கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு 22.08.2022க்கு ஒத்திவைப்பு (Adjournment to 22.08.2022 for judgment in case against Headmasters Promotion / Transfer Counselling)...





>>> தலைமையாசிரியர் பதவி உயர்வு / இடமாறுதல் கலந்தாய்வுக்கு எதிரான வழக்கின் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 12.08.2022 அன்று விசாரணைக்கு வந்து தற்போது மீண்டும் 22.08.2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...





PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான இ-சேவை மையங்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ( Verification of applications received through e-Sevai Centers for PSTM (Persons Studied in Tamil Medium) certificates – Proceedings of Commissioner of School Education No: 30574/ M/ E1/ 2021, Dated: 04-08-2022) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 04-08-2022...



>>> PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான இ-சேவை மையங்களின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ( Verification of applications received through e-Sevai Centers for PSTM (Persons Studied in Tamil Medium) certificates – Proceedings of Commissioner of School Education No: 30574/ M/ E1/ 2021, Dated: 04-08-2022) ந.க.எண்: 30574/ எம்/ இ1/ 2021, நாள்: 04-08-2022...




மாணவர்களை மதிப்பீடு (Assessment) செய்யும் OMR விடைத்தாள் மாதிரி (Answer Sheet Model)...



>>> மாணவர்களை மதிப்பீடு (Assessment) செய்யும் OMR விடைத்தாள் மாதிரி (Answer Sheet Model)...




பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணை வெளியீடு - அரசாணை எண்: 154, (ப.க.து.) நாள்: 15.11.2021 (Computerization of all School Records and deletion of unwanted records - G.O.Ms. No: 154 (S.E.D.), Dated: 15.11.2021)...



>>> பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணை வெளியீடு - அரசாணை எண்: 154, (ப.க.து.) நாள்: 15.11.2021 (Computerization of all School Records and deletion of unwanted records - G.O.Ms. No: 154 (S.E.D.), Dated: 15.11.2021)...



இணைப்பு I - வழக்கொழிந்த பதிவேடுகள் (Obsolete Registers) - 11...


இணைப்பு II - பள்ளிகளில் நேரடியாகப் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் - 7 (Offline Only)...



இணைப்பு III - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) வாயிலாக கணினித் தகவல்களைக் கொண்டு நேரடிப் பதிவேடுகளாகப் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் - 7 (Registers are to be maintained with computers (online) and offline)...



இணைப்பு IV - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) வாயிலாக கணினியில் (இணைய வழியே) மட்டுமே பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் (Registers that are to be maintained only in computers (Online)) - 74 ...


>>> பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணை வெளியீடு - அரசாணை எண்: 154, (ப.க.து.) நாள்: 15.11.2021 (Computerization of all School Records and deletion of unwanted records - G.O.Ms. No: 154 (S.E.D.), Dated: 15.11.2021)...



>>> பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் (முதற்கட்டமாக 30 பதிவேடுகள்) மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



Today's (16-08-2022) Wordle Answer...

                                       

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (16-08-2022) Wordle Answer: GRUEL









 

இன்றைய (16-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 16, 2022



மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். எதிர்பார்த்த சில பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அஸ்வினி : தடைகள் குறையும்.


பரணி : அலைச்சல்கள் உண்டாகும். 


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 16, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




கிருத்திகை : கலகலப்பான நாள். 


ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


மிருகசீரிஷம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 16, 2022



முயற்சிகளுக்கு உண்டான பாராட்டும், மதிப்பும் கிடைக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபார பணியில் வேலையாட்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். இணையம் சார்ந்த விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மிருகசீரிஷம் : மதிப்பு கிடைக்கும்.


திருவாதிரை : புரிதல் உண்டாகும். 


புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 16, 2022



தந்தைவழி உறவினர்களின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் இறை நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் சார்ந்த முயற்சிகள் கைகூடும். வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அலைச்சல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




புனர்பூசம் : மேன்மையான நாள்.


பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


ஆயில்யம் : ஆர்வம் பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 16, 2022



எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விலகி சென்றவர்களை பற்றிய நினைவுகள் மேம்படும். செயல்பாடுகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். குழப்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : சேமிப்பு குறையும். 


பூரம் : நினைவுகள் மேம்படும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------






கன்னி

ஆகஸ்ட் 16, 2022



மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். வித்தியாசமான, இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு மறையும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : நம்பிக்கை மேம்படும்.


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.


