக்க தொகையை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய நாள். 25.01.2021

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...