கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு - ஏப்ரல் 10 முதல் அமல் - செய்தி வெளியீடு எண் : 211...

 


>>> தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிப்பு - ஏப்ரல் 10 முதல் அமல் - [Press Release No : 211 ] COVID-19 Containment Plan - Guidelines, relaxations and restrictions - PDF...


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்...



 >>> தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியல்...


கொரோனா 2வது அலை... மீண்டும் ஒரு சவால் - ஏப்.11 முதல் 14 வரை தடுப்பூசி திருவிழா நடத்துங்கள் - பிரதமர் மோடி...



நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலை உருவாகி வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 11 முதல் 14ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 1 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனைநாடு முழுவதும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமெடுத்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சில மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றார்.மாநில முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாம் முதலில் தடுப்பூசி இல்லாமல் கொரோனாவை எதிர்கொண்டோம் இப்போது தடுப்பூசி உள்ளது என்றார். நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழ்நிலை உருவாகி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவது கவலை அளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகிறதுகொரோனா முதல் அலையை கடந்து விட்டோம் இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தை பயன்படுத்துங்கள் என்றார். இரவு நேர ஊரடங்கை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தலாம் என்றும் கூறினார்.கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது கட்டுப்பாடு அவசியம். பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் தளர்வடைந்து விட்டது. கொரோனா பரவலை தடுக்க கண்டறிதல் என்பது சிறந்த வழியாக இருக்கும் என்று கூறிய மோடி, 70 சதவிகிதம் ஆர் பிசிஆர் பரிசோதனை என்ற இலக்கை எட்ட வேண்டும் என்றார்.கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகள் பற்றி விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும் என்றும் கூறினார். ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா நடத்தலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி நாம் வெல்வோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.'!

Government Examinations- HSE-II Year - 2020–21 - Conduct of Practical Examinations – Guidelines issued based on the Standard Operating Procedure issued by the Government...

 


Government Examinations- HSE-II Year - 2020–21 - Conduct of Practical Examinations – Guidelines issued based on the Standard Operating Procedure issued by the Government –communicated –regarding...

>>> Click here to Download Proceedings of the Director of Government Examinations  R.C. No. 025650/H1/2020, Dated 08.04.2021...


வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு...

 Housing and Urban Development Department,

Secretariat, Chennai-9.

Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.


  • Housing and Urban Development Department, Principal Secretary Letter (Ms.) No.73 dated.11.O3.2O21.

  • APPLICATION FORM FOR THE GRANT OF AN ADVANCE FOR MIGRATION OF LOAN FROM OTHER FINANCIAL INSTITUTIONS UNDER THE RULES REGULATING THE GRANT OF ADVANCES TO GOVERNMENT SERVANTS FOR BUTLDING ETC., OF HOUSES.

  • CHECK-SLIP FOR SCRUTINISING THE APPLICATION FOR SANCTION OF HOUSE BUILDING ADVANCE


>>> வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்ற வீட்டுக் கடன்களை மாநில அரசு வழங்கும் கடன் திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு (Migration) கூடுதல் அறிவுரைகள் - அரசுக் கடிதம்  (Letter (Ms.) No.73 dated.11.O3.2O21) மற்றும் விண்ணப்பப் படிவங்கள்...


பன்னிரண்டாம் வகுப்பு - மாதிரி செய்முறைத் தேர்வு வினாக்கள்...

  +2 Model Practical Questions...



>>> பன்னிரண்டாம் வகுப்பு - மாதிரி செய்முறைத் தேர்வு வினாக்கள்...


+2 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 கொரனா தொற்று அதிகரித்து நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை கல்வி துறை வெளியிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை. ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.



இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட +2 தேர்வுகள் ரத்து செய்யப்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களின் செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாணவர்கள் கிருமிநாசினிமற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்த கூடாது, நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற 21 வகையான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...