கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக 03-04-2021, 05-04-2021 மற்றும் தேர்தல் நாள் 06-04-2021 ஆகிய மூன்று நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை...

 திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021- வாக்குப்பதிவு கண்காணிப்பு அமைப்பு PMS செயலி (MOBILE - APP) பதிவிறக்கம் செய்ய - Direct Link, PDF FILE...



 Username: Registered mobile number in Election

Login Password: Last four digits of your registered Mobile number

change password with New password...


Dear Presiding Officers, click the following link and install the PMS App in your Android Mobile.   

>>> Click here to Download TNLA Election 2021 - PMS Android Mobile App...


>>> தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2021- வாக்குப்பதிவு கண்காணிப்பு அமைப்பு PMS செயலி செயல்படும் வழிமுறைகள்...


அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வது குறித்த விவரங்கள்...



 அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் (Suspension) செய்வது குறித்த விவரங்கள்...


*⭕அரசு பணியில் இருக்கும் போது தவறு ஒருவர் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது. தவறு செய்தவராக கருதப்படுபவரை அவர் செய்த தவறின் தன்மையை பொறுத்து தொடர்ந்து அரசுப்பணி புரிவது அரசுப்பணிக்கும், அலுவலக நடைமுறைக்கும் குந்தகம் விளைவிக்கும் என்று கருதும்பட்சத்தில் அரசுப்பணியிலிருந்து அவரை தற்காலிகமாக விலக்கி வைக்கும் நடைமுறையே தற்காலிக பணி நீக்கம் ஆகும்.



*⭕இந்த நடவடிக்கை மிகவும் விஸ்தாரமானது. நீதிமன்ற நடவடிக்கை போன்றது. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கும் இதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. நீதிமன்ற நடவடிக்கை சாட்சியங்களின் அடிப்படையில் இருக்கும். ஆனால் துறை ரீதியான நடவடிக்கையோ சாட்சியங்களின் உறுதித்தன்மையை மேம்போக்காக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்திருப்பார் என்று சந்தேகிக்கப்பட்டாலே அவர் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்க வழி செய்கிறது.


 

*⭕அரசின் நம்பகத்தன்மைக்கு எதிராக குற்றம் செய்திருப்பார் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து நீக்க முடியும். எனவே துறை ரீதியான விசாரணைக்கு குற்றம் செய்தவரை உட்படுத்தவும், விசாரணை முடியும் வரை அரசுப்பணியிலிருந்து ஒருவரை தற்காலிகமாக விலக்கி வைப்பதுமே தற்காலிக பணி நீக்கத்தின் நோக்கமாகும்.



*⭕தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கப்பட்டவர் விசாரணை முடித்து இறுதி உத்தரவு வழங்கப்படும் வரை அவர் அரசுப்பணியில் பணிபுரிபவராகவே கருதப்படுவார்.



*⭕Tamilnadu civil Services (Discipline & Appeal) Rule 17(e) ன்படி, ஒருவரை தகுதியான அலுவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.



*⭕Removal, Dismissal போன்ற பெருந்தண்டனைகளை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றங்கள் புரிந்ததாக கருதப்படுபவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கலாம். அல்லது ஒருவர் தொடர்ந்து அரசுப்பணி புரிவது இந்திய இறையாண்மைக்கோ, பொதுநலனுக்கு குந்தகமோ, பாதகமோ ஏற்படும் என்று தகுதியான அதிகாரி கருதும்பட்சத்தில் குற்றம் செய்தவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கலாம்.


 

*⭕இருப்பினும் தகுந்த காரணமும், முகாந்திரம் இன்றி ஒருவரை தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவை முடிந்தவுடன் அவரை பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என விதி 17(e)(6) ல் கூறப்பட்டுள்ளது.



*⭕திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 7 வருடங்களுக்குள் அரசு ஊழியர் ஒருவரின் மனைவி சந்தேக மரணம் அடைந்தால், காவல் நிலையத்திலிருந்து இதற்கான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் அரசு ஊழியரான கணவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என Govt. Lr. No - 95405/Per-87-2 P & A. R, Date - 23.3.1988 உள்ளது.


