கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு (Inauguration of Reading Movement in Schools - Tamil Nadu School Education Department Press Release)...



>>> பள்ளிகளில் வாசிப்பு இயக்க துவக்க விழா - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் செய்திக் குறிப்பு (Inauguration of Reading Movement in Schools - Tamil Nadu School Education Department Press Release)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (34% Dearness Allowance for Govt employees/pensioners - G.O.s will be issued separately soon - Tamil Nadu Government Press Release)...



>>> அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்களுக்கு 34% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப் படி - விரைவில் அரசாணைகள் தனித்தனியே வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு (34% Dearness Allowance for Govt employees/pensioners - G.O.s will be issued separately soon - Tamil Nadu Government Press Release)...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




Today's (17-08-2022) Wordle Answer...

                                        

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (17-08-2022) Wordle Answer: TWICE








 

இன்றைய (17-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


மேஷம்

ஆகஸ்ட் 17, 2022



நண்பர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். கூட்டு வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : சிந்தனைகள் மேம்படும்.


பரணி : சோர்வு உண்டாகும். 


கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 17, 2022



வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். மனதில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.


ரோகிணி : பயணங்கள் கைகூடும்.


மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 17, 2022



மனதில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மிருகசீரிஷம் : கற்பனைகள் உண்டாகும்.


திருவாதிரை : முக்கியத்துவம் அதிகரிக்கும். 


புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 17, 2022



தொழில் கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தேவைகள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும். 


ஆயில்யம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 17, 2022



புதிய முயற்சிகளில் விடாப்பிடியாக செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனை அபிவிருத்திக்கான எண்ணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : முயற்சிகள் மேம்படும்.


பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


உத்திரம் : எண்ணங்கள் கைகூடும். 

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 17, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். துரித உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் பிறக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திரம் : அனுசரித்து செல்லவும்.


அஸ்தம் : கவனத்துடன் செயல்படவும்.


சித்திரை : மாற்றம் பிறக்கும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 17, 2022



வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். இணையம் சார்ந்த வியாபாரத்தில் கவனம் வேண்டும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : புரிதல் உண்டாகும்.


சுவாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------






விருச்சிகம்

ஆகஸ்ட் 17, 2022



இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களை பற்றிய கருத்துக்களில் கவனம் வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : இன்னல்கள் குறையும். 


அனுஷம் : தெளிவான நாள்.


கேட்டை : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





தனுசு

ஆகஸ்ட் 17, 2022



சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். கால்நடை தொடர்பான உதவி கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மூலம் : குழப்பம் நீங்கும். 


பூராடம் : சிந்தித்து செயல்படவும். 


உத்திராடம் : காலதாமதம் உண்டாகும். 

---------------------------------------





மகரம்

ஆகஸ்ட் 17, 2022



வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது உங்களின் மீதான மதிப்பை மேம்படுத்தும். குத்தகை தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். தாமதம் அகலும் நாள்.





அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திராடம் : புரிதல் ஏற்படும்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





கும்பம்

ஆகஸ்ட் 17, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சிறு மற்றும் குறு வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெளியூர் நிமிர்த்தமான வேலைவாய்ப்புகளில் முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




அவிட்டம் : புரிதல் மேம்படும். 


சதயம் :  தேடல் அதிகரிக்கும். 


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------






மீனம்

ஆகஸ்ட் 17, 2022



எதிர்பாராத தனம் சார்ந்த உதவி கிடைக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : உதவி கிடைக்கும்.


உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 


ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2022 - School Morning Prayer Activities...



 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 17.08.2022 - School Morning Prayer Activities...


 திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: உழவு


குறள்: 1031


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.


பொருள்:

பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது


பழமொழி :

Practice yourself what you preach.

நீ போதிப்பதை நீயே பயிற்சி செய்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. நமது பேச்சும் நடத்தையும் நமது வாழ்க்கை வயலில் நாம் விதைக்கும் விதைகள். 