சித்திரை : குழப்பம் மறையும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 16, 2022



உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தனம் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சூழ்நிலைகளை சமாளித்து சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்கிறீர்கள். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நபர்களின் தன்மையை அறிந்து பொறுப்புகளை கொடுக்கவும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : பிரச்சனைகள் குறையும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : முயற்சிகள் கைகூடும். 

---------------------------------------






விருச்சிகம்

ஆகஸ்ட் 16, 2022



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமயோசித செயல்பாடுகளின் மூலம் சூழ்நிலைகளை கையாளுவீர்கள். சிந்தனையின் போக்கில் தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். சிந்தனைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


அனுஷம் : தெளிவு பிறக்கும்.


கேட்டை : காலதாமதமான நாள்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 16, 2022



மனைவி வழியில் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மூலம் : ஆதாயம் உண்டாகும்.


பூராடம் : முன்னேற்றம் ஏற்படும். 


உத்திராடம் : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 16, 2022



உத்தியோக பணிகளில் மறைமுக ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். எண்ணிய சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கமிஷன் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 16, 2022



உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




அவிட்டம் : புரிதல் உண்டாகும்.


சதயம் : புத்துணர்ச்சியான நாள்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 16, 2022



உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் புதிய அனுபவம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உறவினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


உத்திரட்டாதி : தேடல் அதிகரிக்கும்.


ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.08.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடி செயல் வகை

குறள் : 1027


குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்.


பொருள்:

தன் வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்ய ஆசைப்படுவர் சோம்பி, தம் பெருமையை எண்ணி இருந்தால் எல்லாம் கெட்டுப் போகும். அதனால் அவர்க்குக் கால நேரம் என்று இல்லை.


பழமொழி :

The fearless goes into the assembly.


அச்சம் இல்லாதவர்கள் அரங்கத்தில் ஏறுவார்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள். 


2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன்


பொன்மொழி :


நீங்கள் பெருங்கடலில்

சிறுதுளி அல்ல..

சிறுதுளியில் முழு கடல், கையளவும் கடலளவும் கடமையில் உள்ளது..!


பொது அறிவு :


1.கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது? 


 இந்தியா. 


 2. 50 அடிக்கு மேல் வளரும் புல் இனத்தைச் சேர்ந்த தாவர இனம் எது ? 


 மூங்கில்.



English words & meanings :


Satchel - a small bag. Noun. சிறு புத்தகப் பை. பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு :


தைராய்டு சுரப்பு அதிகமானால் உடல் எடை குறையும். உடல் சோர்வாக இருக்கும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் உடல் எடை அதிகரிக்கும். இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம் உருவாகும்


NMMS Q 42:


ஒரு கடிகாரத்தில் நேரமானது 12 மணி 05 நிமிடமாக காட்டுகிறது. அக்கடிகாரத்தின் முன் கண்ணாடியை பொருத்தும்போது கண்ணாடி பிரதிபலிக்கும் நேரம் என்ன? 


 விடை: 11 மணி 55 நிமிடங்கள்


நீதிக்கதை


கழுதையின் தன்னம்பிக்கை


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. 


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. 


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. 


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. 


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. 


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. 


வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். 


நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.


இன்றைய செய்திகள்


16.08.22


# 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வழக்கம்போல் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


# பொறியியல் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய புதிய பாடத்திட்டம்: அண்ணா பல்கலைக் கழகத்தில் ஓரிரு நாட்களில் அறிமுகம்.


# தமிழகத்தின் தினசரி மொத்த மின் நுகர்வில் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தித்துறை 80% பங்களிப்பு:  இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்.


# சுதந்திர தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களுக்கு 37 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


# இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் ஈஸா ஆகியவை விண்வெளியிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.


# 45 கல்லூரிகள் பங்கேற்கும் பெர்ட்ராம் விளையாட்டு போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது.


# கனடா ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.


# ஐ.எஸ்.எல் கால்பந்து: 5 வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்த ஈஸ்ட் பெங்கால் அணி.


Today's Headlines


# The Minister of School Education has said that the general examination for Class 11 students will be conducted as usual.


 #A new curriculum with internships for engineering students will be introduced at Anna University in a couple of days.


 # 'Renewable energy generation, including wind, solar, and hydropower, contributes 80% to Tamil Nadu's total daily electricity consumption informed by the Head of Wind Power Producers Association of India 


 #The Central Government has ordered 37 new judges to the High Courts across the country on Independence Day.


 # As India celebrates its 75th Independence Day, America's NASA and Europe's ESA have sent greetings from space.


 # The Bertram Games in which 45 colleges were participating started yesterday in Chennai.


 # Canada Open Tennis: Romania's Simona Halep won the women's singles title.


#  ISL Football: East Bengal signed 5 foreign players.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...