 

*⭕பணி ஓய்வு பெற இருக்கும் நிலையில் ஒரு அரசு ஊழியரை தற்காலிக பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசு கீழ்கண்டவாறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.


*◾G. O. Ms. No - 7681, P & A. R, date - 2.7.1979


*◾Govt. Lr. No - 94184/Per-83-5 P&A. R, date - 1.7.1985


*◾Govt. Lr. No - 20513/Per-N/89-1 P&A. R, date - 4.3.1989


*◾G. O. Ms. No - 439, P&A. R, date - 27.7.1989


*◾Govt. Lr. No - 75671/Per-N /92-1, P&A. R, date - 9.12.1992


*◾G. O. Ms. No - 37, P&A. R, date - 3.2.1995


*◾Govt. Lr. No - 97772/N/94-1/P&A.R, date - 24.3.1995


*◾Govt. Lr. No - 73552/N/95-3/ P&A. ஏ, date - 9.11.1995


*◾Govt. Lr. (Ms). No - 4/N/2000/P&A.R, date - 21.7.2000


*◾Govt. Lr. No - 198 /P&A. R, date - 29.12.2005


*◾G. O. Ms. No - 144, P&A. R, date - 8.6.2007


*◾Govt. Lr. No - 70374/N/2007-2/P&A.R, date - 14.3.2008


 

*⭕இதில் 8.6.2007 ஆம் தேதியிட்ட G. O. Ms. No - 144 என்ற அரசாணையில் ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் அரசு ஊழியரை பணி நீக்கம் செய்யும் போது என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



*⭕பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிகமாக பணி நீக்கம் செய்யக்கூடாது. தேவை இருந்தால் பணி ஓய்வு நாளுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கையை துவக்க வேண்டும். அந்த மூன்று மாத காலத்திற்கு முன்பு எடுக்கும் நடவடிக்கை போர்கால அடிப்படையில் இருக்க வேண்டும்.


 

*⭕விடுப்பில் இருக்கும் அரசு ஊழியரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். இதற்காக அவர் விடுப்பு முடிந்து பணி ஏற்ற பிறகு தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது இல்லை. தற்காலிக பணி நீக்கம் செய்வதால் அவர் அனுபவிக்காமல் எஞ்சியிருக்கிற விடுப்பை ரத்து செய்து அவர் எடுத்த விடுப்பை, இருப்புக் கணக்கில் சேர்க்க வேண்டும். இதற்கு உயர் அதிகாரிகளின் ஆணை தேவையில்லை.



*⭕ஒரு அரசு ஊழியர் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டதாக எதிர்காலத்தில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் deemed suspensionல் வைக்க வேண்டும் (F. R. 54(B)



*⭕பொதுவாக பணி அமர்த்த அதிகாரம் பெற்ற அதிகாரிகள் மட்டுமே பணி நீக்கம் சம்மந்தப்பட்ட ஆணைகளை வழங்க வேண்டும். யாரெல்லாம் தற்காலிக பணி நீக்கம் செய்ய அதிகாரம் உடைய அதிகாரிகள் என விதி 13 மற்றும் 14(a)(1) ல் கூறப்பட்டுள்ளது.



*⭕இருந்தாலும் விதி 14(a)(1) ன்படி பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய பெருந்தண்டனை வழங்க வேண்டிய அளவுக்கு குற்றம் இருந்தால் immediate higher officer கூட தற்காலிக பணி நீக்கம் செய்யலாம்.


 

*⭕தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விவரத்தை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.



*⭕பணி ஓய்வுக்குப் பின்னர் ஒருவர் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கத்தில் இருக்க வேண்டிய தேவையிருந்தாலோ அல்லது பணி ஓய்வு பெறும் நாளன்று ஒருவரை தற்காலிக பணி நீக்கத்தில் வைக்க வேண்டியிருந்தாலோ "பணியமர்வு அதிகாரி" தவறு செய்தவரை தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து ஆணை வழங்கி தற்காலிக பணி நீக்கத்திலேயே தொடர ஆணையிட வேண்டும். (F. R. 56(1)(c) மற்றும் G. O. Ms. No - 216, P&A. R, date - 1.9.1998)

தமிழ்நாடு சட்டசபைத்தேர்தல்-2021 தேர்தல்பணி அலுவலர்களின் மதிப்பூதியம் விவரங்கள் : அரசாணை வெளியீடு...



