கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Do not conduct any events like special class, examination etc. for students on 30-11-2024 - Government of Tamil Nadu



Do not conduct any events like special class, examination etc. for students on 30-11-2024 - Government of Tamil Nadu


 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ.30) விடுமுறை 


மாணவர்களுக்கு 30-11-2024 அன்று சிறப்பு வகுப்பு, தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் - தமிழ்நாடு அரசு


All Schools & Colleges will be closed for holiday on 30th Nov 2024 (Sat) due to heavy 🌧️ to very heavy rain expected on the Districts of #Chennai, #Chengalpattu, #Kanchipuram & #Tiruvallur


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை! 


🔹மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, தேர்வுகளோ நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தல்


 🔹ஐடி நிறுவனங்கள் நாளை (30.11.2024) தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்துமாறும் அறிவுறுத்தல்


 🔹ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது, ECR மற்றும் OMR ஆகிய இடங்களில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் நாளை (30.11.2024) பிற்பகலில் தற்காலிகமாக நிறுத்தப்படும்


- தமிழ்நாடு அரசு



Press Release No: 2080
Press Release
Date: 29.11.2024

Cyclone Fengal Advisory

The Cyclone "Fengal" is expected to make its landfall on 30.11.2024 with wind speed ranging from 60 to 90 km/h and Chennai, Thiruvallur, Kanchipuram, Chengalpattu, Cuddalore,Villupuram, Kallakurichi and Mayiladuthurai districts may experience heavy rains and gusty winds. As a precautionary measure:

Holiday for Educational Institutions
□ All schools and colleges in Chennai, Thiruvallur, Kanchipuram and Chengalpattu
districts will remain closed. It is also instructed that no special classes or examinations be conducted for students. District Collectors of other districts for which heavy rainfall alert has been issued shall take a decision on declaring holiday to schools and colleges as per the situation prevailing.

Work-from-Home Advisory for IT Companies
□ IT companies are requested to allow their employees to work from home on 30.11.2024.

Temporary Suspension of Public Transport
□ Public transport services on the East Coast Road (ECR) and Old Mahabalipuram Road
(OMR) will be temporarily suspended in the afternoon on 30.11.2024 as the cyclone
makes landfall.

Public Safety Advisory
□ Due to the likelihood of heavy rain and strong winds during the cyclone's landfall on 30.11.2024, the public are strictly advised to stay indoors unless absolutely necessary.Tamil Nadu State Disaster Management Authority urges the general public to avoid visiting beaches, amusement parks and attending recreational events. The general public are requested to cooperate fully with the disaster prevention measures taken by the Government of Tamil Nadu.

Issued By: - DIPR, Secretariat, Chennai -9


கனமழை விடுமுறை அறிவிப்பு - 30.11.2024

 

கனமழை காரணமாக 30-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 30-11-2024 due to heavy rain) விவரம்...


 கனமழை விடுமுறை அறிவிப்பு - 30.11.2024


⭕ இராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி)

⭕ செங்கல்பட்டு  ( பள்ளி,  கல்லூரி)

⭕ மயிலாடுதுறை  ( பள்ளி,  கல்லூரி )

⭕ சென்னை  ( பள்ளி,  கல்லூரி )

⭕ திருவள்ளூர்  ( பள்ளி,  கல்லூரி )

⭕ காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி )

⭕ கள்ளக்குறிச்சி ( பள்ளி,  கல்லூரி )

⭕ விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி )

⭕ கடலூர் ( பள்ளி,  கல்லூரி )


⭕ புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி,  கல்லூரி )




திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (30.11.24) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எவ்விதமான சிறப்பு வகுப்புகளும் நடத்த அனுமதி இல்லை.


மாவட்ட ஆட்சியர் 

திருவள்ளூர்.



LO/CBT Answer key தொடர்பான தகவல்

 

 

  

LO/CBT Answer key தொடர்பான தகவல்


LO/CBT

Answer key Regarding:


Answer keys are not uploaded yet..

