கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

98.5 சதவீத மாணவர்கள் தோல்வி எதிரொலி தொடக்கக் கல்வி படிப்புக்கு மறு தேர்வு கோரி வழக்கு: பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உத்தரவு

 தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான தேர்வில் 98.5 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், மறு தேர்வு நடத்தக்கோரி தாக்கலான மனுவுக்கு பள்ளிக்கல்வி செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருநெல்வேலியைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:


நான் 2-ம் ஆண்டு தொடக்கல்வி பட்டயப் படிப்பு படித்து வருகிறேன். இப்படிப்புக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் 220 நாள் கல்லூரி நடைபெறும். 2019- 2020 கல்வியாண்டில் 160 நாள் மட்டுமே கல்லூரி நடைபெற்றது. கரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் சரியாக வகுப்புக்கு செல்ல முடியவில்லை.


இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் தேர்வு நடைபெற்றது. அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் வீடுகளிலிருந்து தேர்வெழுத சென்றது முதல் வீடு திரும்பும் வரை உடல் மற்றும் மனதளவில் பல்வேறு பாதிப்புகளை மாணவர்கள் சந்திக்க நேரிட்டது.


தற்போது தொடக்க்ககல்வி பட்டய படிப்பு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தேர்வு எழுதியவர்களில் 98.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


எனவே, தொடக்கக்கல்வி பட்டய படிப்பு மாணவர்களுக்கு மீண்டும் இணையதளம் வழியாகவோ அல்லது மறு தேர்வோ நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.


பின்னர், மனு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர், கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மாநில கவுன்சில் இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப். 24-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது...

 


ஏப்ரல் 10-ம் தேதி முதல் மாஸ்க் அணியாமல் வந்தால் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகாரத்து வரும் நிலையில் பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

SHAALA SIDDHI - நிலை 1, நிலை 2, நிலை 3 - விவரங்களும் விளக்கங்களும் (தமிழில்)...



>>> SHAALA SIDDHI - நிலை 1, நிலை 2, நிலை 3 -  விவரங்களும் விளக்கங்களும் (தமிழில்)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்...

 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால் , கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. 



ஆனால் , பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் விசாரணையில் பொதுமாறுதல் , பதவி உயர்வு கலந்தாய்வு ஆகிய இரண்டையும் சேர்த்து நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் , ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது - உயர்நீதிமன்றம்...

 அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


கல்வியின் புனிதத்தில் சமரசம் செய்யாமல் எந்த மாதிரியான தேர்வு நடைமுறையை மேற்கொள்ளலாம்? யூஜிசி,  தமிழக அரசு கலந்து ஆலோசிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரியர் தேர்வுகளை ரத்து செய்து, தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. இதனால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வைத் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.


அதேபோல் கல்லூரியில் இறுதி செமஸ்டரை தவிர்த்து மற்ற செமஸ்டரில் அனைவரும் தேர்ச்சி என அறிவித்தது. மேலும், அரியர் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.


மாணவர்களிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பும் கிளம்பியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது. தேர்வுகளை நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கோர்ட் தெரிவித்துள்ளது.


மேலும், தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்?, தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை பேர்? என்பதை பல்கலைக்கழகங்கள் வாரியாக தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இந்த வழக்கு வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.



ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதத்தில் நடத்த கல்வித்துறை திட்டம்...

 



கோவிட் 2.0 - எச்சரிக்கை கோரும் பதிவு...

 Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, 

பொது நல மருத்துவர், 

சிவகங்கை...



பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சி பதியப்படுகின்றது. 


நேற்று என்னை சந்திக்க 70களின் இறுதிப்பகுதியில்  இருக்கும் பெண்மணி வந்திருந்தார். 


அவரிடம் நான் மேற்கொண்ட நோய் குறித்த விசாரணையை அப்படியே உரையாடலாக பதிவு செய்கிறேன் 


"என்னங்கமா  செய்யுது?" 


" மூனு நாலு நாலா உடல் சோர்வு அசதி.. 

சரியா சாப்ட முடியல..பசி எடுக்க மாட்டேங்குது" 


"ஓகே.. காய்ச்சல் இருந்துச்சா.? 


"காய்ச்சல் இல்ல சார்.."


"இருமல் இருக்குங்களா மா?"


"லேசான இருமல் அப்பப்போ வருது.." 


" நல்லா யோசிச்சு சொல்லுங்க.. உங்களுக்கு கடந்த ஒரு வாரத்துல காய்ச்சல் அல்லது  அடிச்சு போட்ட மாதிரி வலி அசதி இருந்துச்சா?" 


