கேள்வித்தாள், விடைத்தாள் நகல்களை, நுழைவுத் தேர்வு எழுதிய டாக்டருக்கு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மானாமதுரை, அரசு மருத்துவமனையில்,
பல் மருத்துவராக, டாக்டர் செல்வஜோதி ரஞ்சிதம், பணியாற்றி வருகிறார்.
முதுகலைப் படிப்புக்கு (எம்.டி.எஸ்.,) விண்ணப்பித்தார். மார்ச்சில்,
நுழைவுத் தேர்வு எழுதினார். மொத்த மதிப்பெண், 90; செல்வஜோதி பெற்ற
மதிப்பெண், 59.75; கேள்விக்கான விடைகளில், தவறு இருப்பதைக்
கண்டுபிடித்தார்.
இதையடுத்து, கேள்வித்தாள், "கீ&' விடைத்தாள் மற்றும் தனது
விடைத்தாள் நகல்களை வழங்குமாறு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு மனு
அனுப்பினார். எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் டாக்டர் செல்வஜோதி தாக்கல் செய்த
மனுவில், "கேள்வித்தாள், விடைத்தாளை வழங்க மறுக்கும், விளக்க
குறிப்பேட்டில் உள்ள பிரிவை ரத்து செய்ய வேண்டும். நகல்களை வழங்க உத்தரவிட
வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில்,
மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜு, "தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி,
கேள்வித்தாள், விடைத்தாளை பெற உரிமை உள்ளது" என்றார்.
அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, "ஏற்கனவே,
தேர்வுக்குழு தடை உத்தரவு பெற்றுள்ளதால், தகவலை அளிக்க முடியாத நிலை
உள்ளது" என்றார்.
மனுவை விசாரித்த, நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு:
கேள்வித்தாள், விடைத்தாளை பெறுவதற்கு, விளக்கக் குறிப்பேட்டில் உள்ள
பிரிவு, தடுக்க முடியுமா? என்ற பிரச்னைக்கு, இந்த வழக்கில், தீர்வு காணப்பட
வேண்டும். சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனம் தொடுத்த வழக்கில், சுப்ரீம்
கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்தத் தீர்ப்பைப் பொருத்திப் பார்த்தால், விளக்கக் குறிப்பேட்டின்
அடிப்படையில் மனுதாரருக்கு கேள்வித் தாள் மற்றும் விடைத் தாளை மறுக்க,
தேர்வுக் குழுவுக்கு உரிமையில்லை. விடைத் தாள் திருத்தப்பட்டு,
முடிவுகளும், அறிவிக்கப்பட்டு விட்டது. எழுத்துத் தேர்வின் முடிவு
வெளியிடும் வரை தான், தடை பொருந்தும்.
எனவே, மனுதாரர் கோரியுள்ள கேள்வித்தாள், விடைத்தாள் மற்றும் "கீ&'
விடைத் தாள்களை, 2 வாரங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி
என்.பால்வசந்தகுமார் உத்தரவிட்டு உள்ளார்.