2. நல்ல விதைகள் நல்ல பலனைத் தரும். எனவே நல்ல விதைகளையே விதைப்பேன்


பொன்மொழி :


எதையும் பிரதிபலிக்காமல்

படித்துக் கொண்டே இருப்பது

என்பது.. செரிமானம் இல்லாமல்

சாப்பிட்டுக் கொண்டே

இருப்பதை போன்றது..!


பொது அறிவு :


1.Epigraphy என்பது எதைப் பற்றியது ? 


கல்வெட்டுகள் . 


2.எந்த விலங்கு மிகவும் அதிகமான சத்தம் எழுப்புகிறது ? 


நீலத்திமிங்கலம்.


English words & meanings :


tran·quil·iz·er - a medicine used to reduce tension. Noun. அமைதி படுத்தும் மருந்து. பெயர்ச் சொல்.


ஆரோக்ய வாழ்வு :


ஓட்ஸ், பார்லி மற்றும் ப்ரௌன் அரிசி போன்றவற்றில் வைட்டமின் பி உள்ளது. இவற்றை உணவில் சேர்ப்பதால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி, உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்க உதவும். மேலும் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.


நீதிக்கதை


கடவுளை குழப்பிய பக்தர்


ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். 


அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். 


இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். 


கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார் என்று அந்தச் முனிவர் கூறினார். 


மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார். 


பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கடவுள் கேட்டார். 


தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த முனிவர் சொன்னார், அதான் என்றார் மன்னார்சாமி. 


என்ன வரம் வேண்டும், கேள் என்றார் கடவுள். 


அதான் கேட்டேனே வரம், அதை கொடு என்றார் மன்னார்சாமி. 


இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்..... ! அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும். 


என்ன செய்யலாம்? - கடவுள் யோசித்தார். 


பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன். பெற்றுக் கொள்... போ!


அய்யய்யயோ... நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!


அதான் என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார். 


இதிலிருந்து என்ன தெரிகிறது?


பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்! - எண்ணம் போல் வாழ்வும் கூட, மனதில் நல்லதை நினைப்போம் நல்வழி செல்வோம்.


இன்றைய செய்திகள்


17.08.22


* மின்னணு மற்றும் பணமில்லா பரிவர்த்தனை முறையில் பயணச்சீட்டு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.


* தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* பாடத்திட்ட பாரபட்சம் இல்லாமல் அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் 2 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் தரக் கூடாது என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


* 2022-ம் ஆண்டுக்கான பொறியியல் தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர்  கூறியுள்ளார்.


* உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் ராணுவத்திடம் ஒப்படைப்பு.


* அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்டு; பிபா நடவடிக்கை.


* ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.


Today's Headlines


* Tamilnadu Transport decided to issue tickets by Electronics and money less transaction method. 


* Chennai Metrology Department predicted that there may be heavy rains in 5 districts of TN. 


* Upto 2nd standard the students should not be given any HW regardless of their syllabus.


* The ranking for engineering  was issued for the year 2022 by Higher Education Minister Ponmudi and also he said Special division selection including Sports persons counselling will start from 20th onwards.


* The weapons made inside India itself was handed over to Army.


* The All India Football Federation was suspended by FIFA. 


* For Asian Cup cricket tournament the Afghanistan Team was declared.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - ஒவ்வொரு ஆண்டும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 89, நாள்: 14-07-2022 வெளியீடு (Literary Proficiency Test in Tamil Language - Every year 1500 students will be given financial support at the rate of Rs.1500 per month - G.O. (Ms) No: 89, Dated: 14-07-2022)...


>>> தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு - ஒவ்வொரு ஆண்டும் 1500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 89, நாள்: 14-07-2022 வெளியீடு (Literary Proficiency Test in Tamil Language - Every year 1500 students will be given financial support at the rate of Rs.1500 per month - G.O. (Ms) No: 89, Dated: 14-07-2022)...






தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் (Instructions of the Director of Government Examinations regarding Tamil Language Literary Proficiency Test)...



>>> தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் (Instructions of the Director of Government Examinations regarding Tamil Language Literary Proficiency Test)...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...