"ஆமா..சார். சனிக்கிழமை அன்னைக்கு பூறா எழுந்துக்கவே முடியல. அவ்வளவு அசதி..வலி.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சரியாச்சு. " 


"மூச்சு விடுறதுல சிரமம் இருக்கா?" 


"லேசா மூச்சு விடுறதுல சிரமம் இருக்குற மாதிரி தான் இருக்கு" 


"மா.. இந்த தடவ கொரோனாவுக்கு பல பேருக்கு காய்ச்சல் வராம இந்த மாதிரி உடம்பு அசதி வலி ஏற்படுது.. கூடவே உங்களுக்கு இருமல் இருக்குறதால.. சிடி ஸ்கேன் எடுத்து பாத்துரலாம்.." 


"சார்... ரெண்டு நாள் மாத்திரை போட்டு பாத்துக்குறேனே.." 


பல்ஸ் ஆக்சிமீட்டர் விரலில் வைத்துப் பார்த்தேன். 

93% -94% என்று இருந்தது. 


"இல்ல மா.. ஏற்கனவே அஞ்சாவது நாள் ஆயிடுச்சு.  நாளைக்கு சிடி ஸ்கேன் எடுத்து ரிசல்ட் வந்தா.. ஆறாவது நாள். 

இதுக்கு மேல லேட் பண்ண கூடாது. நீங்க நாளைக்கு எடுக்கணும் கண்டிப்பா.. இது என்னோட அன்புக்கட்டளை "


"சரி சார் . எடுத்துட்டு வர்றேன்.." என்று பாராமுகமாக சென்றார் . 


இன்று அவரது உறவினர் ஸ்கேனைக் கொண்டு வந்தார். 

அந்த நோயரால் எழுந்து வர முடியவில்லை என்பதால் இவர் மட்டும் வந்திருக்கிறார்


நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில்  கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. 


உடனே நோயர் இன்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு விட்டார். 


நிச்சயம் தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களின் திறனாலும் உழைப்பாலும் 

நலம் பெற்று வீடு திரும்புவார் என்று இறைவனை வேண்டுவோம். 


இந்த நிகழ்வில் இருந்து கற்க வேண்டிய பாடங்கள் 


1️⃣ கொரோனாவில் காய்ச்சல் கண்டிப்பாக அடிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை 


2️⃣ கடும் உடல் அசதி / உடல் சோர்வு போன்றவையும் அறிகுறிகளாக இருக்கலாம். கூடவே வயிற்றுப்போக்கும் இருக்கலாம்.


3️⃣ கடும் உடல் அசதி அதை ஒட்டிய இருமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை அலட்சியம் செய்வது கூடாது. 


4️⃣ தற்போது வரும் காய்ச்சலுக்கு கட்டாயம் ஊசி போடக்கூடாது. காரணம் ஊசி போடுவதால் அறிகுறிகள் அடங்கி விடும். இதனால் பொன்னான பொழுதை வீட்டில் கழித்து விட்டு காலம் கடந்து மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்படலாம். 


5️⃣ சரியான நேரத்தில் அறிகுறிகளைக் கண்டறிந்து சரியான நேரத்தில் நோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நிச்சயம் கொரோனாவை வெல்ல முடியும் 


6️⃣நான் சந்தித்த இந்த பெண்மணி இன்னும் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெற்றிருக்கவில்லை. 60+ வயதினருக்கு கடந்த மார்ச் 1  முதல் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ள எத்தனையோ முதியோர்கள் இருக்கிறார்கள். தயவு செய்து 45+ வயதினர் அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும். 


7️⃣அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  அரசு மருத்துவமனைகளை நம்பி விரைவாக சிகிச்சை பெறுங்கள். சிகிச்சைக்கு காலம் தாழ்த்தாதீர்கள்.  


8️⃣ கட்டாயம்  முதியோர்கள் வெளியிடங்களுக்கு அவசியமின்றி வெளியே வரக்கூடாது. 

அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர நேர்ந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டமாகக் கூடுதல் கூடாது. 


9️⃣ கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான விசயங்களை பரப்ப வேண்டும். பொய்களை பரப்பக்கூடாது.  


🔟பொதுமக்கள் அறிகுறிகள்  தோன்றினால் தாமே சீக்கிரமாக பரிசோதனை செய்து கொள்ள முன்வர வேண்டும். 

பரிசோதனை செய்து கொண்டு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். 

🙏🙏


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...