கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Google Pay & Pay Tm போன்ற மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு...

 டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்த்தனைகளிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் மொபைல் வேலெட் சேவைகளில் தற்போது புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதாக ரிசர்வ் வங்கி புதிய முடிவினை வெளியிட்டு உள்ளது.



இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சேவைகளிலும், பண பரிவர்தனை பணிகளில் அதிகமாக Google Pay & Pay Tm மொபைல் வேலெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் டாக்ஸி புக்கிங், ஆன்லைன் பேமெண்ட் சேவை போன்ற பணிகளில் மிக முக்கிய சேவை பயன்பாடாக மொபைல் வேலெட் உள்ளது.


ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புகள் :

ஒரு வாடிக்கையாளர் மொபைல் வேலெட்-ல் இருந்து பணத்தை வங்கிகளுக்கு அனுப்பவும், ஒரு மொபைல் வேலெட்-ல் இருந்து பிற நிறுவனத்தின் மொபைல் வேலெட்-களுக்கு பணம் அனுப்பவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.


இது வரை 1 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே வேலெட், ப்ரீபெய்டு கார்டு போன்ற ப்ரீபெய்டு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்-க்கு இருப்புத் தொகை வைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.


அதனை தற்போது ரூ.2 லட்சம் வரை உயர்த்தியுள்ளதாக RBI வங்கி அறிவித்து உள்ளது.


RTGS மற்றும் NEFT போன்ற பண பரிவர்த்தனை மற்றும் பரிமாற்ற முறையினை பயன்படுத்திக் கொள்ள மொபைல் வேலெட் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


இந்த மொபைல் வேலெட்டினை பயன்படுத்தி ஏடிஎம் களில் பணம் எடுத்திடவும் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


இப்புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் வங்கி கணக்கு திறக்க வேண்டிய தேவை இல்லை. இந்த சேவைகளின் மூலமாகவே அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 62% பேர் மட்டுமே தபால் வாக்களிப்பு - 38% இன்னும் செலுத்தவில்லை...

 


1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் புத்தகங்கள் வழங்க ஏற்பாடு - பெற்றோர் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரி தகவல்...

 


08.04.2021 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பலன் கிடைக்கவில்லை எனில் இரவு நேர கொரோனா ஊரடங்கு (Night Curfew) மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை...

 “இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு:



கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும்.


புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில் அரசு எச்சரிக்கை.


கொரோனாவை தடுக்க தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.


கொரோனா 2-வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் - தமிழக அரசு.


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 213, நாள்: 09-04-2021...


இன்றைய (10-04-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஏப்ரல் 10, 2021



எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். கண்பார்வை தொடர்பான சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எந்தவொரு செயலிலும் கர்வமின்றி செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அஸ்வினி : உபாதைகள் மறையும். 


பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


கிருத்திகை : தடைகள் அகலும். 

---------------------------------------




ரிஷபம்

ஏப்ரல் 10, 2021



புதியவற்றை கற்பதில் ஆர்வம் உண்டாகும். எதையும் செயல்படுத்துவதற்கான திறமைகள் மேம்படும். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.


ரோகிணி : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


மிருகசீரிஷம் : மேன்மையான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஏப்ரல் 10, 2021



நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்கால சிந்தனைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான எண்ணங்களும், செயல்பாடுகளும் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் அனுசரித்து செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 10, 2021



உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சம வயதினரின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் லாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள்.


பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


ஆயில்யம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




சிம்மம்

ஏப்ரல் 10, 2021



வெளியிடங்களுக்கு செல்லும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான பெரிய தொகைகளை கடனாக கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பதற்றமின்றி நிதானத்துடன் பேசவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : கவனம் வேண்டும்.


பூரம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கன்னி

ஏப்ரல் 10, 2021



பலவிதமான குழப்பங்களில் இருந்து மன அமைதி உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் லாபம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : மன அமைதி ஏற்படும்.


அஸ்தம் : எண்ணங்கள் நிறைவேறும்.


சித்திரை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

ஏப்ரல் 10, 2021



தாய்மாமன் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலன்களை தரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத செலவுகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



சித்திரை : உறவுகள் மேம்படும்.


சுவாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.


விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சகம்

ஏப்ரல் 10, 2021



பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும். விவசாயப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழல் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : அனுபவம் உண்டாகும்.


அனுஷம் : சாதகமான நாள்.


கேட்டை : ஆதாயம் ஏற்படும். 

---------------------------------------




தனுசு

ஏப்ரல் 10, 2021



வாக்குவன்மையால் லாபம் உண்டாகும். திடீர் யோகத்தில் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். புதிய நபர்களின் நட்புகளால் தனலாபம் அடைவீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் சம்பந்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : லாபம் உண்டாகும்.


பூராடம் : கவனம் வேண்டும்.


உத்திராடம் : முடிவுகளை எடுப்பீர்கள்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 10, 2021



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற அலைச்சல்கள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் ஈடேறும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


திருவோணம் : செலவுகள் ஏற்படும்.


அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------




கும்பம்

ஏப்ரல் 10, 2021



கலகலப்பான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். கால்களில் அவ்வப்போது வலிகள் தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : தனவரவுகள் கிடைக்கும்.


பூரட்டாதி : அமைதியுடன் செயல்படவும்.

---------------------------------------




மீனம்

ஏப்ரல் 10, 2021



பணிகளில் பொறுப்புகளும், அதிகாரமும் அதிகரிக்கும். தொழில் தொடர்பான எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும். எந்தவொரு செயலிலும் அவசரமும், பதற்றமும் இன்றி நிதானமாக செயல்படவும். சகோதரர்களின் மூலம் ஆதரவான பலன்கள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மை ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


உத்திரட்டாதி : நிதானமாக செயல்படவும்.


ரேவதி : நன்மையான நாள்.

---------------------------------------


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை...

 தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கலாமா என்று சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக 9, 10, 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேநேரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீராஜ்குமார், தேர்வுத்துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் தேர்வு மையங்களை எவ்வாறு அமைப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் முடிந்த பின்பு மீண்டும் ஆலோசனை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்வு காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது பற்றி சுகாதாரத்துறையிடம் அறிக்கை கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. சுகாதாரத்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேர்வை தள்ளிவைப்பதா என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

G.O.(Ms) No:342 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்...

 


G.O.(Ms) No:342, Dated: 08-04-2021 - 10 ஆம் தேதி முதல் 30-04-2021 வரை அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை..

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

பேருந்துகளில் நின்று பயணிக்க தடை.

E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்).

Hotel, டீ கடை, போன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி..

நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி...

ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி.

>>> Click here to Download G.O.(Ms) No:342, Dated: 08-04-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...