We will upload and inform.


From state assessment team..


கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு தொடர்பான விடைக்குறிப்பு:


விடைக்குறிப்புகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை..


பதிவேற்றம் செய்து தெரிவிப்போம்.


- - மாநில மதிப்பீட்டுக் குழு

Tamilnadu Chief Minister's Talent Search Examination - January 2025 - Application Form


தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு TNCMTSE - ஜனவரி 2025 - விண்ணப்ப படிவம்


Tamilnadu Chief Minister's Talent Search Examination - January 2025 - Application Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024

 

கனமழை காரணமாக 29-11-2024 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools & Colleges on 29-11-2024 due to heavy rain) விவரம்...


கனமழை விடுமுறை அறிவிப்பு - 29.11.2024 


⭕ சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும் )


⭕ செங்கல்பட்டு ( பள்ளிகளுக்கு மட்டும் )


⭕ விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி )


⭕ கடலூர் ( பள்ளி,  கல்லூரி )


⭕ புதுச்சேரி , காரைக்கால் ( பள்ளி,  கல்லூரி )




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-11-2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: புல்லறிவாண்மை

குறள் எண்: 844

வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

பொருள்:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், 'யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே' மதித்துக் கொள்ளும் செருக்காகும்.


பழமொழி :
சிப்பியிலே விழுந்த மழைத்துளி முத்தாகும். அதுபோல , நல்லவர்ககுச் செய்த உதவி நிலை நிற்கும்.

A raindrop that falls on an oyster shell will become a pearl, so a benefit conferred on the virtuous will endure.


இரண்டொழுக்க பண்புகள் : 

  * நான் குளிர்காலங்களில் குளிர்காப்பு ஆடைகளை அணிவேன்.                      

  *நான் கொதிக்க வைத்து ஆற வைத்த குடிநீரையே குடிப்பேன்.


பொன்மொழி :

உடல்நலத்தை பாதுகாப்பது போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்- ஜவஹர்லால் நேரு


பொது அறிவு :

1. ரங்கசாமி கப் எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

விடை : ஹாக்கி.

 
2.கூடைப்பந்து விளையாட்டில் ஒர் அணியில் ஆடுவோர் எண்ணிக்கை எத்தனை?

விடை: 5


English words & meanings :

Jolly   -    மகிழ்ச்சியான

Excitement     -    உற்சாகம்


வேளாண்மையும் வாழ்வும் :

பரிந்துரைக்கப்பட்ட பயனுள்ள பூச்சிகளில், மைன்யூட் பைரேட் பக்ஸ் பிக் ஐட் பக்ஸ் மற்றும் குறைந்த அளவில் (பறந்து விடக் கூடிய) லேடி பக்ஸ் ஆகியவையாகும். இவை அனைத்துமே பல வகையான பூச்சிகளைத் தின்னக் கூடியவை.


நீதிக்கதை

நல்லதும், கெட்டதும்

ஒரு சீடன் தன் குருவிடம்,

"நல்லதை படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளார். அதனால் நல்லதை மட்டும் ஏற்பதை போல் கெட்டதையும்  ஏற்றால் என்ன?" என்று கேட்டார். 

அதற்கு குரு சிரித்துக்கொண்டே, "அது அவரவர் விருப்பம்" என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட்ட உணவை பார்த்து அதிர்ந்து விட்டான். ஒரு கிண்ணத்தில் பாலும்,மறு கிண்ணத்தில் பசுமாட்டுச் சாணமும் வைக்கப்பட்டு, சீடனிடம் உணவருந்த கொடுக்கப்பட்டது.

குரு புன்முறுவலுடன் சீடனிடம்,

"பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடமிருந்து தானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக் கொள்வது போல் சாணத்தையும் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? " என்று கேட்டார். சீடன் விழித்தான். குரு தொடர்ந்தார்.

