கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...



>>> அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...




தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6

ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022


பொருள்‌ : தொடக்கக்‌ கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 - பொது மாறுதல்‌ - பிற துறையில்‌ இருந்து தொடக்கக்‌ கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல்‌ பெற தடையில்லா சான்று பெற்ற ஆசிரியர்களின்‌  விண்ணப்பம்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு.


பார்வை 1. அரசாணை (நிலை) எண்‌.176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌.17.12.2021


2. தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌.06.01.2022


பார்வை 1-ல்‌ காணும்‌ அரசாணையில்‌ 2021 - 2022 -ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்‌ மாறுதல்‌, பணி நிரவல்‌ மற்றும்‌ பதவி உயர்வு சார்பாக பொது மாறுதல்‌ கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு அதனை பின்பற்றி 2021 - 2022 -ஆம்‌ கல்வியாண்டில்‌ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்‌, பதவி உயர்வு , பணிநிரவல்‌ கலந்தாய்வுகள்‌ மற்றும்‌. மனமொத்த மாறுதல்‌ கலந்தாய்வுகள்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (8145) மூலம்‌ நடைபெற்றது.


தற்போது அலகு விட்டு அலகு மாறுதலுக்கு தடையில்லா சான்று பெற்ற பிற துறையிலிருந்து, தொடக்கக்‌ கல்வித்‌ துறைக்கு மாறுதல்‌ பெற விரும்பும்‌ ஆசிரியர்கள்‌, தங்கள்‌ விண்ணப்பங்களை 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ மேற்கொள்ளவும்‌, அதனை அரசாணை (நிலை) எண்‌.176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌:17.12.2021- பத்தி 7( Unit Transfer) -ல்‌ தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ ஆசிரியர்களின்‌ விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள்‌ பிற துறையில்‌ இருந்து பெற்ற அலகு விட்டு அலகு மாறுதல்‌ தடையின்மைச்‌ சான்றை (Upload) செய்து இணைய வழியாக ஏற்பளிக்கவும்‌ தெரிவிக்கப்படுகிறது. ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022(பிற்பகல்‌) அன்று நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


மேற்காண்‌  தகவல்கள்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ மூலம்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்‌ அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு பணிகளை எவ்வித புகாருக்கும்‌ இடமின்றி முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்


பெறுநர்‌

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌.


>>> அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...

எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஆகஸ்ட் நான்காவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - August 4th Week)...

   



>>> எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – ஆகஸ்ட் நான்காவது வாரம் - 2022 (Ennum Ezhuthum Lesson Plan - August 4th Week)...




TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள் (Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login)...



>>> TNSED செயலி வாயிலாக உடற்கல்வி ஆசிரியர்கள் Battery Test மேற்கொள்வதற்கான வழிமுறைகள் (Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login)...


Conduct of Battery Test TNSED App - Physical Education Teacher Login..


உடற்கல்வி ஆசிரியர்கள் TNSED செயலி வாயிலாக Battery Test எவ்வாறு மேற்கொள்வது என்பதற்கான வழிமுறைகள்...


 Work Flow : மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் (DIPEs) தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளிகளில் Battery Test நடத்துவதற்காக இணையவழி mapping செய்வார்கள்...


 இந்த Mapping-கிற்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தங்கள் Teacher ID & Password பயன்படுத்தி TNSED செயலியில் Log In செய்து, அவர்கள் எந்த Map பள்ளிகளுக்கு செய்யப்பட்டுள்ளார்களோ, அந்த பள்ளிகள் மற்றும் பிரிவுகளுக்கு Battery Test நடத்த இயலும்.



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - இணைப்பு I & II (Certificate for Having Studied in Tamil Medium - Annexure - I & II)...



>>> தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - இணைப்பு I & II (Certificate for Having Studied in Tamil Medium - Annexure - I & II)...



>>> தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்தல் -  வழிகாட்டு நெறிமுறைகள் கொண்ட அரசாணை (நிலை) எண்:82, நாள்: 16-08-2021...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 - நேரடி நியமனம் 2020-2021 - 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - TRBன் பத்திரிக்கைச் செய்தி (PGTRB - Teacher's Recruitment Board - Post Graduate Teacher, Director of Physical Education Level-1, Computer Instructor Level-1 - Direct Appointment 2020-2021 - 22.08.2022 to 25.08.2022 5 PM Uploading of proof of Person's Studied in Tamil medium on website - Press Release of TRB)...



>>> PGTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 - நேரடி நியமனம் 2020-2021 - 22.08.2022 முதல் 25.08.2022 பிற்பகல் 5 மணி வரை தமிழ்வழியில் பயின்றமைக்கான சான்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - TRBன் பத்திரிக்கைச் செய்தி (PGTRB - Teacher's Recruitment Board - Post Graduate Teacher, Director of Physical Education Level-1, Computer Instructor Level-1 - Direct Appointment 2020-2021 - 22.08.2022 to 25.08.2022 5 PM Uploading of proof of Person's Studied in Tamil medium on website - Press Release of TRB)...



>>> தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - இணைப்பு I & II...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...




Today's (18-08-2022) Wordle Answer...

                                         

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (18-08-2022) Wordle Answer: TWANG








 

இன்றைய (18-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஆகஸ்ட் 18, 2022



உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் அமையும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அஸ்வினி : பொறுமையுடன் செயல்படவும்.


பரணி : எண்ணங்கள் மேம்படும். 


கிருத்திகை : வாய்ப்புகள் அமையும். 

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 18, 2022



வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




கிருத்திகை : புரிதல் உண்டாகும்.


ரோகிணி : வித்தியாசமான நாள். 


மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 18, 2022



வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்பும், அறிமுகமும் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


திருவாதிரை : நெருக்கடிகள் குறையும். 


புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 18, 2022



தாய்வழி உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் நீங்கி சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு உண்டாகும். அரசு சார்ந்த உதவி சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். கவலைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 


பூசம் : விருப்பம் நிறைவேறும். 


ஆயில்யம் : சாதகமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 18, 2022



தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




மகம் : முன்னேற்றம் உண்டாகும்.


பூரம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 18, 2022



குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அனுபவம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : நிதானத்துடன் செயல்படவும்.


அஸ்தம் : அலைச்சல்கள் உண்டாகும். 


சித்திரை : பொறுமை வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 18, 2022



கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சுவாதி : காரியசித்தி உண்டாகும்.


விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 18, 2022



வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சில பணிகளை செய்து முடிப்பதில் வேகத்தைவிட விவேகம் அவசியம். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


அனுஷம் : விவேகம் வேண்டும். 


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 18, 2022



புதிய பொருட்களை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




மூலம் : எண்ணங்கள் ஈடேறும். 


பூராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : பொறுப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 18, 2022



வாடிக்கையாளர்களின் அறிமுகமும், ஆதரவும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பிரபலமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அவிட்டம் : தெளிவு ஏற்படும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 18, 2022



எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்




அவிட்டம் : நன்மை ஏற்படும்.


சதயம் : துரிதம் உண்டாகும்.


பூரட்டாதி : மந்தமான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 18, 2022



வாக்கு சாதுர்யத்தின் மூலம் இழுபறியான சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவு கிடைக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




பூரட்டாதி : இழுபறிகள் அகலும்.


உத்திரட்டாதி : தனவரவு கிடைக்கும்.


ரேவதி : மேன்மையான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

  கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools &am...