கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய சிறுகதை - பொறுப்பு (Today's Short Story - Responsibility)...



இன்றைய சிறுகதை - பொறுப்பு (Today's Short Story - Responsibility)...


ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர். 


குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம். 


யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது. 


ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள். 


மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். 


ஆறுமாதம் சென்றது. 


குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள். 


""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள். 


""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள். 


"ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள். 


""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள். 


ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள். 


""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன். 


நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள். 


பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள். 


அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்.




2023-2024ஆம் ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரித்தல் சார்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் / நிதித் துறைச் செயலாளரின் கடிதம் (BUDGET 2023-2024 – Preparation and Submission of Number Statement in the IFHRMS – Instructions issued - Regarding Letter from Additional Chief Secretary / Finance Secretary) Letter No. 35640/BG-I/ 2022-1, dated 18th August 2022...



>>> 2023-2024ஆம் ஆண்டிற்கான எண் பட்டியல் தயாரித்தல் சார்ந்து கூடுதல் தலைமைச் செயலாளர் / நிதித் துறைச் செயலாளரின் கடிதம் (BUDGET 2023-2024 – Preparation and Submission of Number Statement in the IFHRMS – Instructions issued - Regarding Letter from Additional Chief Secretary / Finance Secretary) Letter No. 35640/BG-I/ 2022-1, dated 18th August 2022...


Annexure I Number Statement 

Annexure II (a) Standard Scales of Pay 

Annexure II (b) Special Time Scales of Pay 

Annexure II (d) U.G.C. Scales of Pay 

Annexure II (e) AICTE Scales of Pay (Technical Universities, Government and  Government Aided Engineering Colleges)

Annexure II (f) AICTE Scales of Pay (Government and Government Aided  Polytechnic Colleges) 

Annexure III (a) Statement of House Rent Allowance 

Annexure III (b) Statement of House Rent Allowance – Rent  Free Quarters 

Annexure III (c) Statement of City Compensatory Allowance 

Annexure III (e) Medical Allowance 

Annexure III (f) Bonus out of Other Allowances 





தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Maintenance, Safety and Precautionary Measures in Primary / Middle Schools – Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 11249/ ஜே2/ 2020, நாள்: 17-08-2022...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Maintenance, Safety and Precautionary Measures in Primary / Middle Schools – Proceedings of Director of Elementary Education) ந.க.எண்: 11249/ ஜே2/ 2020, நாள்: 17-08-2022...





பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர் கையேடு 2022-2023 (School Management Committee Member's Handbook 2022-2023)...



>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) உறுப்பினர் கையேடு 2022-2023 (School Management Committee Member's Handbook 2022-2023)...


Print எடுக்க வசதியாக பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, பக்கங்கள் மாறியுள்ளன என குழப்பமடைய வேண்டாம்.


A4 அளவு தாளில் முன்பின் (Front and Back) Print எடுத்து, நடுவில் Pin செய்தால் 24 பக்கங்கள் கொண்ட புத்தகமாக கிடைக்கும்.






பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை, நாள்: 07-02-2018 - வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...



>>> பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு - அரசாணை (நிலை) எண் : 17, பள்ளிக்கல்வித் துறை,  நாள்: 07-02-2018 -  வெளியீடு (Accident Insurance for School Students - G.O. (Ms) No : 17, Department of School Education, Dated: 07-02-2018 - Issued)...




https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

பள்ளிக்‌ கல்வி - அரசு/ அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


பள்ளிக்‌ கல்வித்‌ ப௧5(2) துறை,  அரசாணை (நிலை) எண்‌. 17 நாள்‌: 07.02.2018. (திருவள்ளுவராண்டு 2049 தை 25)


படிக்கப்பட்டவை:-

பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கடித ந.க.எண்‌.019344/எம்‌/இ2/2017, நாள்‌ 08.05.2017.


ஆணை:

மேலே படிக்கப்பட்ட கடிதத்தில்‌, 2016-17ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கட்டுப்பாட்டின் கீழ்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 37,201 அரசுப்‌ பள்ளிகளும்‌ மற்றும்‌ தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ என மொத்தம்‌ 8,402 அரசு உதவி பெறும்‌ பள்ளிகளும்‌, ஆக மொத்தம்‌ 45,603 பள்ளிகள்‌ செயல்படுகின்றன எனவும்‌, மேற்படி அரசுப்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை 55,73,217 மாணாக்கர்களும்‌, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில் ‌29,51,084 மாணாக்கர்களும்‌ பயின்று வருகின்றனர்‌ எனவும்‌, தமிழகத்தில்‌ உள்ள பள்ளி மாணவர்கள்‌ தரமான கல்வி பயில்வதற்கும்‌, மாணவர்களின்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்களை உறுதிப்படுத்திடவும்‌ தமிழக அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது எனவும்‌, பள்ளி மாணவர்கள்‌ வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும்‌ போதும்,‌ பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பச்‌ செல்லும்‌ போதும்‌, உரிய பாதுகாப்புடன்‌ சென்றுவரும்‌ பொருட்டு, பள்ளிக்‌ கல்வி இயக்ககத்திலிருந்து அவ்வப்போது அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலகங்களுக்கும்‌ சுற்றறிக்கைகள்‌ அனுப்பப்பட்டு வருகின்றன எனவும்‌, இருப்பினும்‌ இடைப்பட்ட பள்ளி நேரத்தில்‌ கீழ்க்காணும்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு பலத்த காயங்கள்‌ அல்லது உயிர்‌ சேதம்‌ ஏற்படுகிறது எனவும்‌ தெரிவித்துள்ளார்‌ :-


💥 மாணவர்கள்‌ பள்ளிக்கு வந்து செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 கல்விச்‌ சுற்றுலா செல்லும்‌ போது ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥  நாட்டு நலப்பணித்‌ திட்டம்‌, தேசிய மாணவர்‌ படை, ஜுனியர்‌ ரெட்‌ கிராஸ்‌, பாரத சாரண / சாரணிய இயக்கம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ மன்றங்கள்‌ மூலமாக நடைபெறும்‌ முகாம்‌ மற்றும்‌ பேரணிகளில்‌ கலந்து கொள்ளும்‌ போது ஏற்படும்‌ விபத்து.