"பால் போன்ற நல்லவை  நாம் மகிழ்வாய் வாழ,அதனை அப்படியே ஏற்கலாம். சாணத்தை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல்  கெட்டதை விலக்கி  புதைத்து அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை ஏற்க வேண்டும்" என்றார்.


இன்றைய செய்திகள்

29.11.2024

* புதுச்சேரிக்கு 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.

* 3 ஆண்டுகளில் 1.69 லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்.

* தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடம் மாற்றம் செய்து உள்துறை செயலர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

* அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட கலாம் 4 ஏவுகணை நீர்மூழ்கியில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

* தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு.

* சர்வதேச பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, லக்சயா சென் வெற்றி.

* ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.


Today's Headlines

* Puducherry was on a 'red alert' for 2 days, and precautionary measures intensified.

* 1.69 lakh free agricultural power connections in 3 years: Minister Senthil Balaji is proud of this achievement.

* Home Secretary Dheeraj Kumar has ordered the transfer of 5 IPS officers in Tamil Nadu.

* Kalam 4 missile, capable of carrying out nuclear weapons, was successfully tested from a submarine.

* Earthquake in Tajikistan; recorded at 4.6 on the Richter scale.

* International badminton: Sindhu and Lakshya Sen win in the first round.

* Junior Asia Cup hockey: India won a huge victory by defeating Thailand.



Prepared by

Covai women ICT_போதிமரம்


For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked




 40,000 ரூபாய்க்கு OLA ஸ்கூட்டர் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு


For Rs 40,000 OLA Scooter - Rs 499 can be booked


ரூ.40,000த்துக்கு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்து ஓலா எலக்ட்ரிக் - ரூ.499 முன்பதிவு செய்யலாம் என அறிவித்ததால் எகிறும் பங்கு விலை


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதி காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


மின்சார வாகன தயாரிப்பு முக்கிய நிறுவனமாக திகழும் ஓலா எலக்ட்ரிக் ரூ.40,000த்துக்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் பங்கு விலை இன்றைய வர்த்தகத்தில் 15 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளன. நவம்பர் 27ம் தேதியான இன்று காலை பங்கு விலை ரூ. 83.35 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.


ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் Gig மற்றும் S1 Z ரேஞ்ச் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. மிக குறைந்த விலை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளதால பங்கு விலை உயர்ந்துள்ளது. அதாவது மின்சார வாகனங்களின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் நிலையில், வெறும் ரூ.40,000க்கு மின்சார வாகனத்தை ஓலா எலக்ட்ரிக் வெளியிட உள்ளது.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் பங்கு விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வை அடுத்து ஐபிஓ வெளியிட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் வர்த்தகமாகி வருகிறது.


நவம்பர் 26ம் தேதி அன்று ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி ஓலா கிக், ஓலா கிக்+, ஓலா எஸ்1 இசட் மற்றும் ஓலா எஸ்1 இசட்+ ஆகியவற்றை முறையே ரூ.39,999, ரூ.49,999, ரூ.59,999 மற்றும் ரூ.64,999 விலையில் இருக்கும் என தெரிவித்தது. இது எஸ்க் ஷோரூம் விலையாகும்.


இந்த குறைந்த விலை புதிய மாடல் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு 2025ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.


ஓலா எலக்ட்ரிக் நவம்பர் 26 முதல் கிக் மற்றும் S1 Z சீரிஸ் ஸ்கூட்டரை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. புதிய ஸ்கூட்டர்களின் நீடித்த, நம்பக தன்மை, மலிவு விலை, பிரச்னைகளுக்கான தீர்வு, அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி வசதி என பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிராமப்புற, நகர்ப்புற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் வணிக பயன்பாட்டு அதிகளவில் பயன்படும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஓலா கிக் மற்றும் ஓலா எஸ்1 இசட் சீரிஸின் டெலிவரிகள் முறையே ஏப்ரல் 2025 மற்றும் மே 2025 இல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...