பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வின்போது, மின்தடையை சமாளிக்கும்
வகையில், "ஜெனரேட்டர்' பயன்படுத்த, அரசு உத்தரவிட்டது. இதன்படி, 136
மையங்களில், 42 நாட்களுக்கு பயன்படுத்தப்பட்டு, தினமும் தலா, 1000 ரூபாய்
வாடகை நிர்ணயிக்கப்பட்டது. "ஜெனரேட்டர்' வாடகையாக, 57 லட்சத்து 12
ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், நான்கு மாதமாகியும் வழங்காமல்,
கல்வித்துறை இழுத்தடிக்கிறது. "ஜெனரேட்டர்' உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,
""மூன்று பள்ளிகளில், வாடகைக்கு வைத்தேன். நான்கு மாதமாக, பள்ளி, மாவட்ட
கல்வி அலுவலகத்திற்கு அலைகிறேன். பணம் தான் கிடைக்கவில்லை,''
என்றார்.முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ""முறையான "பில்'
கொடுக்காததால், தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, கலெக்டர் தலைமையில்
ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பணம் கொடுக்க, நடவடிக்கை
எடுக்கப்படும்,'' என்றார்.