💥 விளையாட்டு போட்டிகளில்‌ கலந்து கொள்ளும்போது ஏற்படும்‌ விபத்து.


💥 மின்கசிவு மற்றும்‌ ஆய்வகங்களில்‌ ஏற்படும்‌ விபத்து.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

💥 விஷஜந்துக்களால்‌ ஏற்படும்‌ விபத்து.


💥 மாணவர்கள்‌ விடுமுறை நாள்களில்‌ வெளியே செல்லும்‌ போது நீர்நிலைகளால்‌ ஏற்படும்‌ விபத்து போன்றவை.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) மேற்காணும்‌ சூழ்நிலையில்‌ தவிர்க்க முடியாமல்‌ மாணவ / மாணவியருக்கு விபத்துகள்‌ ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது எனவும்‌, இதனால்‌ குழந்தையை இழந்து பெற்றோர்கள்‌ மிகவும்‌ வேதனை அடைகின்றனர்‌ எனவும்‌, எனவே குழந்தையை இழந்து வாழும்‌ குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டியது அவசியமாகிறது எனவும்‌, இத்தகைய நிகழ்வுகளின்‌ போது பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களுக்கும்‌ அல்லது உயிர்சேதம்‌ ஏற்படின்‌ அவர்களின்‌ குடும்பத்திற்கும்‌ உதவித்‌ தொகை வழங்குவது அவர்களுக்கு மிகவும்‌ பயனுள்ளதாக அமையுமென்பதால்‌, விபத்தில்‌ காயம்‌ அடையும்‌ அல்லது மரணமடையும்‌ பள்ளி மாணவர்களுக்கு பின்வருமாறு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து மாணவ / மாணவியர்களின்‌ பெற்றோர்களுக்கும்‌ / பாதுகாவலர்களுக்கும்‌ அரசிடம்‌ பெற்று பள்ளிக்‌ கல்வி துறையின்‌ மூலம்‌ நிவாரணம்‌ வழங்கிட ஆணை வழங்குமாறு பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌:-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

வ.                   விபத்தின்‌ தன்மை           இழப்பீடு

எண்‌


1)  விபத்தில்‌ மரணமடைந்த மாணவர்களுக்கு ரூ.1,00,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

2) விபத்தில்‌ பலத்த காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு  ரூ.50,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3) விபத்தில்‌ சிறிய காயம்‌ அடைந்த மாணவர்களுக்கு ரூ.25,000/-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

3. பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ கருத்துருவினை அரசு கவனமுடன்‌ பரிசீலனை செய்து அதனை ஏற்று, அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ இறந்தாலோ அல்லது பலத்த காயங்கள்‌ ஏற்பட்டாலோ பாதிப்பு அடையும்‌ மாணவ / மாணவியர்களின்‌ குடும்பத்தினருக்கு நிவாரணத்‌ தொகை நிர்ணயம்‌ செய்து உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு கீழ்க்கண்டவாறு நிவாரணத்‌ தொகை வழங்கலாம்‌ என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது :-

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


(I) அரசு / அரசு நிதியுதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ எதிர்பாராத விபத்துக்களினால்‌ மரணம்‌ அடைந்தால்‌ ரூ.1,00,000/-ம்‌ (ரூபாய்‌ ஒரு இலட்சம்‌ மட்டும்‌), பலத்த காயமடைந்தால்‌ ரூ.50,000/-ம்‌ (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌ மற்றும்‌ சிறிய காயம்‌ அடைந்தால்‌ ரூ.25,000/-ம்‌ (ரூபாய்‌ இருபத்தைந்தாயிரம்‌ மட்டும்‌) என உயிரிழந்த / காயம்‌ அடைந்த மாணவர்களுடைய பெற்றோர்கள்‌ / பாதுகாவலர்களுக்கு நிவாரணத்‌ தொகை பள்ளிக்‌ கல்வித்‌ துறை மூலம்‌ வழங்கப்பட வேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html

॥) மாணவ / மாணவியர்களுக்கு, பள்ளிகளிலும்‌ / பள்ளி செல்லும்‌ போதும்‌ / சுற்றுலா செல்லும்‌ போதும்‌ / பள்ளியின்‌ செயல்பாடுகளின்‌ போதும்‌ / எதிர்பாராத விதமாக, விபத்துக்களினால்‌ மரணம்‌ / காயம்‌ ஏற்பட்டால்‌ நிவாரணம்‌ வழங்கப்‌ படவேண்டும்‌.

https://kalvianjal.blogspot.com/2022/08/17-07-02-2018-accident-insurance-for.html


எண்ணும் எழுத்தும் திட்டம் - ஐயங்களுக்கான விளக்கங்கள் (Ennum Ezhuthum Scheme - Explanations for Doubts)...



>>> எண்ணும் எழுத்தும் திட்டம் - ஐயங்களுக்கான விளக்கங்கள் (Ennum Ezhuthum Scheme - Explanations for Doubts)...






TNSED Schools App ( TN - EMIS - CELL ) Updated - Version 0.0.38 (Updated on 18-08-2022) - Health & Well-being Module Added...

 



>>> TNSED Schools App ( TN - EMIS - CELL ) Updated -  Version 0.0.38 (Updated on 18-08-2022) - Health & Well-being Module Added...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...