>>> Click here to Download G.O.Ms.No.188, Dated: 01-04-2021 (தமிழ்நாடு சட்டசபைத்தேர்தல் - 2021 தேர்தல்பணி அலுவலர்களின் மதிப்பூதியம் விவரங்கள்)...

உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு...


W.A.(MD).No.76 of 2019 etc., batch

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT 

Reserved on : 28.09.2020

Pronounced on : 31.03.2021

CORAM:

THE HON'BLE MR.JUSTICE M.SATHYANARAYANAN

AND

THE HON'BLE MR. JUSTICE R.SURESH KUMAR

W.A.(MD).Nos.76 of 2019, 1461 of 2018, 701 of 2019, 1074 of 2019,

1277 of 2019, 1473 of 2018, 1531 of 2018, 1612 of 2018, 225 of 2019, 

919 of 2019, 918 of 2019, 96 of 2018, 495 of 2019, 1150 of 2018, 

1354 of 2019, 1517 of 2019, 1525 of 2019, 1565 of 2019, 1566 of 2019, 

6 of 2020, 15 of 2020, 741 of 2020, 743 of 2020, 745 of 2020, 773 of

2020, 783 of 2020, 784 of 2020, 785 of 2020, 762 of 2020

and 

W.P.No.31575 of 2019, W.P.(MD).Nos.1152 of 2018, 3973 of 2016, 

4816 of 2017, 11155 of 2017, 5767 of 2018, 7643 of 2018, 9947 of

2018, 10187 of 2018, 23869 of 2018, 24688 of 2018, 25020 of 2018, 

7471 of 2019, 11117 of 2019, 16785 of 2019, 23444 of 2019, 

24026 of 2019, 25272 of 2019, 1183 of 2020, 1208 of 2020, 1544 of

2020, 5098 of 2020, 5594 of 2020, 6530 of 2020, 6678 of 2020, 8275 of

2020, 8450 of 2020, 9564 of 2020, 9666 of 2020, 9709 of 2020, 9874 of

2020, 9918 of 2020, 10052 of 2020, 10063 of 2020, 10090 of 2020, 

10123 of 2020, 10250 of 2020, 10257 of 2020, 10385 of 2020, 

10705 of 2020, 11832 of 2020, 11851 of 2020, 21699 of 2018, 

1937 of 2020, 9637 of 2020, 10238 of 2020, 11071 of 2020, 

11128 of 2020, 11467 of 2020, 11862 of 2020, 11865 of 2020, 

11868 of 2020, 11863 of 2020, 11886 of 2020, 12399 of 2020, 

12409 of 2020, 12562 of 2020, 12663 of 2020, 12692 of 2020, 

12704 of 2020, 12705 of 2020, 12713 of 2020, 

12866 of 2020 

and connected miscellaneous petitions

W.A.(MD).No.76 of 2019


 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of 2018 - ல் 09.04.2019 ம் நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் , பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . ( i ) ஒவ்வொரு தனிமேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் . ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் அலகாகவும் கருதப்படுகிறது.


 அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.


>>> Click here to Download Judgement Copy...

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாள் - 2021 ஏப்ரல் 14 அன்று விடுமுறை அறிவிப்பு...

 Declaration of holiday on 14th April 2021- birthday of Dr.B.R.Ambedkar...



>>> Click here to Download Government Order...


தேர்தல்- வாக்குப்பதிவு அலுவலர் 2 (PO 2) - 17 A பதிவேட்டில் ஆவணங்களின் சுருக்க குறியீடு எழுதும் முறை...



>>> Election- Polling Officer 2 (PO 2) -  How to write a summary code of documents in the 17 A Register...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...